பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டிஆர் பாலு என்று கேட்டு கருணாநிதி மகிழ்ச்சியடைவார் - ஸ்டாலின்
திமுகவின் பொதுச்செயலாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். பொருளாளராக டி.ஆர் பாலு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இந்த செய்தியை மறைந்த தலைவர் கருணாநிதி கேள்விப்பட்டு மகிழ்ச்சியடைவார் என்று த
சென்னை: திமுக பொதுக்குழுவில் பேசிய தலைவர் மு.க ஸ்டாலின் இன்று மிகவும் நெகிழ்ச்சியுடனே பேசினார். கருணாநிதி இல்லாத நிலையில் கட்சியின் தலைவராக பொறுப்பேற்று தற்போது வழிநடத்தி வருகிறார். தற்போது கட்சியின் பொதுச்செயலாளராக துரை முருகனும், பொருளாளராக டி.ஆர் பாலுவும் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். கருணாநிதியால் வளர்த்து ஆளாக்கப்பட்ட மூன்று பேரும் பெரிய பதவியில் அமர்ந்திருப்பதைக் கேள்விப்பட்டு வங்கக்கடலோரம் ஒய்வெடுக்கும் கருணாநிதியின் மனம் மிகவும் சந்தோஷப்படும் என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.
இன்றைக்கு பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், என்றைக்கும் இல்லாத அளவிற்கு நான் இன்றைக்கு நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஏனென்றால் துரைமுருகன் பொதுச்செயலாளராகவும், டி.ஆர் பாலு பொருளாளராகவும் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். இருவரும் திமுகவிற்கு புதியவர்கள் அல்ல நன்றாக பழகிய முகங்கள்.

இளைஞர்களாக நான் உங்களை பார்த்திருக்கிறேன். நான் தலைவனாக இருந்து பொதுச்செயலாளராக பொருளாளராக உங்கள் இருவரை பார்க்கிறேன். அதுதான் எனக்கு கிடைத்திருக்கும் பெருமை.
உங்களை பார்க்கும் போது உங்கள் இருவரின் முகம் தெரியவில்லை. நம்மை எல்லாம் வளர்த்து ஆளாக்கிய தலைவர் கருணாநிதியின் முகம்தான் தெரிகிறது. அவர் இல்லாமல் நாம் மூவரும் இல்லை.
நம்மை ஆளாக்கி, உருவாக்கி வளர்த்து நம்மை உருவாக்கி பேணி பாதுகாத்து இப்போது வங்க கடலோரத்தில் அண்ணாவின் அருகில் இப்போது ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார் தலைவர் கருணாநிதி.
திமுகவிற்கு பொதுச்செயலாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். பொருளாளராக டி.ஆர் பாலு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். என்ற செய்தியை அவர் கேள்விப்பட்டால் அவர் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார். அதைவிட ஒரு மகிழ்ச்சியான செய்தி நிச்சயம் வேறு எதுவாகவும் இருக்க முடியாது என்று கூறினார்.
துரைமுருகனோ, டி ஆர் பாலுவோ திடீரென்று இந்த பதவிக்கு வந்து விட வில்லை. படிப்படியாக உயர்ந்து இந்த பதவிக்கு வந்திருக்கின்றனர். நான் எப்படி படிப்படியாக உயர்ந்து இந்த பதவிக்கு வந்தேனோ அதே போல துரைமுருகன், டி.ஆர் பாலு ஆகிய இருவரும் இந்த பதவிக்கு வந்திருக்கிறார்கள் என்று கூறினார் ஸ்டாலின். இன்றைக்கு பொதுக்குழுவில் பேசிய ஸ்டாலின் கருணாநிதி பற்றி பேசும் போது நெகிழ்ச்சியுடனே பேசினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications