முன்னாள் முதல்வர் முக ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த இசட் + பாதுகாப்பு வாபஸ்.. நடந்தது என்ன?
சென்னை: முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த இசட் பிளஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளட்து. முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில் இனி இசட் பிரிவு பாதுகாப்பு ஸ்டாலினுக்கு வழங்கப்படும் எனத் தெரிகிறது.
முன்பு இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவின் கீழ் ஸ்டாலினுக்கு ஒரு நாளைக்கு சுழற்சி முறையில் மொத்தம் 58 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர். துப்பாக்கி ஏந்திய காவல் துறையினருடன், குண்டு துளைக்காத வாகனம் மற்றும் சிக்னல் தடுப்புக் கருவி (ஜாமர்) வசதியும் இதற்காக வழங்கப்பட்டிருந்தது.

மு.க ஸ்டாலின்
இந்த பாதுகாப்பானது 2026 சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு தற்போது இசட் பிரிவாக குறைக்கப்பட்டுள்ளது. சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மு.க ஸ்டாலின் வீட்டிற்கு செல்லும் 4 நுழைவு வாயில்களில் 20 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். சட்டசபை தேர்தலில் திமுக தோல்வி அடைந்தது. கொளத்தூர் தொகுதியில் மு.க ஸ்டாலின் தோல்வி அடைந்தார்.
தேர்தலில் தோல்வி அடைந்தாலும் மக்கள் பணியில் சுணக்கம் காட்டாமல் நாள் தோறும் கட்சியினரையும், மக்களையும் மு.க ஸ்டாலின் சந்தித்து வருகிறார். இந்த சூழலில் ஸ்டாலினுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டதற்கு திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். சமூக வலைத்தளங்களில் தவெக அரசின் இந்த செயலை கண்டித்து திமுகவினர் காட்டமாக பதிவிட்டு வருவதை காண முடிகிறது.
4 பேர் மட்டுமே பாதுகாப்பு அளிப்பர்
முதல்வர் பதவியில் இருந்து மு.க ஸ்டாலின் பதவி விலகி 100 நாட்களுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில், அவருக்கான இசட் பிளஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது. மத்திய மற்றும் மாநில உளவுத்துறையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட வழக்கமான ஆய்வின் அடிப்படையில் ஒரு அறிக்கை தயாரிக்கப்பட்டது. அந்த அறிக்கையை ஆய்வு செய்த பிறகு, ஸ்டாலினின் 'Z+' பிரிவு பாதுகாப்பை 'Z' பிரிவாக குறைக்க அரசு உத்தரவிட்டது. இந்தப் புதிய பாதுகாப்புப் பிரிவின் கீழ், அதிகபட்சமாக 22 பாதுகாப்புப் பணியாளர்கள் பணியில் இருப்பார்கள்.
இந்த முடிவின் அடிப்படையில், செனடாஃப் சாலையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் இல்லத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
முக்கிய தலைவர்களுக்கான பாதுகாப்பு
நம் நாட்டில் முக்கிய தலைவர்கள் மற்றும் விவிஐபிகளுக்கு அவர்களுக்கு உள்ள அச்சுறுத்தலை மதிப்பீடு செய்து உள்துறை அமைச்சகம் இசட் பிளஸ், இசட் பிரிவு, ஒய் பிளஸ், ஒய் பிரிவு என பல்வேறு வகையாக பிரித்து பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதில் இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவின் கீழ் 55 பாதுகாவலர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
பிரதமருக்கு வழங்கப்படும் எஸ்பிஜி பாதுகாப்புக்கு பிரிவு மிகவும் உயரிய பாதுகாப்பாக இசட் பிளஸ் பாதுகாப்பு உள்ளது. இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவில் கமோண்டாக்கள், அதிநவீன ஜாமர் கருவி கொண்ட பாதுகாப்பு வாகனம், ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை கான்வாயில் இடம்பெறும். இந்த பாதுகாப்பு பணிக்காக, ஒரு குழுவிற்கு மாதம் சுமார் ரூ.20 லட்சம் வரை செலவிடப்படுகிறது.
இசட் பிரிவு பாதுகாப்பில் கமோண்டாக்கள் உள்பட 22 காவல்துறையினர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இப்பிரிவில் ஒரு குண்டு துளைக்காத வாகனம் உள்ளிட்ட 5 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இப்பாதுகாப்புப் பணிக்கு தனிப்படைக்கு மாதம் ரூ.16 லட்சம் வரை செலவு செய்யப்படுகிறது. ஒய் பிளஸ் கமோண்டாக்கள் உள்பட 11 காவல்துறையினர் இடம் பெறுவார்கள். இந்த பாதுகாப்பு பிரிவின் கீழ் இருப்பவர்களுக்க்கு 2 முதல் 3 வாகனங்கள் வரை பயன்படுத்தப்படும்.


Click it and Unblock the Notifications
