சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆளுநர் ரவிக்கு இனி வேறு வழியில்லை! தக்க பாடம் புகட்டிய உச்சநீதிமன்றம்! சபாஷ் போடும் ஜவாஹிருல்லா!

Google Oneindia Tamil News

சென்னை: மாநில அரசின் முடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உச்சநீதிமன்ற தீர்ப்பு சுட்டிக்காட்டியுள்ளதாக மனிதநேயமக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

பேரறிவாளன் விடுதலை வழக்கு மூலம் ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் தக்க பாடம்
புகட்டியுள்ளதாக கூறியிருக்கிறார்.

கிருஷ்ணகிரியில் கனமழை.. கேஆர்பி அணையில் பெருக்கெடுத்த நீர்.. 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கிருஷ்ணகிரியில் கனமழை.. கேஆர்பி அணையில் பெருக்கெடுத்த நீர்.. 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

30 ஆண்டுகளுக்கு

30 ஆண்டுகளுக்கு


30 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் வாடிய பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளதை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கின்றது. நீண்டகாலமாகச் சிறையில் இருக்கக்கூடிய பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அதை அனுப்பிய பிறகு ஆளுநர்
அதுகுறித்து முடிவெடுக்காமல் காலம் கடத்தி வந்தார்.

Recommended Video

    CM Stalin-ஐ சந்தித்த Perarivalan.. என்ன பேசினார்கள்? #Politics | Oneindia Tamil
    ஆளுநரின் பணி

    ஆளுநரின் பணி

    இதன் பிறகு இதற்கு ஒப்புதல் அளிக்காமல் குடியரசுத் தலைவருக்கு அதனை அனுப்பி
    வைத்தார். இன்று பேரறிவாளனை விடுதலை செய்து வழங்கிய தீர்ப்பில் தமிழ்நாட்டு
    ஆளுநரின் இந்த காலதாமதச் செயல் தவறானது என்று குட்டு வைக்கப்பட்டுள்ளது.
    அமைச்சரவையின் முடிவுக்கு ஒப்புதல் அளிப்பது மட்டும்தான் ஆளுநரின் பணி
    என்பதை இந்தத் தீர்ப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

    20 ஆண்டுக்காலம்

    20 ஆண்டுக்காலம்

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மீதமுள்ள ஆறு தமிழர்களும் விடுதலை ஆவதற்கான
    ஒருவழிவகை இத்தீர்ப்பின் விளைவாகப் பிறந்துள்ளது.
    இதுமட்டுமல்லாமல் 20 ஆண்டுக்காலம் சிறையில் உள்ளவர்களை விடுதலை
    செய்வதற்குமாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதற்கு ஆளுநர் ஒப்புதல்
    அளிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதையும் தீர்ப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

    தனி ஒரு பெண்ணாக

    தனி ஒரு பெண்ணாக


    தனி ஒரு பெண்ணாக நீதி கேட்டுப் போராடி அதில் வெற்றி கண்டுள்ள
    அற்புதம்மாளுக்கும் 31 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலையைச் சுவாசிக்கும்
    பேரறிவாளனுக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    இத்தீர்ப்பிலிருந்து படிப்பினை பெற்று தமிழ்நாட்டு ஆளுநர் தமிழ்நாட்டு
    அமைச்சரவையின் முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்

    English summary
    Mmk President Jawahirullah welcomes the release of Perarivalan
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X