"பேசுவோம்".. ஸ்டாலின் சொன்ன சூப்பர் சஸ்பென்ஸ்.. அப்படீன்னா "அவரும்" வந்துருவாரோ.. செம பரபரப்பு!

மய்யத்துடன் கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தலைவர் முக ஸ்டாலின் ஏதாவது ஒரு சஸ்பென்ஸை தினம்தோறும் வைத்து, தொண்டர்களை திணறடித்து வருகிறார்.. இப்போது கூட கூட்டணி தொடர்பாக ஒரு சஸ்பென்ஸ் வைத்துள்ளார்..!

நேற்று திமுக தலைவர் ஒரு டிவி சேனலுக்கு பேட்டி தந்திருக்கிறார்.. ஒயிட் & ஒயிட் டிரஸ்ஸில் வழக்கம்போல ஸ்மார்ட் லுக்குடன் அதில் காணப்படுகிறார் ஸ்டாலின்.. ஒரு புல்வெளியில் சேரில் உட்கார்ந்து கொண்டு படுகேஷூவலாக அந்த பேட்டியை தந்துள்ளார்.

அந்த பேட்டியில் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன.. அதற்கு சீரியஸான பதில்களை ஸ்டாலின் சொன்னாலும், ஆங்காங்கே சுவாரஸ்யத்துடன் பதிலையும் சொல்லி அசர வைத்துள்ளார்.

கூட்டணி

கூட்டணி

ஸ்டாலின் அப்போது சொல்லும்போது, "சசிகலா வருகையால், அதிமுகவுக்கு ஆபத்து இருக்கலாம், திமுகவுக்கு எந்த பிரச்னையும் கிடையாது... திமுக - காங்கிரஸ் கூட்டணி உடைய வேண்டும் என்பது, பாஜக முருகனின் ஆசை.. ஆனால், உடையாது.

 மய்யம்

மய்யம்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகே, மக்கள் நீதி மையம் கூட்டணிக்கு வருவது குறித்து பேச வேண்டும். மக்கள் நீதி மையம் வந்தால் பார்ப்போம்.. பேசுவோம்... கூட்டணி கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் நிற்கிறோம் என்றால், அதில், நாங்கள் குறுக்கிட மாட்டோம்... உதயசூரியன் சின்னத்தில் நில்லுங்கள் என யாரையும் கட்டாயப்படுத்த மாட்டோம். அது அவர்களின் விருப்பத்தை பொறுத்தது" என்றார்.

 கமல்ஹாசன்

கமல்ஹாசன்

இதில் கமல் விஷயம்தான் அனைவருக்கும் ஆச்சரியத்தை தந்துவிட்டது.. அநேகமாக கூட்டணி கிட்டத்தட்ட முடிந்து விட்டதுபோலவும், தொகுதி ஒதுக்கீடு, சீட் ஒதுக்கீடுகள் கூட ஓரளவு பேசப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்தன.. ஆனால், கமலுக்காக ஸ்டாலின் காத்திருப்பது இப்போதுதான் தெரியவந்துள்ளது. இந்த முறை அதிமுகவை திணறடிக்க, கமல் அல்லது பாமகவை உள்ளே கொண்டு வரலாம் என்று ஒரு பேச்சு முன்பு இருந்தது.

 மெஜாரிட்டி

மெஜாரிட்டி

ஆனால், டாக்டர் ராமதாஸின் பிடிவாதத்தை பார்த்து திமுக தரப்பில் பாமகவிடம் நெருங்கவில்லை போலும்.. அதனால்தான் கமலை சுற்றியே கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக, அமமுக நாளைக்கு ஒன்றாகிவிட்டால், திமுகவுக்குதான் மெஜாரிட்டி பாதிக்கும்.. மேலும் கமல் தனியாக நின்றாலும் திமுகவுக்குதான் ஓட்டுக்கள் பிரியும் என்பதால், மய்யத்தை அப்படியே தட்டி தூக்கி கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சியில் படுதீவிரமாக உள்ளது போலும்..

 கூட்டணி

கூட்டணி

அப்படி கமல் உள்ளே வந்தால், கூட்டணிகளுக்கு சீட் ஒதுக்கீடு இன்னும் குறையும் என்றே தெரிகிறது.. ஏற்கனவே திருமா, வைகோ, காங்கிரஸ் என பலரும் அதிருப்தியில் உள்ளபோது, கமலுக்கு எவ்வளவு தருவார்கள்? மற்றவர்களுக்கு எவ்வளவு சீட் குறையும் என்பதெல்லாம் எதிர்பார்ப்புக்குரிய ஒன்றுதான்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+