உதயநிதிக்கு வாய்ப்புதானே கொடுத்தோம்.. எம்எல்ஏ பதவியையா தூக்கி கொடுத்தோம்?.. மு.க.ஸ்டாலின்
சென்னை: தேர்தலில் போட்டியிட மக்களிடம் செல்வாக்கு இருப்பதால் மட்டுமே உதயநிதிக்கு வழங்கினோம், நாங்கள் எம்எல்ஏ பதவியை அவருக்கு கொடுத்துவிடவில்லை என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நேற்று (13.03.2021) மாலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்தியா டுடே கருத்தரங்கு நிகழ்ச்சியில் (India Today Conclave South 2021) பங்கேற்று சிறப்புரையாற்றியதுடன், அங்கு எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
இதன் பின்னர், இந்தியா டுடே சார்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு கழகத் தலைவர் அவர்கள் பதிலளித்தார். அதன் விவரம் வருமாறு:

நாடாளுமன்றத் தேர்தல்
கேள்வி: வெற்றி குறித்து மிகவும் நம்பிக்கையோடு இருக்கிறீர்கள். அ.தி.மு.க தரப்பில் முதலமைச்சர் பழனிசாமியும் இதே நம்பிக்கையுடன் இருக்கிறார். எதன் அடிப்படையில் இந்த அளவு நம்பிக்கையுடன் பேசுகிறீர்கள்?
கழகத் தலைவர்: நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே அதை நாங்கள் நிரூபித்துவிட்டோம். அதற்குப் பிறகு நடந்திருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் அதை நிரூபித்துக் காட்டியிருக்கிறோம். அதுமட்டுமில்லாமல் மக்களிடத்தில் நாங்கள் பிரச்சாரத்திற்கு செல்லும் போது, மக்களைச் சந்திக்கும் போது, மக்களிடத்தில் காணப்படும் எழுச்சி - வரவேற்பு அத்தனையும் நிச்சயமாக - நான் 200 இடங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன் - தி.மு.க கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை எனக்குத் தந்திருக்கிறது.

தடைகள்
கேள்வி: நீங்கள் இந்த பிரச்சாரம் செய்யும்போது உங்களுக்கு ஏதாவது தடைகள் வருகிறதா? என்னென்ன சவால்கள் இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? நீங்கள் அடுத்த முதலமைச்சர் ஆவதற்கு என்னென்ன சவால்கள் இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?
கழகத் தலைவர்: நான் அந்த தடைகளை பற்றி சிந்தித்துப் பார்க்கவில்லை. ஆனால் திட்டமிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க. வரக்கூடாது என்ற நிலையை விட, தி.மு.க. வரக்கூடாது என்று ஒரு கூட்டம் சதித்திட்டம் போட்டு, அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அது நிச்சயமாக நடக்காது. இந்த தேர்தலை பொறுத்தவரையில் தி.மு.க. அமோக வெற்றி பெறும்.

ஸ்டாலின் பதில்
கேள்வி: தி.மு.க வாரிசு அரசியலையும், குடும்ப ஆட்சியையும் முன்னெடுப்பதாக கான்க்லேவுக்கு வந்திருந்த அதிமுகவைச் சேர்ந்த பலரும் குற்றம் சாட்டினார்கள். உங்கள் மகன் உதயநிதி கூட இப்போது அரசியலில் இருக்கிறார். இதற்கு உங்கள் பதில் என்ன?
கழகத் தலைவர்: யாரும் வந்து எம்.எல்.ஏ. பதவியை இந்தா நீ தான் எம்.எல்.ஏ. என்று தூக்கி கொடுத்து விடவில்லை. மக்களிடத்தில் நின்று மக்களின் ஆதரவைப் பெற்று, அதற்குப் பிறகுதான் எம்.எல்.ஏ. ஆக முடியும். இதே போல தான் நான் அரசியலில் நுழைந்த போது, நான் மேயராக நியமிக்கப்படவில்லை. மக்களிடம் சென்று வாக்கு வாங்கித்தான் அந்தப் பதவிக்கு வரவேண்டும் என்று நான் மேயர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றேன். எனவே மக்களிடத்தில் செல்வாக்கு இருந்தால் தான் யாராக இருந்தாலும் அரசியலில் வர முடியுமே தவிர யாரும் திணித்து விட முடியாது. அந்த நிலையை தி.மு.க. என்றைக்கும் எடுக்காது.

3 விஷயங்கள் என்ன
கேள்வி: 3 விஷயங்கள் தமிழ் நாட்டிற்காக உடனடியாக செய்வேன், ஒன்று சொல்லிவிட்டீர்கள், ஊழல் வழக்குகள் எல்லாம் நாங்கள் விசாரிப்போம். அதற்கு தனி நீதிமன்றம் வைப்போம் என்று சொல்லிவிட்டீர்கள். அதனைத்தவிர வேறு 2 விஷயங்கள் என்ன செய்வீர்கள்?
கழகத் தலைவர்: இன்றைக்கு பெட்ரோல் - டீசல் விலையால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதை மாநில அரசின் மூலமாக எந்த அளவிற்கு குறைக்க முடியுமோ அதை குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவோம். தேர்தல் அறிக்கையில் நாங்கள் இதைக் குறிப்பிட்டுக்காட்டி இருக்கிறோம். அதேபோல வேலைவாய்ப்பு, இதுபோன்ற மக்களுடைய அடிப்படை பிரச்சினைகளைக்குரிய நிலையை நிச்சயமாக நாங்கள் ஏற்படுத்தித் தருவோம்.

ஜெயலலிதா
கேள்வி: கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இல்லாத முதல் தேர்தல் இது. புதிய வரிசை, புதிய தலைமை. கலைஞர் இல்லாமல் கட்சியை முன்னெடுத்துச் செல்வதில் நீங்கள் சந்திக்கும் சிக்கல்கள் என்ன?
கழகத் தலைவர்: கருணாநிதி இல்லாவிட்டாலும் அவர் எங்களுக்கு கற்றுக் கொடுத்த பாடம் எங்களுக்கு மனதில் இருக்கிறது. கலைஞருடைய அந்தப் பயிற்சி எங்களுக்கு இருக்கிறது. அந்த பயிற்சியை வைத்துக்கொண்டு நாங்கள் கட்சியை நடத்துகிறோம். ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் பதிலளித்தார்.
-
தென் மண்டலத்திற்கு திமுக பக்கா ஸ்கெட்ச்.. களமிறங்கிய ஓ.பன்னீர்செல்வம்.. பிரச்சாரத்தை தொடங்கினார் -
Velmurugan's TVK: எதே! 10 சீட்டா? வேல்முருகனின் "பிளானால்" அதிர்ந்த திமுக! கடைசியில் சொன்னது என்ன? -
அதிமுகவை சமுதாய கட்சியாக மாற்றியவர் எடப்பாடி பழனிசாமி.. தென் மாவட்டங்களில் ஆட்டத்தை தொடங்கிய ஓபிஎஸ்! -
பெரிய கேள்வியே இதுதான்.. ஓபிஎஸ்ஸுக்கு ஸ்டாலின் கொடுத்த பெரிய அசைன்மென்ட்.. களமே மாறப்போகுது! -
18-ஆ? 25-ஆ காங்கிரஸுக்கு? அப்ப அதிமுக 210, திமுக 200 சீட்? சென்னை டூ கன்னியாகுமரி வரை திடீர் சேஞ்ச்? -
ரஞ்சனா நாச்சியார் ஒயிட் பேப்பர் காட்டி விஜய்யை அலற விட்டாரே? ராமநாதபுரம் திமுகவுக்கு அதிர்ஷ்டம்தான் -
Aadhav Arjuna: ”பிழைக்கவும் ரஜினி, பழிக்கவும் ரஜினி” ஆதவ் அர்ஜுனா பேச்சால் கொந்தளித்த ரஜினி ரசிகர்கள்! -
6க்கு கீழ் குறைய கூடாது.. 5க்கு மேல் கொடுக்க முடியாது.. சிபிஎம், சிபிஐ-யிடம் கறார் காட்டும் திமுக! -
ஆள் பார்த்து போடுங்க.. இப்பவே உள்ளடி வேலை கையை மீறி போகுதே.. ஸ்டாலினுக்கு இதெல்லாம் தெரியுமா? -
வருகிறார் மாஸ்டர்மைண்ட்.. டெல்லி களமிறக்கும் ஐபிஎஸ்.. சரியாக தமிழக தேர்தல் நேரத்தில் பயங்கர பிளான்! -
Dindigul: திண்டுக்கல் தொகுதியில் யாருக்கு வாய்ப்பு? திமுகவில் ஆர்வம் காட்டும் புதுமுகங்கள்! -
அடேங்கப்பா.. இது லிஸ்டுலேயே இல்லையே.. ஸ்டாலின் எடுத்த முடிவு.. மிக முக்கிய எம்எல்ஏவிற்கு நோ சீட்?












Click it and Unblock the Notifications