சொர்க்கம் என்பது நமக்கு.. சுத்தமுள்ள வீதிதான்.. கமலை போன்றே வித்தியாசமான மநீம உறுப்பினர்கள்
திருவாரூர் தெருவை மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள் சுத்தம் செய்தனர்.
சென்னை: சொர்க்கம் என்பது நமக்கு.. சுத்தம் உள்ள வீதிதான் என்பதை நிரூபித்திருக்கிறார்கள் கமலின் மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள்!
பொதுவாக எந்த கட்சி பொதுக்கூட்டம் நடத்தினாலும், கூட்டம் துவங்கும் முன்பு அந்த இடமே அவ்வளவு சுத்தமாக இருக்கும். ஆளாளுக்கு பெருக்கி துடைப்பதும், பந்தலை போடுவதும், ஸ்பீக்கர்களை கட்டுவதுமாக ஜெகஜோதியாக இருக்கும்.
ஆனால் கூட்டம் முடிந்தபிறகு பார்த்தால், அந்த இடமே களேபரமாக இருக்கும். எப்போது தலைவர்கள் பேச்சு முடியும் என்று காத்திருந்து கேட்டுவிட்டு நடையை கட்டிவிடுவார்கள்.

பொதுக்கூட்டம்
ஆனால் மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள் இதில் மாறுபட்டு உள்ளனர். நேற்று திருவாரூரில் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். இதில் கமல் பேச்சை கேட்க ஏராளமானோர் திரண்டு வந்திருந்தனர்.

கமல்ஹாசன்
கூட்டம் முடிந்த பிறகு எல்லோரும் கலைந்து சென்று விட்ட நிலையில், மய்ய உறுப்பினர்கள் அந்த இடத்தை துடைப்பத்தால் பெருக்கி சுத்தம் செய்ய ஆரம்பித்தனர். மொத்த குப்பைகளையும் அள்ளிபோட்டு, அந்த திருவாரூர் தெற்கு வீதியையே பளிச்சென செய்துவிட்டுதான் உறுப்பினர்கள் கிளம்பி சென்றனர். இது சம்பந்தமாக ஒரு ட்வீட்டில் சுத்தம் செய்வதுபோன்ற போட்டோவை பதிவிட்டுள்ளனர்.
|
தெற்கு வீதி
கூடவே "நம் பாதை தூய்மையானது! நேற்று நடைபெற்ற திருவாரூர் பொதுகூட்டம் முடிந்த இரண்டு
மணி நேரத்தில் கூட்டம் நடந்த சுவடேதெறியாமல் நமது மக்கள் நீதி மய்யத்தினர் சுத்தம் செய்தனர். திருவாரூர் தெற்கு வீதி.." என்று பதிவிடப்பட்டுள்ளது.

வித்தியாசம்தான் இதனை ஏராளமானோர் வரவேற்று கமெண்ட் போட்டுள்ளனர். கமல்தான் வித்தியாசமானவர்னு பார்த்தால், கமல் கட்சியில் உள்ளவர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள்.
இதனை ஏராளமானோர் வரவேற்று கமெண்ட் போட்டுள்ளனர். கமல்தான் வித்தியாசமானவர்னு பார்த்தால், கமல் கட்சியில் உள்ளவர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications