எம்எல்ஏ. கு.க செல்வத்தின் மருமகன்... சென்னையில் வாகன விபத்தில் உயிரிழப்பு!!
சென்னை: திமுக போட்டி எம்எல்ஏவும் சமீபத்தில் பாஜகவில் இணைந்து இருக்கும் கு.க செல்வத்தின் மருமகன் பூந்தமல்லி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் நேற்று இரவு உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்தி தப்பி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ கு.க.செல்வம். திமுக மாவட்டச் செயலாளர் நியமனத்தில் இவருக்கும், திமுக தலைமைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். திமுகவில் இருந்து கு.க.செல்வம் நீக்கப்பட்டு போட்டி எம்எல்ஏவாக உள்ளார்.

கு.க.செல்வத்தின் மூத்த மகளின் கணவர் துளசிராமன் (50). இவர் சென்னை, கோடம்பாக்கம் பாரதீஸ்வரர் காலனியில் வசித்து வந்தார். வளசரவாக்கத்தில் பணியாற்றி வந்தார். இவரது மகள் பூந்தமல்லியில் உள்ள சவிதா பல் மருத்துவமனையில் மருத்துவம் பயின்று வருகிறார். அங்கேயே தங்கிப் படித்து வருகிறார். துளசிராமனின் தந்தை சென்னை காவல்துறையில் எஸ்.பி.யாக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
கல்லூரிக்குச் சென்று வழக்கம்போல் தனது மகளை துளசிராமன் பார்ப்பது உண்டு. வழக்கம்போல் நேற்றும் இருசக்கர வாகனத்தில் பூந்தமல்லியில் இருக்கும் கல்லூரிக்குச் சென்று தனது மகளைப் பார்த்துவிட்டு இரவு 7.30 மணி அளவில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் துளசிராமன் வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் பலத்த காயமடைந்த துளசிராமனை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் விபத்து ஏற்படுத்தியவர்கள் அனுமதித்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டதாக, பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே துளசிராமன் உயிரிழந்துள்ளார். விபத்து குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த துளசிராமனின் உடல் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
-
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு












Click it and Unblock the Notifications