ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் டாக்டர் மகேந்திரன்.. இனி திமுகவின் கோட்டையாகுமா கொங்கு?
சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் முன்னாள் நிர்வாகி டாக்டர் மகேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
Recommended Video
தமிழகத்தில் அண்மையில் நடந்த சட்டசபை தேர்தலில் திமுக சென்னையில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளையும் கைப்பற்றியது. வடமாவட்டங்கள், தென் மாவட்டங்களிலும் கணிசமான தொகுதிகளை திமுக வென்றது.
ஆனால் மேற்கு மாவட்டங்களில் மட்டும் அதிமுகவை விட திமுக குறைந்த இடங்களே பெற்றுள்ளன. இதற்கு காரணம் கொங்கு மண்டலத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்திலிருந்தே அதிமுக பலம் வாய்ந்ததாக இருந்து வருகிறது.

பலம்
இந்த நிலையில் கொங்கு மண்டலத்தில் திமுக எப்படியாவது பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என ஸ்டாலின் நினைத்து வருகிறார். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கூட கொங்கு மண்டலத்தில் திமுகவை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்.

பழம் நழுவி பாலில்
இந்த நிலையில் பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய டாக்டர் மகேந்திரன் திமுகவில் இணையவுள்ளார். இவர் கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு பெற்றவர். கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதே அதிக வாக்குகளை பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் மகேந்திரன்.

10 வேட்பாளர்கள்
இன்று அவர் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அது போல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மகேந்திரன் திமுகவில் இணைந்தார். இதன் மூலம் இரு மாத கால இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்த நிகழ்வில் ஆர் எஸ் பாரதி, துரைமுருகன், டிஆர் பாலு, கே என் நேரு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மகேந்திரன் மகிழ்ச்சி
எனவே மகேந்திரன் மகிழ்ச்சி அடையும் வகையில் அவருக்கு முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்படும். இவரது செல்வாக்கை வைத்து அடுத்த தேர்தலில் கொங்கு மண்டலத்தை தனது கோட்டையாக திமுக மாற்றிக் காட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.
-
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
வைத்திலிங்கத்துக்கு மீண்டும் சிக்கல்.. லஞ்ச ஒழிப்புத்துறை முடித்து வைத்த வழக்கை ஓபன் செய்த தவெக அரசு -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
கோவை டு லண்டன் கார் ஓட்டிய மூகாம்பிகா ரத்தினம்! இன்று கமல் ஹாசனின் மநீம விட்டு வெளியேறிய மர்மம் என்ன -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications