தன்னை புகழ்ந்து தள்ளிய, சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஸ்டாலின் சொன்ன நச் பதில்!
Recommended Video
சென்னை: தேர்தலில் பாஜகவை, திமுக வீழ்த்திவிட்டதாக பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், கூறியதற்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
திமுக முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் இல்ல திருமண விழாவில் இன்று, கலந்துகொண்டு பேசிய சி.பி.ராதாகிருஷ்ணன், ஸ்டாலின் பற்றி கூறிய கருத்துதான் இன்றைய அரசியலின் பேசு பொருள்.
ராதாகிருஷ்ணன் பேசுகையில், ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிவிட்டார். அடுத்த தமிழக பாஜக தலைவராகும் வாய்ப்பு உள்ள தலைவர்களில் ஒருவர் சி.பி.ராதாகிருஷ்ணன். அவரே இப்படி பேசியது முக்கியத்துவம் பெறுகிறது.

உழைப்பாளி
ராதாகிருஷ்ணன், பேசுகையில், வெற்றித்தளபதி என்றும், அவரது உழைப்பு தன்னை போன்ற பலரை இன்னும் உழைக்க வேண்டும் என உணரச்செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், உழைப்பின் முலம் ஸ்டாலின் தங்களை வீழ்த்தி விட்டதாகவும் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.

சலசலப்பு
அரசியலில் எதிரெதிர் துருவங்களாக பாஜகவும்-திமுகவும் உள்ள நிலையில், திடீரென ஸ்டாலினை சி.பி.ராதாகிருஷ்ணன் வாழ்த்தி பேசியது அனைத்து கட்சிகளிலுமே, அரசியல் ரீதியான சலசலப்புகளுக்கு காரணமாகியுள்ளது.

ஸ்டாலின் பேச்சு
இதே நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலினும் பங்கேற்று பின்னர் பேசினார். அப்போது அவர் ராதாகிருஷ்ணனுக்கு பதிலளிக்கும் வகையில் கருத்து தெரிவித்தார். அவர் கூறியதை பாருங்கள்: நம்முடைய, பாஜகவின் முன்னணி தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பேசும்போது, மனம் திறந்து பேசியுள்ளார். அவர்களை வீழ்த்திவிட்டோம் என்று சொன்னார். நான் அதை கொஞ்சம் திருத்திச் சொல்கிறேன். நாங்கள் வீழ்த்தவில்லை, தோற்கடித்துள்ளோம். நாங்கள் என்றுகூட சொல்லவிரும்பவில்லை, மக்கள் தோற்கடித்துள்ளனர். இவ்வாறு ஸ்டாலின் கூறியதும், திருமண வீட்டுக்கு வந்தவர்கள் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.

ஜெயக்குமார் குற்றச்சாட்டு
மத்திய அரசுக்கு எதிராக ஸ்டாலின் மென்மையான போக்கை கடைபிடிக்க தொடங்கியுள்ளார் என தமிழக அமைச்சர் ஜெயக்குமார் இன்று விமர்சனம் செய்து ஒரு பேட்டியளித்திருந்தார். இந்த நிலையில், நாங்கள் வீழ்த்தவில்லை, தோற்கடித்தோம், அதுவும் மக்கள்தான் தோற்கடித்தார்களே தவிர, திமுக தோற்கடித்ததாக சொல்ல முடியாது என ஸ்டாலின் கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
-
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி











Click it and Unblock the Notifications