சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எல்லாத்தையும் "அவங்க" வந்து பார்த்துப்பாங்க.. நாம அலட்டிக்கவே வேண்டாம்.. ஸ்டாலின் குஷி!

சசிகலாவின் வருகை குறித்து ஸ்டாலின் கருத்து கூறியுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: சசிகலாவின் வருகை ஸ்டாலின் சொன்ன அந்த கருத்துதான், திமுகவுக்கு தெம்பை தந்து வருகிறது.. குறிப்பாக தென் மாவட்டங்களில் திமுகவின் வாக்கு இந்த முறை தேர்தலில் அதிகரிக்கும் என்றும் கணக்கு போடப்பட்டு வருகிறது.

சசிகலாவின் வருகையால் தமிழக அரசியலே பரபரப்பாக உள்ளது.. அநேகமாக அதிமுக - அமமுகவை ஒரே குடையின்கீழ் கொண்டு வரும் முயற்சியில் சசிகலா ஈடுபடலாம் என்கிறார்கள்.

MK Stalin says about Sasikalas re entry

அப்படி இல்லாவிட்டால், அமமுக தனியாக தேர்தலை சந்திப்பதாக வைத்து கொண்டாலும், எடப்பாடியாருக்கு சிக்கல் எழும்.. காரணம், கொங்கு மண்டலத்தை மொத்தமாக வலுப்படுத்தி கையில் வைத்துள்ளார் எடப்பாடியார்.. இந்த மண்டலம்தான் அவருக்கு இம்முறையும் கைதூக்கி விடும் என்று மலைபோல நம்பி கொண்டிருக்கிறார்..

சசிகலா அரசியலுக்குள் நுழைந்தால் இந்த மண்டலத்தின் செல்வாக்கும் எடப்பாடியாருக்கு சரிந்துவிடும் என்று தெரிகிறது... அதேபோல, தென்மாவட்டங்களில் அமமுகவே தலைதூக்கும்.. மொத்த வாக்குகளும் அதாவது சமுதாய வாக்குகள் பெரும்பாலும் தினகரன், சசிகலாவுக்கு வந்து சேரும்.. இதனால் அதிமுகவின் வாக்கு வங்கி அடிவாங்கும்.. இது திமுகவுக்கு பெரிய பிளஸ்ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், முக ஸ்டாலினிடம் தென்மாவட்ட எம்எல்ஏ ஒருவர், அதிமுக ஆட்சி மேல் மக்களுக்கு ஒருவித அதிருப்தி இருக்கிறது, இப்படியே 3 மாசம் நீடித்தால், நமக்குதான் எல்லா தொகுதியிலும் வெற்றி" என்றாராம்.. அதற்கு ஸ்டாலின், "எல்லாத்தையும் சசிகலா பார்த்துப்பாங்க... அவங்களால் அதிமுக வாக்குகளும் பிரிய வாய்ப்புள்ளது.

ஏற்கனவே அந்த கட்சியில் குழப்பம் இருக்கிறதால, இனி அது மேலும் அதிகமாகலாம்.,. இவ்வளவு காலம் ஸ்டாலின் Vs எடப்பாடின்னு பிரச்சாரம் இருந்தது.. இனி சசிகலா Vs எடப்பாடின்னு மாறிடும்.. அதனால, தென் மாவட்டங்களில் இறங்கி ஆட்களை வேலை பார்க்க சொல்லுங்க.. பூத் கமிட்டிகளை பலப்படுத்துங்க." என்றாராம்.. ஸ்டாலினின் இந்த பேச்சு பூஸ்ட் தந்தது போல இருக்கிறதாம் உடன்பிறப்புகளுக்கு..!

English summary
MK Stalin says about Sasikalas re entry
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X