அன்று சூடு சொரணை இல்லையா.. இன்று வாய்க்கு வாய் ஐயா.. மு.க.ஸ்டாலினின் அடடே வாழ்த்து!

டாக்டர் ராமதாசுக்கு முக ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து ட்வீட் போட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சூடு, சொரணை இல்லையான்னு கேட்டுட்டு.. இன்னைக்கு அய்யா.. அய்யா என்று டாக்டர் ராமதாசுக்கு ஒரு வாழ்த்து பதிவு போட்டுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்!

இன்றைக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது 80-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அனைத்து கட்சி அரசியல் தலைவர்களும் வாழ்த்துக்கூறிய நிலையில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் மூலமாக வாழ்த்து கூறியுள்ளார்.

அதில் 'பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் அய்யா அவர்களுக்கு இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன். "முத்து விழா"-வினைக் கொண்டாடும் அய்யா அவர்கள் சிறப்பான உடல்நலனுடனும், நிறைவான மனவளத்துடனும், நீண்ட காலம் வாழ, வணக்கத்துடன் வாழ்த்துகிறேன்! என பதிவிட்டுள்ளார்.

கூட்டணி

நல்ல விஷயம்தான்.. வரவேற்கத்தக்க ஒன்றுதான். ஆனால் முக ஸ்டாலினுக்கும், டாக்டர் ராமதாசுக்கும் நெருக்கமான நட்பு இருக்கிறதா என்று தெரியவில்லை. சமீபத்திய கூட்டணி நேரத்தின்போது, "சூடு சொரணை இருக்கா, வெட்கம் இருக்கா என்று தடித்த வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார்.

முதிர்ச்சி

முதிர்ச்சி

எதையுமே பொறுமையாகவும், பக்குவமாகவும், குறிப்பாக தமிழிசை சவுந்தராஜன் எவ்வளவு காரசார ட்வீட்கள் போட்டாலும் அதனை முதிர்ச்சியோடு அணுகி பதில் சொல்லும் ஸ்டாலின், மூத்த தலைவர் டாக்டர் ராமதாஸை பார்த்து இப்படி கேட்டது அன்றைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆற்றாமை

ஆற்றாமை

கோடிக்கணக்கான தொண்டர்களைக் கொண்ட கட்சியின் தலைவரான ஸ்டாலினின் இந்த பேச்சு பெரிய அதிர்ச்சியை அன்று ஏற்படுத்தியது. மேலும் பாமக தன்னுடன் கூட்டணி வைக்காத ஆற்றாமையின் வெளிப்பாடாகத்தான் இந்த பேச்சு அன்று தெரிந்தது.

கூட்டணி

கூட்டணி

ராமதாஸ் பற்றி எல்லோருக்குமே இத்தனை வருஷங்களாக நன்றாகவே தெரியும். யார் நிறைய சீட் தருவார்களோ அங்கு செல்வார் என்பதும், அதற்காக மாறி மாறி கூட்டணி வைக்க தயங்க மாட்டார் என்பதும் தமிழகம் நன்கு அறிந்ததுதான். ஏன் அதிமுகவிடமே கூட்டணி வைத்துவிட்டு மீண்டும் திமுகவுடன் கூட்டணி வைத்தவர் தான். அதனால் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலுக்கான அச்சாரமாக ஸ்டாலின் போட்ட ட்வீட்டை எடுத்து கொள்ளலாமா? அல்லது இது வெறும் அரசியல் நாகரீகமா என்று தெரியவில்லை.

கொதிப்பு

கொதிப்பு

ஆனால் அன்று ஸ்டாலின் ராமதாஸை பார்த்து கேட்ட கேள்வியால், பாமக தொண்டர்களும் கொதித்துதான் போனார்கள். எனினும், தமக்கு எதிரான கருத்துக்களை ராமதாஸ், முன்வைத்து வருபவர் என்றாலும், இன்று ஸ்டாலின் போட்ட ட்வீட், தொண்டர்களின் கொதிப்பை மட்டுமல்ல, டாக்டர் அய்யாவின் கோபத்தையும் உடைக்கவே செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

என்ன இருந்தாலும் வாழ்த்தியதன் மூலம் அரசியல் நாகரீகத்தையும் ஸ்டாலின் வெளிப்படுத்தியுள்ளார்.. பாராட்டலாமே.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+