கனவு ஆசானே.. உங்கள் கனவுகளை நிறைவேற்றிக் காட்டுவோம்.. ஸ்டாலின் உருக்கமான பதிவு
சென்னை: கனவு ஆசானே, உங்கள் கனவுகளை நிறைவேற்றிக் காட்டுவோம் என பேராசிரியர் க அன்பழகனின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றது தொடர்பாக திமுக தலைவர் முக ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Recommended Video
திமுக பொதுச் செயலாளர் வயோதிக பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 1 மணிக்கு காலமானார்.
அவரது உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் ஊர்வலமாக வேலங்காடு இடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

கண்ணீர்
அங்கு திமுக தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், டிஆர் பாலு, வைரமுத்து, திருச்சி சிவா உள்ளிட்டோர் தகன மேடையில் வைக்கப்பட்ட அன்பழகனின் உடலுக்கு மரியாதை செலுத்தினர். அப்போது ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் கண்ணீர் விட்டு அழுதனர். துரைமுருகன் குலுங்கி குலுங்கி அழுதபடியே தங்கள் ஆசானை அனுப்பிவிட்டு வெளியே வந்த காட்சி பார்ப்போரையும் கலங்க வைத்தது.
— Manoharan Karthik (@Kar2000k44) March 7, 2020 |
ட்விட்டரில் ஸ்டாலின்
இந்த நிலையில் பேராசிரியரின் இறுதி ஊர்வல புகைப்படங்களை வெளியிட்டு ஸ்டாலின் தனது ட்விட்டரில் உருக்கமான பதிவை போட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் எனக்குத் தாயுமாய் தந்தையுமாய் தலைவருமாய் உயிருமாய் இருந்த பேராசிரியப் பெருந்தகையின் இறுதிப் பயணத்தில் பங்கெடுத்து வீரவணக்கம் செலுத்தி இருக்கிறேன்!

கனவு
மறக்காது உம் குரல் - கொள்கை - நோக்கு! கனவு ஆசானே! உங்கள் கனவுகளை நிறைவேற்றிக் காட்டுவோம்! வாழ்க #பேராசிரியர் புகழ்! என தெரிவித்துள்ளார். பேராசிரியரை பெரியப்பா என்றே அழைக்கு ஸ்டாலினுக்கு அவரது இழப்பை தாள முடியவில்லை. மேலும் பேராசிரியரின் இறுதி ஊர்வலத்திலும் அவரது வீட்டிலிருந்து மயானம் வரை நடந்தே சென்றார்.

ஸ்டாலின் கடிதம்
அவரது உயிர் பிரிந்தவுடன் அவர் தான் கைப்பட எழுதிய கடிதம் உருக்கத்தை தந்துள்ளது. அவர் கூறுகையில் அப்பா மறைந்தபோது பெரியப்பா இருக்கிறார் என்று ஆறுதல் பெற்றேன். இன்று பெரியப்பாவும் மறையும் போது என்ன சொல்லி என்னை நானே தேறுதல் சொல்வேன்?! பேராசிரியர் இருக்கிறார் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். இனி யாரிடம் ஆலோசனை கேட்பேன்? இனி யாரிடம் பாராட்டு பெறுவேன்? என்ன சொல்லி என்னை நானே தேறுதல் கொள்வேன்?! என உருக்கமாக கூறியிருந்தார்.
-
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications