இந்தாங்க ஆதாரம்.. இப்ப சொல்லுங்க.. காப்பி அடிச்சது யாரு.. கமலுக்கு திமுக பதிலடி
கமல்ஹாசனுக்கு திமுக தொண்டர்கள் இணையத்தில் பதிலடி தந்துள்ளனர்.
Recommended Video

சென்னை: யாரை பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்டீங்க? நாங்களா காப்பி அடிக்கிறோம் என்று கமலுக்கு எதிராக திமுகவினர் இணையத்தில் களம் இறங்கி வருகிறார்கள்!
சென்னையில் பேசிய மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், "கடந்த 25 ஆண்டுகளாக கிராமசபை அமைப்பு உள்ளது. இத்தனை ஆண்டுகளாக ஒன்றும் செய்யாமல் என்னைப் பாா்த்து கிராமசபைக் கூட்டங்களை நடத்துகிறீர்களே உங்களுக்கு வெட்கமாக இல்லையா? என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கேள்வி எழுப்பி இருந்தார்.
ஸ்டாலின், கமல் இருவரும் கால காலமாக நிலவி வந்த நட்பு, அரசியல் நாகரீகம், என்பதையெல்லாம் தாண்டி, இப்போது வெறுப்பையும், எதிர்ப்பையும் உமிழ தொடங்கி உள்ளது தமிழக மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

விமர்சனங்கள்
"ஆளுக்கு ஒரு கட்சியில் இருந்தாலும், ரெண்டு பேரும் நல்லாதானே உறவா இருக்காங்க" என்று தான் மக்கள் நினைத்து கொண்டிருந்தார்கள். இந்நிலையில், திடீரென கமலும், ஸ்டாலினும் ஒருவர் மீது ஒருவர் விமர்சனங்களை அள்ளி வீச தொடங்கி உள்ளனர். இதற்கான பதிலடிகளை தர இரு தரப்பு தொண்டர்களுமே தயாராகி விட்டனர்.

திமுக பதிலடி
குறிப்பாக, கமலுக்கு எதிரான பதிவுகள் இணையத்தில் வலம் வருகின்றன. கிராம சபையை கமல் துவக்குவதற்கு முன்பே, அதாவது கமல் அரசியலுக்கு வருவதற்கு முன்பே ஸ்டாலின் அதனை தமிழகத்தில் நடத்தி வந்திருக்கிறார் என்று திமுகவினர் பதிலடி தந்து வருகின்றனர். இதற்காக 2015-ல் ஸ்டாலின் கலந்து கொண்ட கிராம சபை கூட்ட போட்டோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

உளறல் நாயகன்
"உளறல் நாயகன் கமலஹாசன் கவனத்துக்கு" என்ற தலைப்பில் இந்த போட்டோக்கள் இடம் பெற்றுள்ளன. இதில் ஸ்டாலின் நடத்திய கிராம சபை கூட்டத்தின் தேதி, மாவட்டம், என விலாவரியாக தெரிவித்துள்ளனர் திமுக விசுவாசிகள்.

ஸ்மார்ட் லுக்
ஒவ்வொரு போட்டோவிலும் ஸ்டாலின் டி-ஷர்ட், பேன்ட் என கலக்குகிறார்.ஒன்றில், வெறும் தரையில் பெட்ஷீட் போட்டு ஸ்டாலின் உட்கார்ந்திருக்கிறார், இன்னொன்றில் குடிசை வீட்டுக்கு முன்புறம் மற்றும் மரத்தடி ஒன்றிலும் சேர் போட்டு உட்கார்ந்து மக்களுடன் பேசுகிறார், மற்றொன்றில் கிராம மக்கள் கூட்டத்தினருடன் அமர்ந்திருக்கிறார். இவை எல்லாமே கிராம சபையில் எடுக்கப்பட்ட போட்டோக்கள் என்றாலும் ஸ்டாலின் ஸ்மார்ட் லுக்காக இருக்கிறார்.

வைரல் போட்டோக்கள்
கமலுக்கு பதிலடி தருவதற்காக பதிவிடப்பட்டுள்ள இந்த போட்டோக்கள்தான் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஆனால் 2015-ல் நடத்திய கிராம சபை கூட்டத்தை இடையில் நடத்தாமல் இப்போது 2019-ல் நடத்துவது ஏன் என்றுதான் நமக்கு புரியவில்லை.
-
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications