"ஹீரோ காப்" வந்தாச்சு.. இனி "அவங்க" வாலை சுருட்டிக்கணும்.. கரடுமுரடு + பாசம் = சைலேந்திரபாபு
புதிய டிஜிபி சைலேந்திர பாபு, முதல்வரின் நல்ல தேர்வு என்று பாராட்டுகள் குவிகின்றன
சென்னை: ஆபாச ஆசாமிகள், வன்முறையாளர், வாய் சவடால் பேர்வழிகள் இனி மொத்தமாக வாலை சுருட்டிக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.. வந்தாச்சு சைலேந்திர பாபு..!
காக்கி சட்டை போட்டவர்கள் எல்லாருமே, கரடுமுரடு சுபாவம் உடையவர்கள் இல்லை என்பதை நொறுக்கியவர் சைலேந்திர பாபு.. அதேசமயம், ஒரு போலீஸ்காரர் என்றால் கட்டுக்கோப்பாக உடலை வைத்து கொள்ள வேண்டும் என்பதில் உடும்பாய் இருப்பார்.
Recommended Video
நீச்சல், துப்பாக்கி சுடுதல், சைக்கிளிங், உடற்பயிற்சி, ஆரோக்கிய உணவு என உடல்நலன் சார்ந்த விஷயங்களில் தீவிரமாக கவனம் செலுத்துபவர்..

ஆரோக்கியம்
இதை பற்றி வீடியோக்களையும் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு, இளைஞர் பட்டாளத்தை தன் பக்கம் திசை திருப்பி வைத்திருப்பவர்.. அதிலும், இயற்கை உணவை சாப்பிட்டுக் கொண்டே போடும் வீடியோவுக்கு நிறைய ஃபேன்ஸ் இருக்கிறார்கள். ரோட்டில் நின்று இளநீர் குடித்தாலும், அதை குடித்து கொண்டே அதன் நன்மைகளை பற்றி பேசுவார்.

காவல்துறை
அதனால், சில ஆசாமிகளுக்கு இனி சிக்கல்தான்.. ரோட்டில் நின்று கொண்டு நீதிமன்றங்களையும், காவல்துறையையும் கேவலமாக பேசுவோர் யாராக இருந்தாலும் தட்டி தூக்க வந்துவிட்டார் சைலேந்திர பாபு.. வாகன சோதனை உள்ளிட்டவற்றில் ஈடுபடும் காவல்துறையினருடன் ஆபாசமாக பேசி மோதுவது, வாய்ச்சண்டையில் ஈடுபடுபவர்களை சுளுக்கு எடுக்க வந்துவிட்டார் சைலேந்திர பாபு..

அயோக்கியர்கள்
சமூக வலைதளங்களில் வாய்க்கு வந்ததை எழுதுவது, தனி மனித கிண்டல், ஆபாச வசவுகள் செய்வது, ஆபாசமாக பேசுவது, போன்றவற்றில் ஈடுபடுபவர்களை கதற செய்ய வந்துவிட்டார் சைலேந்திர பாபு.. அதாவது, இவர்கள் எல்லாம் எப்படியும் பாத்ரூமில் வழுக்கி விழுவது நிச்சயம் என்பதால், இது எல்லாத்தையும் இப்போதே அயோக்கிய ஆசாமிகள் நிறுத்தி கொண்டால் நல்லது..

செயல்பாடுகள்
சைலேந்திர பாபு பற்றி தெரியாதவர்கள் இனியாவது அவரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.. மிக மிக ஸ்டிரெயிட் பார்வர்ட்... அவரிடம் எந்த பருப்பும் வேகாது.. அவரது முன்னாள் பதவிகளின்போது அவர் செயல்பட்ட விதங்களைப் நன்கு பார்த்தாலே தெரியும். கோவை முஷ்கான் சம்பவத்திலும்சரி, வட சென்னையில் ரவுடிகளை ஓட ஓட விட்டதிலும் சரி, கொங்குவில் கஞ்சா கடத்தல்காரர்களை வளைத்ததிலும்சரி.. சைலேந்திர பாபுவின் செயல்பாடுகள் தமிழகம் அறிந்ததே.

சீமான்
அதனால்தான், சைலேந்திரபாபுவுக்கு சீமானே முன்வந்து வாழ்த்து சொல்லி உள்ளார்.. முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதில் மற்றுமொரு மைல்கல் படைத்துள்ளார்... சரியான தேர்வு. சிறந்த மனிதர்.. குற்றவாளிகளிடம் மிகவும் கண்டிப்பாக நடந்துகொண்டு தமிழகத்தில் சாமானிய மக்கள் பயமின்றி வாழ வகை செய்வார் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.. ஆனாலும் எந்தவித குறுக்கீடுகளுமின்றி இவரை தன்னிச்சையாக பணிபுரிய விடவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடம் எழுந்துள்ளது..

நம்பிக்கை
கடமையையும் தாண்டி, மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற கருணையும், தான் பெற்ற அறிவு மற்றவர்களுக்கு பயன்பட வேண்டும் என்கிற ஆர்வமும், ஒவ்வொரு விஷயத்திலும் மக்கள் நலன் சார்ந்த சிந்தனையும், நிச்சயம் டிஜிபி பணியில் சைலேந்திர பாபுவை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும்.. தமிழகம் சட்டம்- ஒழுங்கில் நிச்சயம் மேலோங்கும் என்றே நம்பலாம்.
-
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்! -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு!












Click it and Unblock the Notifications