சர்ப்ரைஸ் தந்த "பத்மபிரியா".. சைலண்ட்டாக வந்த "விஜிலா".. செக் வைத்த திமுக.. தகிக்கும் அதிமுக, மநீம!
சென்னை: மாற்று கட்சிகளை சேர்ந்த 79 உறுப்பினர்கள் இன்று திமுகவில் இணைந்தனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் முன்னாள் துணை தலைவர் மகேந்திரனும் இன்று திமுகவில் இணைந்தார்.
Recommended Video
மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் இந்த விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்னிலையில் இவர்கள் திமுகவில் இணைந்தனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் முன்னாள் உறுப்பினர் பத்ம பிரியா மக்கள் மற்றும் அதிமுக முன்னாள் எம்பி விஜிலா சத்யானந்த் ஆகியோர் இன்று திமுகவில் இணைந்தனர். இவர்கள் இருவரும் திமுகவில் இணைந்து மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

பத்மபிரியா
இதில் பத்மபிரியா மக்கள் நீதி மய்யம் கட்சியின் மிகப்பெரிய உறுப்பினர் இல்லை என்றாலும் நல்ல அரசியல் எதிர்காலம் கொண்டவராகவே கருதப்பட்டார். மதுரவாயல் தொகுதியில் தேர்தல் சமயத்தில் தனி ஆளாக பிரச்சாரம் மேற்கொண்டார். ஒரு பெண், அதிலும் மிகவும் இளம் வயது கொண்ட பத்ம பிரியா களத்தில் பெரிய கட்சிகளை எதிர்த்து நம்பிக்கையோடு பிரச்சாரம் செய்ததே பெரிய அளவில் கவனம் ஈர்த்தது.

கவனம் ஈர்த்தார்
மக்கள் நீதி மய்யம் கட்சியில் பெரிய எதிர்காலம் இவருக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கட்சியில் இருந்தே வெளியேறினார். இஐஏ 2020 சட்டத்திற்கு எதிராக போராடி இவர் பிரபலம் அடைந்தார். தேர்தலுக்கு பின் பல்வேறு மூத்த நிர்வாகிகள் வெளியேறிய நிலையில் பத்ம பிரியாவும் வெளியேறினார். இந்த நிலையில் அரசியலில் இனி பத்ம பிரியா ஈடுபடுவாரா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று திமுகவில் அவர் இணைந்துள்ளார்.

திமுக
மக்கள் நீதி மய்யத்தின் முன்னாள் நிர்வாகிகள் மகேந்திரன் உட்பட பலர் திமுகவில் இணைந்த நிலையில் பத்ம பிரியாவும் திமுகவில் இணைந்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இவர் திமுகவில் இணைவது குறித்து தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், சத்தமே இன்றி திமுகவில் இன்று சேர்ந்து இருக்கிறார். இன்னொரு பக்கம் நெல்லையில் அதிமுகவின் முக்கிய உறுப்பினராக பார்க்கப்பட்ட விஜிலா சத்யானந்த் திமுகவில் இன்று இணைந்தார்.

விஜிலா
தென் மாவட்டங்களில் இவர் முக்கியமான அதிமுக தலைவராக பார்க்கப்பட்டவர். ஜெயலலிதாவின் குட்புக்கில் இருந்தவர். முன்னாள் அதிமுக நெல்லை மேயர், ராஜ்ய சபா எம்பி. அதிமுகவில் இப்படி பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் தற்போது திடீரென திமுகவில் இணைந்து இருக்கிறார். இவர் கட்சி மாறியதும் கூட சைலண்ட்டாகவே நடந்துள்ளது.

சர்ப்ரைஸ்
ஒரே நாளில் மநீம, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் முக்கியான 2 பெண் நிர்வாகிகளை திமுக தங்கள் கட்சியில் இணைந்து இருக்கிறது. ஒரே நாளில் பேரும் திமுகவில் இணைந்து கட்சியினர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் விஜிலா சத்யானந்த் திமுகவிற்கு சென்றது அதிமுகவின் தென் மண்டல உறுப்பினர்கள் இடையே கிலியை ஏற்படுத்தி உள்ளது.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications