ஆளுநர் ஆர்.என். ரவி உடனடியாக பதவி விலக வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி போர்க்கொடி!
சென்னை: தனது பணியை சரிவர செய்யாததால் ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக பதவி விலக வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி போர்க்கொடி உயர்த்தியுள்ளது.
மேலும், ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த விரக்தியில் வடமாநில பெண் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டதற்கு தமிழக ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

ஆன்லைன் ரம்மி
தென்காசி மாவட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த விரக்தியில் வடமாநில பெண் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வருகிறது. வட மாநிலத்தை சேர்ந்த அஜய்குமாரின் மனைவி பந்தனாமாஜி ஆன்லைன் ரம்மியால் 70 ஆயிரம் ரூபாய் வரை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட சண்டையில் மனைமுடைந்த பந்தனாமாஜி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவசர சட்ட மசோதா
தமிழகத்தில் இவரை போன்று ஆன்லைன் சூதாட்டங்களால் பணத்தை இழந்தவர்கள் ஏராளமானோர் தற்கொலை செய்து மாண்டுள்ளனர். இதனை அடுத்து ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யவும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தும் சட்ட மசோதா 2002 ஐ சட்டசபையில் தாக்கல் செய்து கவர்னரின் ஒப்புதற்காக கடந்த மாதம் 28ஆம் தேதி தமிழக அரசு அனுப்பி வைத்தது. அந்த அவசர சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் அவசர சட்டம் காலாவதி ஆகி உள்ளது.

ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும்
கவர்னர் கேட்ட விளக்கத்தை தமிழக அரசு அளித்தும் அவர் ஒப்புதல் அளிக்காதது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதன் தொடர்ச்சியாக தென்காசி மாவட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பெண்மணி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட செய்தி மிகப் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அந்த மரணத்திற்கு ஆளுநர் அவர்களே முழு பொறுப்பேற்க வேண்டும்.

பணியை சரிவர செய்யவில்லை
தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் மக்களாட்சி தத்துவத்திற்கு நேர் எதிரானதாக அமைந்திருக்கிறது. தனது பணியை சரிவர செய்யாததால் வடமாநில பெண்ணின் உயிரிழப்பிற்கு காரணமான தமிழக கவர்னர் அவர்கள் இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications