Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக ஆட்சி சிறப்பாக இருக்கிறது... உன்னத நோக்கத்துடன் செயல்படுகிறது.. எஸ்வி சேகர் பாராட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை : திமுக ஆட்சி சிறப்பாக இருக்கிறது. நோய் தொற்றில் இருந்து தமிழக மக்களை விடுவிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் செயல்படும் அரசை டெய்லி காலையில் எழுந்து விமர்சனம் பண்றதுங்கிறது வெற்று அரசியலாக நான் பார்க்கிறேன் என நடிகர் எஸ்வி சேகர் தெரிவித்தார்.

Recommended Video

    Sivaji Ganesan Remembered | Sivaji Ganesan Son Ram Kumar Speech | Oneindia Tamil

    நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு நாளையொட்டி அவருக்காக கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு பலரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

    நடிகர் எஸ்வி சேகரும் சிவாஜி கணேசனின் சிலைக்கு அஞ்சலி செலுத்தினார். அத்துடன் சிவாஜியின் குடும்பத்தினரை சந்தித்து பேசினார்.

    தேசியவாதி

    தேசியவாதி

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்வி சேகர், நடிகர் திகம் சிவாஜி கணேசனின் நினைவு தினம் இன்று. இன்று தான் அவருடைய நண்பரான என் தந்தையினுடைய நினைவு தினமும். சிவாஜி அவர்கள் நடிகராக மட்டுமல்ல. தேசியவாதியாகவும் இந்தியாவின் மேல் பற்று கொண்டவராக திகழ்ந்தார். இந்தியாவிற்கும் சீனாவிற்குமான போரெல்லாம் வந்த போதெல்லாம் ஏகப்பட்ட நிதி கலெக்ட் பண்ணி கொடுத்தவர். தேசியவாதி என்ற உணர்வில் இருந்து அவர் நகர்ந்ததே கிடையாது.

    மகிழ்ச்சி

    மகிழ்ச்சி

    தேசியவாதி சிவாஜி கணேசன். அவருடைய மணிமண்டபத்தில் வந்து அஞ்சலி செலுத்துவதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன். ராம்குமார் சொன்னார் நான் தனியாக வந்துட்டு போயிடுவேன்னு.. ஆனால் சிவாஜி என்பவர் தனி ஆள் இல்லை,.. அவர் ஒரு இயக்கம். அப்படிப்பட்ட ஒரு இயக்கத்தில் நானும் பங்கு பெறுவதை நினைத்து சந்தோஷப்படுகிறேன்.

    கொரோனா ஒழிப்பு

    கொரோனா ஒழிப்பு

    திமுக ஆட்சி சிறப்பாக இருக்கிறது. எந்த விமர்சனத்தையும் 100 நாள் வரை வைக்க வேண்டாம் என்று நாங்கள் எல்லாம் இருக்கோம். காரணம் என்னன்னா , எந்த ஒரு அரசும் அவர்கள் செயல்பாடுகளை தொடங்குவார்கள். ஆனால் முக ஸ்டாலின் தலைமையிலான அரசு, கொரோனாவை ஒழிப்பதிலேயே முழு தீவிரமும் காட்டியதால் , மற்ற டிபார்ட்மெண்ட் மேல் 100 சதவீதம் கவனம் செலுத்த முடியாது. யாருக்குமே, ஒரே சமயத்துல ஒரு வேலை தான் பண்ண முடியும்.

    உன்னத நோக்கம்

    உன்னத நோக்கம்

    இன்றைக்கு நோய் தொற்றில் இருந்து தமிழக மக்களை விடுவிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் செயல்படும் அரசை டெய்லி காலையில் எழுந்து விமர்சனம் பண்றதுங்கிறது வெற்று அரசியலாக நான் பார்க்கிறேன். அதனால் இதை இப்ப செய்ய வேண்டிய அவசியம் இல்லை" இவ்வாறு எஸ்வி சேகர் தெரிவித்தார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+