சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கீழடி பற்றிய ஸ்டாலின் ட்விட்டால் சர்ச்சை.. எப்படி இவ்வாறு சொல்லலாம்.. நெட்டிசன்கள் கடும் விமர்சனம்

Google Oneindia Tamil News

Recommended Video

    கீழடி அகழாய்வு நிலத்தை பார்வையிட்ட ஸ்டாலின்! | Stalin today visited the Keezhadi Excavation

    சென்னை: கீழடியில் நடைபெற்ற தொல்லியல் துறை ஆய்வு முடிவுகளை, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சமீபத்தில் அறிக்கையாக வெளியிட்டார். ஆய்வுகளின் முடிவில், கீழடியில் வாழ்ந்தவர்கள் கி.மு 6ம் நூற்றாண்டிலேயே கல்வியறிவு கொண்டவர்களாக விளங்கினார்கள் என்ற தகவல் வெளியானது.

    கங்கைக் கரையில் இரண்டாம் நகர நாகரீகம் நிலவிய அதே காலகட்டத்தில் கீழடியிலும் தமிழர்களின் நகர நாகரீகம் இருந்துள்ளது இதன் மூலம் உறுதியானது. பிராமி எழுத்துக்களும் கண்டெடுக்கப்பட்டன.

    தமிழினத்தின் பொற்காலம் என அறியப்படும், சங்க காலம் என்பது மேலும் 3 நூற்றாண்டுகள் பழமையானது என்பதை கீழடி அறுதியிட்டு கூறியது. சிந்து சமவெளி நாகரீகத்தின் தொடர்ச்சி, கீழடியில் துவங்கலாம் என அறிஞர்கள் கருதுகிறார்கள். அந்த அளவுக்கு தமிழினத்தின் தொன்மையை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது கீழடி.

    இந்த நிலையில் கீழடி பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். இதன்பிறகு அவர் வெளியிட்ட ஒரு ட்வீட்தான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது ட்வீட்டுக்கு பின்னூட்டமாக தமிழ் நெட்டிசன்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.

    வகுப்பறையில் அழுத மாணவியின் குழந்தை.. முதுகில் கட்டிக்கொண்டு 3 மணி நேரம் பாடம் நடத்திய பேராசிரியைவகுப்பறையில் அழுத மாணவியின் குழந்தை.. முதுகில் கட்டிக்கொண்டு 3 மணி நேரம் பாடம் நடத்திய பேராசிரியை

    ஸ்டாலின் ட்வீட்

    திராவிட நாகரீகத்தின் தொட்டிலாக, சங்கத் தமிழர்களின் புகழ் கூறும் வைகை ஆற்றங்கரையில் உள்ள புனித பூமியான கீழடியைப் பார்வையிட்டேன்.
    இந்திய வரலாறு தெற்கிலிருந்து - தமிழகத்தில் இருந்து தான் தொடங்கப்பட வேண்டும் என்பதை கீழடி உறுதி செய்திருக்கிறது. இவ்வாறு ஸ்டாலின் ட்வீட் செய்திருந்தார். அவர் தமிழ்நாகரீகம் என கூறாமல், திராவிட நாகரீகம் என கூறியதுதான், நெட்டிசன்கள் ஆதங்கத்திற்கு காரணம். இதோ நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள் பாருங்கள்.

    முன்பு வேறு மாதிரி

    அன்றைக்கு தமிழர் நாகரீகம் என்று சொல்லிவிட்டு இன்று திராவிட நாகரீகம் என்று மாற்றி பேசுவது முறையல்ல.... கீழடி தமிழர் நாகரீகமே.

    திராவிடர்கள் கிடையாது

    எங்கள் தாய் மொழி தமிழ். நாங்கள் திராவிடர் கிடையாது. வேற்று மொழியில் பேசுவர்கள் திராவிடர்கள், திராவிடம் பேசுவர்கள் திராவிடர்கள்!
    கீழடி எங்கள் தமிழ் மண், பிராமி, திராவிடம் என்று தவறு! தமிழ் நாடு எங்கள் நாடு!

    தமிழகம் கொந்தளிக்கிறது

    தலீவரே பேசா மா கிளம்பி போங்க மொத்த தமிழ் நாடே "ஏய் உசார் ஐயா உசார் கீழடி நிலம் சாக்கிரதை திருட்டு ஒரே சத்தமா இருக்கு "

    திராவிட சொல்லாடல்

    அது என்ன திராவிட நாகரிகம், தமிழர் பாரம்பரிய வரலாற்றை மறைக்க நீங்கள் உபயோகிக்கும் வெற்று வார்த்தை தான் திராவிடம். அது பொருளற்ற சொல்.
    கால்டுவெல் ஈன்ற திராவிடம் என்ற சொல் போன நூற்றாண்டில் பிறந்தது. நீங்கள் நிற்பதோ? ஆயுள் அளவிட முடியாத தொன்மையான தமிழர் பழம்பெரும் நாகரிகத்தில்.

    ழ வர வேண்டும்

    திராவிட நாகரிகம் அல்ல. தமிழர் நாகரிகம். தமிழ் சிறப்பு "ழ" உங்கள் "நா"வில் வராதா திரு . ஸ்டாலின் அவர்களே. அதற்காகத்தான் தமிழர் நாகரிகத்தை திராவிடம் திராவிட நாகரிகம் என்று திருடுகிறீர்களா?

    பகடி செய்ய வேண்டாம்

    கீழடி தமிழர் காலடி. திராவிடம் ஆரியம் செய்யுது பகடி. தமிழா பகைவரை சிதறடி 💪💪💪

    ஸ்டாலின் விசிட் எதற்கு?

    எது எல்லாம் ட்ரெண்ட் ஆகுதோ அங்க போய் ஒரு attendence போற்ற வேண்டியது... நம்ம டீம்க புல்லிங்கோ...உண்மைக்கு ஆதரவு குரல் குடுக்குறாங்களாம்.
    ட்ராவிடன்ஸ் அடி வேறு ஆட்டம் கானுது போல😂 ...அது எல்லாம் அந்த காலம்.. இப்போ ஒன்னும் முடியாது என்கிறார்.

    வித்தியாசம்


    இந்திய நாகரீகம், தெற்கிலிருந்து, அதாவது, தமிழகத்திலிருந்து, தெடங்கியது என்று கூறமுடியுமே தவிர, நீங்கள் உளறிய "இந்திய வரலாறு தமிழகத்திலிருந்துதான் தொடங்கப்படவேண்டும்" என்ற கருத்து, நாகரீகத்திற்கும் வரலாறுக்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரியாது என்று காட்டுகிறது.
    இவ்வாறு நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்கிறார்கள்.

    English summary
    DMK leader MK Stalin visited the Keezhadi area today. A tweet he published afterwards has caused controversy. In response to his tweet, Tamil Nittisans have been criticizing him.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X