அத்தை கனிமொழி ஜெயிச்சுட்டாங்க..ஸ்டாலின் எடுத்த மிகப்பெரிய முடிவு! கடும் அப்செட்டில் உதயநிதி ஸ்டாலின்
சென்னை: 2026 சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு திமுகவை மறுசீரமைக்கும் பணிகள் தொடங்கி இருக்கின்றன. குறிப்பாக திமுகவில் அதிரடி மாற்றமாக மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை 77ல் இருந்து 110ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதில் கிட்டத்தட்ட 33 மாவட்ட செயலாளர்களை இளைஞர் அணியிலிருந்து நியமிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்த நிலையில், தேர்தல் நடத்தி தான் மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என்ற கனிமொழியின் கோரிக்கையை ஏற்க பட்டு இருக்கிறது. இதனால் கடும் அப்செட்டில் உள்ளாராம் உதயநிதி.
2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது. தமிழகத்தை அதிக முறை ஆண்ட கட்சியான அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. குறிப்பாக ஆளுங்கட்சியாக இருந்த திமுக எதிர்க் கட்சியானது.

அதிர்ச்சி தரும் விதமாக திமுகவின் தலைவரான ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரிலேயே போட்டியிட்டு தோல்வியடைந்தார். 33 அமைச்சர்களில் பாதிக்கும் மேல் தோல்வியை சந்தித்தனர். குறிப்பாக பொதுச் செயலாளர் துரைமுருகன், அன்பில் மகேஷ், மா.சுப்ரமணியன் உள்ளிட்டோர் தோற்றது பெரும் நெருக்கடியை திமுகவுக்கு ஏற்படுத்தியது.
திமுக மறுசீரமைப்பு
தோல்விக்கு பிறகு அதற்கான காரணங்களை ஆராய, திமுக குழு அமைத்த நிலையில், கட்சியை மறுசீரமைக்க சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டது. தமிழக முழுவதும் கருத்துக்கள் கேட்கப்பட்ட நிலையில் மாவட்ட செயலாளர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. பல மாவட்ட செயலாளர்கள் குறுநில மன்னர்கள் போல செயல்படுவதாகவும், அவர்களால் தான் பல தொகுதிகளில் தோல்வியை சந்திக்க நேரிட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இதை அடுத்து தீவிரமாக ஆராய்ந்த திமுக தலைவர் ஸ்டாலின் கட்சியில் மறுசீமைப்பு தேவை என்பதை உணர்ந்து அதற்கு செயல் வடிவம் கொடுத்திருக்கிறார்.
மாவட்ட செயலாளர்கள்
குறிப்பாக திமுக மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த திட்டமிடப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னர் ஒரு மாவட்டம் ஒரு மாவட்ட செயலாளர்களின் கையில் இருந்த நிலையில் பின்பு அது இரண்டாக பிரிக்கப்பட்டது. தற்போது மறுசீரமைப்பு குழுவின் அறிக்கையின்படி மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது. அதாவது 77 இல் இருந்து 110 ஆக மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர் .
முக ஸ்டாலின்
சோளிங்கர் தவித்து பெரும்பாலான மாவட்டங்கள் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன. சோளிங்கர் மட்டும் அதிக மக்கள் வசிக்கும் பகுதி என்பதால் அது ஒரே மாவட்டமாக செயல்படும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இதை அடுத்து திமுகவுக்குள் மாவட்ட செயலாளர் பதவியை பிடிக்க கடும் போட்டி உருவாகியுள்ளது.
கனிமொழி
ஏற்கனவே இதுக்கு முன்னாள்அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் தங்கள் பதவியை காப்பாற்றிக் கொள்ளவும் சிலர் புதிதாக பதவியை பெறவும் காய்களை நகர்த்தி வருகின்றனர். இந்த நிலையில் தான் திமுகவில் இரண்டு அணிகள் மறைமுகமாக செயல்பட்டு வருவது கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரிய வந்தது. அதாவது கனிமொழி தரப்பும் உதயநிதி ஸ்டாலின் தரப்பும் மாவட்ட செயலாளர் பதவியை கைப்பற்ற தீவிரமாக காய் நகர்த்தி வந்தனர்.
உதயநிதி ஸ்டாலின்
தற்போது அதில் கனிமொழி வெற்றி பெற்று இருக்கிறார் என்கின்றனர். அதாவது 77 இல் இருந்து 110 ஆக மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அதில் 33 பேரை இளைஞர் அணி யில் இருந்து நியமிக்க வேண்டும் என்பது உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை. அதே நேரத்தில் கட்சியில் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்றால் தேர்தல் நடத்தி மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்ய வேண்டுமென கனிமொழி வலியுறுத்தினார்.
உட்கட்சி தேர்தல்
இந்த நிலையில் மாவட்டங்கள் பிரிப்பு தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் உட்கட்சி தேர்தல் வாயிலாகவே மாவட்டச் செயலாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவித்துள்ளார். கடைசியாக வைகோ திமுகவில் இருந்தபோதுதான் திமுக மாவட்ட செயலாளர் தேர்தல் நடத்தப்பட்டது. அதற்கு பின் கடந்தண்டு வரை பேச்சுவார்த்தை மூலமே மாவட்ட செயலாளர் நியமனம் நடைபெற்றுக் கொண்டது. தற்போது கட்சியை பலப்படுத்த வேண்டும், தொண்டர்களிடம் செல்வாக்கு இருக்கும் நிர்வாகிகள் மட்டுமே மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட வேண்டும் என்பதால் தேர்தல் நடத்த ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு கனிமொழியின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனால் உதயநிதி ஸ்டாலின் கடும் அப்செட்டில் இருக்கிறார் என்றும் சொல்கின்றனர் உடன்பிறப்புகள்.


Click it and Unblock the Notifications
