செக்கா, கேஷா?.. ஒரே ஒரு ட்வீட்தாங்க.. வச்சு செய்யும் டி.ஆர்.பி. ராஜா ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மக்கள் எல்லாம் தீபாவளி பண்டிகைக்கு மன்னார்குடிக்கு வாங்கன்னு எம்எல்ஏ டிஆர்பி ராஜா ஒரே ஒரு ட்வீட்தான் போட்டாரு. அவரோட ரசிகர்கள் ஜாலியாக அவரை வச்சு செய்கிறார்கள்.

மன்னார்குடி எம்எல்ஏவும் டிஆர் பாலுவின் மகனுமான டிஆர்பி ராஜா எப்போதும் கலகலப்பானவர். கோபத்தை கூட ஜாலியாகவே வெளிப்படுத்துவார். எந்த விமர்சனம் என்றாலும் அதை ஜாலியாக கையாள்வாரே, தவிர யாரையும் கீழ்த்தரமான வார்த்தைகளை உபயோகித்து வசைபாடாதவர்.

அவரது ட்வீட்டுகளை பார்த்து பதில் கொடுப்பதற்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். இந்த நிலையில் தீபாவளி பண்டிகை குறித்து டிஆர்பி ராஜா போட்ட ட்வீட்டை அவரது ரசிகர்கள் வச்சு செய்துவருகிறார்கள். அப்படி என்னதான் ட்வீட் போட்டார்னு கேட்கிறீர்களா, வாங்க பார்க்கலாம்.

கறி விருந்து

கறி விருந்து

தீபாவளி பண்டிகை அன்று கறி சமைத்து கொண்டாடுவது நம் வழக்கமாக உள்ளது. அமாவாசைக்கு முந்தைய நாள் கறி எடுத்து கொண்டாடிவிட்டு பின்னர் வீட்டை சுத்தபத்தமாக துடைத்து மறுநாள் அமாவாசை நோன்பை கொண்டாடுவோரும் உள்ளனர். எனவே தீபாவளி என்றால் பட்டாசு, புத்தாடையை தாண்டி உணவு பிரியர்களுக்கு கறிதான் நினைவுக்கு வரும்.

கறி கடைகள்

கறி கடைகள்

ஆனால் இந்த முறை தீபாவளி பண்டிகையான நவம்பர் 4ஆம் தேதி மகாவீர் நிர்வான் தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்த நாளில் மகாவீரர் மோட்சம் அடைந்தார். இதனால் அந்த தினத்தில் கறிக் கடைகள் திறக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து தமிழகத்தில் சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கறிக் கடைகள் திறக்கப்படாது என்றும் மற்ற மாவட்டங்களில் ஜைனர் வழிபாட்டு தலங்களுக்கு அருகே உள்ள கறி கடைகள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ராஜா ட்வீட்

ராஜா ட்வீட்

இதனால் சென்னை அசைவ உணவு பிரியர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்த நிலையில்தான் மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா ஒரு ட்வீட்டை போட்டார். அதாவது Dear #Chennai
4.11.21 அன்று #மன்னார்குடி யில் அனைத்து இறைச்சிக் கடைகளும் திறக்கப்பட்டு #தீபாவளி அன்று காலை கறி குழம்பு மதியம் விரால் மீன் வருவல் + குழம்பு இரவு ரத்தப் பொரியல் ஆட்டுக்கால் பாயா அனைத்தும் உண்டு 🙏🏾
#Welcome to #Mannargudi என ஜாலி ட்வீட் போட்டார்.

வரேன்

வரேன்

இதற்கு நம் மக்கள் என்ன சொல்ல வேண்டும், ஒன்னு வரேன் சாரு சொல்லனும் இல்லாட்டி வரலைனு சொல்லணும். ஆனால் நம்ம ராஜா ரசிகர்கள் வச்சு செய்திருக்காங்க. "மன்னார்குடி மக்களே உங்க MLA வை எங்களுக்கு குடுத்திருங்கையா . புண்ணியமா போகும்.." என்கிறார் ஒரு வலைஞர்.

கேஷா செக்கா

கேஷா செக்கா

சென்னை மக்கள் //
Sir அந்த up & down transport charge அ செக்கா குடுப்பிங்களா? இல்ல cash ஆ தருவீங்களா?!!!

அதிக புரோட்டீன்

அதிக புரோட்டீன்

பன்றி இறைச்சி உண்டா உங்கள் உணவில் அதிக protein நிறைந்தது

ராஜா வீட்டுக்கு

ராஜா வீட்டுக்கு

ஒரு வேளை எல்லாரும் மன்னார்குடியில் ராஜா வீட்டுக்கு வந்தால் அவர் சொல்வாராம்- "மன்னார்குடில கறி போடுவாங்கன்னு தான் சொன்னேன், எங்க வீட்ல போடுவேன்னு சொல்லல". இப்படியாக ரசிகர்கள் தெறிக்க விட்டுள்ளார்கள். நல்ல வேளை சென்னை மாநகராட்சிக்குள்பட்ட இடங்களில் கறிக் கடைகள் திறக்கலாம் என்றும் ஜைன மத கோயில்களுக்கு அருகில் இருக்கும் கடைகளை மூட வேண்டும் என்றும் மாநகராட்சி சார்பில் இரவு நேரத்தில் அறிக்கை விடப்பட்டுள்ளது. நல்ல வேளை தப்பித்தார் ராஜா! எல்லாரும் மன்னார்குடிக்கு போய் ராஜாவிடம் டிரான்ஸ்போர்டேஷன் சார்ஜ் கேட்டிருப்பார்கள்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+