கேப்டன் பாணியில் ம.நீ.ம. தலைவர் ப்ளஸ் பொதுச்செயலாளராக கமல்ஹாசன்- பழ. கருப்பையா, பொன்ராஜூக்கு பதவி!
சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் பதவியுடன் பொதுச்செயலாளராகவும் நடிகர் கமல்ஹாசன் இருப்பார் என அக்கட்சி அறிவித்துள்ளது.
சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பின்னர் மக்கள் நீதி மய்யத்தின் பெரும்பாலான 2-ம் கட்ட தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறிவிட்டனர். கமல்ஹாசனின் வலது, இடதுகரங்களாக மக்கள் நீதி மய்யத்தில் செயல்பட பலரும் இப்போது இல்லை.

கமல்ஹாசன் காட்டம்
ஒட்டுமொத்தமாக மக்கள் நீதி மய்யம் கட்சி கலகலத்துப் போனது. கட்சியை விட்டு வெளியேறியவர்கள் மீது கமல்ஹாசனும் காட்டமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பரபரப்பை கிளப்பி இருந்தார்.

பொதுச்செயலாளராக கூடுதல் பதவி
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் எஞ்சிய நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பின்னர் அக்கட்சியின் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தலைவராக உள்ள கமல்ஹாசன் கூடுதலாக பொதுச்செயலாளர் பதவியையும் வகிப்பார்.

அரசியல் ஆலோசகர்கள்
மக்கள் நீதி மய்யத்தின் அரசியல் ஆலோசகர்களாக பழ. கருப்பையா, பொன்.ராஜ் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் நீதி மய்யத்தின் கட்டமைப்பு துணைத் தலைவராக ஏஜி மெளரியா, களப்பணியின் துணைத் தலைவராக தங்கவேலு நியமிக்கப்பட்டுள்ளனர்.

யார் யார் புதிய நிர்வாகிகள்?
தகவல் தொழில்நுட்பம், செய்தித் தொடர்பு மாநில செயலாளராக செந்தில் ஆறுமுகம் (சட்ட பஞ்சாயத்து இயக்கம்), கட்டமைப்பு செயலாளராக சிவ. இளங்கோ(சட்டப் பஞ்சாயத்து இயக்கம்), தலைமை நிலைய மாநில செயலாளராக சரத்பாபு, மத்திய நிர்வாக குழு உறுப்பினராக நடிகை ஶ்ரீபிரியா, நற்பணி இயக்க ஒருங்கிணைப்பாளராக நாகராஜ் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விஜயகாந்த் பாணி
தமிழகத்தில் பொதுவாக அரசியல் கட்சிகளில் தலைவர், பொதுச்செயலாளர் பதவிகள் வெவ்வேறு நபர்கள் வசம் இருக்கும். தேமுதிகவில் விஜயகாந்த், தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் பதவியை வைத்துள்ளார். அதே பாணியில் கமல்ஹாசனும் தலைவர், பொதுச்செயலாளர் பதவியை தம் வசம் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications