அரசின் செயலற்ற தன்மையை எத்தனை காலம், மத அடிப்படைவாத சிந்தனையால் மறைக்க முடியும்? ஜவாஹிருல்லா கேள்வி
சென்னை: எல்லா பிரச்சனைகளிலும் மத அரசியலை முன்னெடுப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா குற்றஞ்சாட்டியுள்ளார்.
தனது பதவிக்கு உள்ள பொறுப்புத்தன்மையை உணராமல் அமித்ஷா செயல்பட்டு வருவதாகவும் இதற்காக தனது கடும் கண்டனத்தை பதிவு செய்து கொள்வதாகவும் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை உட்பட பல்வேறு பிரச்சனைகளைக் கண்டித்து, ஒன்றிய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி நேற்று போராட்டம் நடத்தியது. நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி.க்கள் அனைவரும் கருப்பு உடையில் பங்கேற்றனர். காங்கிரஸ் எம்.பி.க்கள் ராகுல் காந்தி தலைமையில், விலைவாசி உயர்வு, வேலையின்மை உள்ளிட்ட பிரச்சனைகளில் ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கமிட்டபடி, குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணியாகச் சென்ற அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
இதில் பிரியங்கா காந்தியை காவல்துறையினர் இழுத்துச்செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்படும் நெருக்கடியை சரி செய்ய முக்கியமான எதிர்க்கட்சியான காங்கிரஸ் போராடி வருகிறது. விலைவாசி உயர்வு, வேலையின்மை மற்றும் ஜி.எஸ்.டி வரி உயர்வுக்கு எதிரான காங்கிரஸின் ஜனநாயகப் போராட்டங்களைத் திசைதிருப்பும் நோக்கில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் ராமர் கோயில் பிரச்சனையோடு காங்கிரஸின் போராட்டத்தை ஒப்பிட்டு கொச்சைப்படுத்தி இருக்கிறார்.
எல்லா பிரச்சினைகளிலும் மத அரசியலை முன்னெடுத்துச் செல்லும் ஒன்றிய அரசின் இந்த செயல் கடும் கண்டனத்துக்குரியது. தனது செயலற்ற தன்மையை இன்னும் எத்தனைக் காலத்திற்கு மத அடிப்படைவாத சிந்தனை மூலம் மறைக்க முடியும் என்று ஒன்றிய அரசு நம்புகிறது என தெரியவில்லை. தனது பதவிக்கு உள்ள பொறுப்புத்தன்மையை உணராமல் செயல்பட்டு வரும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications