அண்ணாவின் ஆட்சியை மூன்று மாதங்களில் அமைப்போம் என்கிறார் மு.க ஸ்டாலின்

மொழி இனம் நாடு காக்கும் உரிமை உணர்வு கொண்ட #அண்ணாவின் ஆட்சியை மூன்று மாதங்களில் அமைப்போம்! உறுதியேற்கிறோம் இன்று! திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் ஆட்சியை மூன்று மாதங்களில் அமைக்க உறுதியேற்போம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் திமுக தலைவர் மு.க ஸ்டாலின். அண்ணாவின் நினைவு தினமான இன்று அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு உறுதியேற்றுள்ளார் மு.க ஸ்டாலின்.

சி.என்.எ. என்ற மூன்று எழுத்தால் அறிமுகமான அண்ணாதான் தமிழ்நாட்டு அரசியலில் உருவான முதல் தளபதி. பெரியாரின் சீடராக வலம் வந்த போது அப்படிதான் அழைக்கப்பட்டார். அதன் பிறகு எல்லோருக்கும் அவர் அண்ணாதான்.

MK Stalin says we will form Annas regime in three months

பெரியாரின் சீடராக, பெரியாரின் தளபதியாக இருந்த அண்ணா ஒரு கட்டத்தில் பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அவரை விட்டு பிரிந்து "திராவிட முனேற்ற கழகம்" என்ற தனி கட்சி கண்டார். இருந்த போதிலும் பெரியாரை என் வாழ்க்கையில் நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் என்று மகுடம் சூட்டி தலைவர் நாற்காலியை அவருக்காக ஒதுக்கி வைத்தார்.

சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் என்ற பெயர்ப்பலகை வைக்கப்பட்டது. தமிழக அரசின் இலச்சினையான கோபுரச் சின்னத்தில் இருந்த 'கவர்ன்மென்ட் ஆஃப் மெட்ராஸ்' என்ற வாக்கியம் நீக்கப்பட்டு, 'தமிழக அரசு' என்று மாற்றப்பட்டது. அந்தச் சின்னத்தில் இடம்பெற்றிருந்த 'சத்யமேவ ஜயதே' என்ற வடமொழி வாக்கியம், 'வாய்மையே வெல்லும்' என்று தமிழில் மாறியது.

கட்சி தொடங்கப்பட்டது முதல் என்னென்ன கோரிக்கைகளை எல்லாம் திமுக வலியுறுத்திவந்ததோ, அவற்றையெல்லாம் தனது முதல் ஆட்சிக் காலத்திலேயே நிறைவேற்ற முயன்றது அண்ணாவின் கட்சி. 'ஆகாஷ்வாணி' என்ற வார்த்தைக்குப் பதிலாக வானொலி என்ற வார்த்தையைப் பயன்படுத்த உத்தரவிடப்பட்டது.

படி அரிசித் திட்டம் திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறாத வாய்மொழி வாக்குறுதிதான் என்றாலும், 15.5.1967-ல் படி அரிசித் திட்டத்தை அமலுக்குக் கொண்டுவந்தார் அண்ணா. 27.6.1967ல் 'மெட்ராஸ் ஸ்டேட்' என்ற பெயரை மாற்றி, அன்னைத் தமிழகத்துக்கு 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டியது அண்ணாவின் அரசு.

வாழும்போதும் சரித்திர நாயனாக வாழ்ந்த அண்ணா தன் இறப்பிலும் ஒரு சாதனையை படைத்தவர். அண்ணாவின் இறுதி அஞ்சலியின் போது திரண்ட கூட்டம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற கூட்டம். 1806 ம் ஆண்டு மறைந்த பிரிட்டன் துணைத் தளபதி நெல்சன், 1970 ம் ஆண்டு மறைந்த எகிப்து ஜனாதிபதி கமால் அப்துல் நாசர் ஆகியோருக்கு கூடிய கூட்டத்தை அடுத்து அதிகம் கூடியது அண்ணாவுக்குத்தான் என்கிறது உலக சாதனை புத்தகமான " கின்னஸ் ".

அண்ணாவின் 52வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் அவரது ஆட்சியை மீண்டும் அமைப்போம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.

தந்தை பெரியாரின் தனயன் -முத்தமிழறிஞர் கலைஞரின், தாய்த்தமிழ்நாட்டின் அண்ணன் - பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் நினைவுநாள் இன்று! அவரை மறந்தால் அல்லவா நினைப்பதற்கு? மொழி - இனம் - நாடு காக்கும் உரிமை உணர்வு கொண்ட #அண்ணா-வின் ஆட்சியை மூன்று மாதங்களில் அமைப்போம்! உறுதியேற்கிறோம் இன்று! பதிவிட்டுள்ளார் ஸ்டாலின்.

அதிமுகவினர் அம்மா ஆட்சியை மூன்றாவது முறையாக அமைப்போம் என்று கூறி வாக்கு கேட்கும் நிலையில் அண்ணாவின் ஆட்சியை அமைப்போம் என்று கூறியுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+