“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "கோட் போட்டு வந்தாரு, டிபன் எடுத்து வந்தாரு, வாட்ச் கட்டிட்டு வந்தாரு, செஸ் விளையாடுனாரு, பட்டு வேட்டி சட்டைல வந்தாரு.. இதெல்லாம்தான் சோசியல் மீடியால வருது. ஆனால் நாட்டில் நிறைய அக்கிரமங்கள் நடக்கின்றன" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

திமுக மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமியின் பேரனும், திமுக அயலக அணித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வீராசாமியின் மகனுமான திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அதனைத் தொடர்ந்து அவர் உரையாற்றினார்.

MK Stalin Slams Vijay Coat Watch Chess on Social Media Atrocities in Reality

மு.க.ஸ்டாலின் பேசுகையில், "ஒரு மாநிலக் கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் இருந்து கொண்டிருக்கிறது. ஒரு தேர்தல் தோல்விக்கே இன்றைக்குப் பல கட்சிகள் காணாமல் போய்விடுகிறது.

ஆனா, 75 ஆண்டுகாலம் கொண்ட கொள்கைக்காக, லட்சியத்திற்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கக்கூடிய கட்சி.. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காகப் பாடுபடக்கூடிய கட்சி திராவிட முன்னேற்றக் கழகம். அந்த திராவிட முன்னேற்றக் கழகத்தில்தான் இன்றைக்கு இணைத்துக் கொண்டு, இன்றைக்கு எத்தனையோ பேர் இன்றைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

நம்முடைய ஆட்சியைப் பற்றி, இன்றைக்கு இருக்கக்கூடிய ஆட்சியைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், ஒன்றை மட்டும் நான் சொல்ல விரும்புகிறேன். சோசியல் மீடியா இன்றைக்கு எந்த அளவுக்குப் பரவிக் கொண்டிருக்கிறது என்பது உங்கள் எல்லாருக்கும் தெரியும். அந்த சோசியல் மீடியா ஒரு வாரம் ஒரு வகையில்தான், நாளடைவில் அதெல்லாம் மறைந்து போகத்தான் போகிறது.

இன்றைக்குச் சோசியல் மீடியாக்களைப் பார்க்கிறபோது, ஒரு காலத்தில் நாம் பழக்கத்தைச் பார்த்தோம். கோட் போட்டுக்கொண்டு வந்தாரு, டிஃபன் எடுத்து வந்தாரு, வாட்ச் கட்டியிருந்தாரு, செஸ் விளையாடினாரு-இன்றைக்குக் கோட் போடல, பட்டுச் சட்டை வேட்டி கட்டிக்கொண்டு வந்தாரு... இதெல்லாம் இன்றைக்குச் செய்திகளாக வந்து கொண்டிருக்கிறது. அவையெல்லாம் மறைந்து, நாட்டில் நடைபெறக்கூடிய அக்கிரமங்கள் எல்லாம் இன்றைக்குச் செய்திகளாக வந்து கொண்டிருக்கிறது.

நான் வேண்டுகொள்வதெல்லாம், இன்றைக்குத் தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருக்கக்கூடியவரைப் பார்த்து நான் கேட்பதெல்லாம், தயவுசெய்து இன்றைக்கு உங்களைப் பற்றி, உங்கள் ஆட்சியைப் பற்றி வரக்கூடிய செய்திகளைப் படியுங்கள். படித்து, அதில் இருக்கும் உண்மைகளைக் கண்டுபிடியுங்கள். அதன்பேரில் நடவடிக்கை எடுங்கள் என்பதுதான் என் அன்பான வேண்டுகோள்" எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+