7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை: 7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் தர வேண்டு என்று திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆங்கில நாளேடு ஒன்றில், 7 தமிழர் விடுதலை விவகாரத்தில் அமைச்சரவை தீர்மானத்தை ஆளுநர் ஏற்கவில்லை என செய்தி வெளியானது. இதை சுட்டிக்காட்டி மு.க.ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில்,
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது" என தமிழக ஆளுநர், முதலமைச்சரிடம் தெரிவித்து விட்டதாக வெளியாகியுள்ள செய்தி குறித்து முதல்வர் அவர்கள், தமிழக மக்களுக்கு உடனே விளக்கம் தந்திட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
"பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது" என தமிழக ஆளுநர், முதலமைச்சரிடம் தெரிவித்து விட்டதாக வெளியாகியுள்ள செய்தி குறித்து முதல்வர் அவர்கள், தமிழக மக்களுக்கு உடனே விளக்கம் தந்திட வேண்டும் https://t.co/6pjC8oSIs1
— M.K.Stalin (@mkstalin) October 18, 2019












Click it and Unblock the Notifications