அமெரிக்காவின் முதல் தமிழ் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு மு.க.ஸ்டாலின், சோனியா, ராகுல் காந்தி வாழ்த்து
சென்னை: அமெரிக்காவின் முதல் தமிழ் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வென்றுள்ளார். தமிழ்நாட்டின் மன்னார்குடியை தாய்வழி பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் துணை அதிபராகிறார்.
அமெரிக்காவின் முதலாவது பெண் துணை அதிபர்; முதலாவது கறுப்பின துணை அதிபர், முதலாவது தமிழ் துணை அதிபர் என்ற பெருமைக்குரியவராகிறார் கமலா ஹாரிஸ்.

ஜோ பிடனுக்கு வாழ்த்து
கமலா ஹாரிஸின் வெற்றிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தமது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது: அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் அவர்களுக்கும் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் அவர்களுக்கும் வாழ்த்துகள்!

தமிழ் பாரம்பரிய பெண்
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த அமெரிக்கத் தேர்தலில் தமிழ்ப் பாரம்பரியத்தைச் சேர்ந்த பெண் ஒருவரைத் தங்களது துணை அதிபராக அமெரிக்க மக்கள் தேர்ந்தெடுத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சோனியா வாழ்த்து
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தமது வாழ்த்து செய்தியில், ஜோ பிடன், கமலா ஹாரிஸ் தலைமையில் உலக நாடுகளுக்கும் நமது பிராந்தியத்தின் அமைதி, வளர்ச்சி மேம்பட நெருக்கமான உறவை இந்தியா எதிர்பார்க்கிறது என அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

ராகுல் ட்வீட்
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ஜோ பிடனுக்கும் கமலா ஹாரிஸுக்கும் தனித்தனியே ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ், முதலாவது பெண் துணை அதிபராவது பெருமைக்குரியது என வாழ்த்தியுள்ளார் ராகுல் காந்தி.

டிடிவி தினகரன் வாழ்த்து
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமது வாழ்த்து செய்தியில், அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த திருமதி. கமலா ஹாரிஸ் அவர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள். வரது பூர்வீகமான திருவாரூர் மாவட்டம்,மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்திற்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அவரது செயல்பாடுகள் அமையட்டும் என கூறியுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications