எத்தனை மகேந்திரன்கள் போனாலும் கட்சி காலியாகாது.. நிரூபித்த மநீம.. பெரும் கூட்டத்துடன் ஆர்ப்பாட்டம்
சென்னை: எத்தனை மகேந்திரன்கள் போனாலும் கட்சி காலியாகாது என்பதை பெரும் கூட்டத்துடன் ஆர்ப்பாட்டம் செய்து தங்களின் பலத்தை நிரூபித்துள்ளது மக்கள் நீதி மய்யம் கட்சி.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் சென்னையில் ஏணிப் போராட்டம் நடைபெற்றது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வை கண்டித்து, மத்திய, மாநில அரசுக்கு எதிராக மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைநகர்களில் இன்று நடைபெற்றது.

மக்கள் நீதி மய்யம்
அதன்படி, சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின்போது, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை 2011 ல் இருந்து 2021 வரை உள்ள விலைப்பட்டியலை ஏணி வடிவில் பதாகைகள் மூலம் வடிவமைத்திருந்தனர்.

விலை உயர்வு
சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி செங்கலில் அடுப்பு போல் வடிவமைத்து விறகு வைத்து தீ மூட்டாமல் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மத்திய அரசே, மோடி அரசே, விற்காதே, விற்காதே, பொதுத்துறையை தனியாருக்கு விற்காதே என கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மக்கள் நீதி மய்யம்
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதை பார்க்கும் போது மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து எத்தனை மகேந்திரன்கள் வெளியேறி மாற்றுக் கட்சியில் இணைந்தாலும் எங்கள் கூடாரம் காலியாகவில்லை என்பதை கட்சியிலிருந்து வெளியேறி மாற்றுக் கட்சிகளில் இணைந்தவர்களுக்கு நிரூபித்துவிட்டது மக்கள் நீதி மய்யம்.

மநீம
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய துணைத் தலைவர் ஏ.ஜி.மெளரியா துரோகம் என்பதை தலைவர் அன்றே குறிப்பிட்டிருந்தார். யார் என்று அடையாளம் தெரியாத நிலையில் இருந்தவர்கள் அடையாளம் பெற்று வியாபாரப் பொருளாக்கி கட்சியில் இணைந்துள்ளனர் இதை வன்மையாக கண்டிக்கிறோம் என தெரிவித்திருந்தார்.
-
பெட்ரோல், டீசல் விலை தொடர் உயர்வு.. சென்னையில் இன்று புதிய உச்சம் தொட்டது.. எவ்வளவு? -
கற்பனைக்கு எட்டாத உச்சத்தில் விலைகள் உயர்வு.. நிர்மலா சீதாராமன் சொன்ன மேஜர் விஷயம் -
ஜூன் துவங்கியதும் அதிர்ச்சி.. இக்கட்டான கட்டத்தில் ஆர்பிஐ.. மக்களே உஷார்! -
நிலைமை கையை மீறிப்போகுது! இன்றும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! சென்னையில் புதிய உச்சம்! -
மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.. உங்களின் 1 வருட பட்ஜெட்டையே காலி செய்யும்.. எப்படி தெரியுமா? -
திணறும் மத்திய அரசு! 1 மணிநேரத்திற்கு ரூ.25 கோடி இழப்பு.. பெட்ரோல், டீசல் விலையை 4 முறை உயர்த்தியும் இப்படி! -
நாடு முழுவதும் அதிரடியாக உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.. பொதுமக்களுக்கு மீண்டும் ஒரு பேரதிர்ச்சி -
“ரூ.10 எக்ஸ்ட்ரா கொடுக்க வேண்டியிருக்கும்..” பெட்ரோல் விலை குறித்து வாயை விட்ட நிர்மலா சீதாராமன் -
இனி நிறுத்த முடியாது.. தக்காளி, வெங்காயம், காய்கறி விலை உயர போகுது.. இடியை இறக்கும் அறிவிப்பு! -
பெட்ரோல், டீசல் மற்றும் எல்.பி.ஜி.. எல்லாமே அடுத்தடுத்து உயருகிறதே.. இனி கட்டுப்படுத்தவே முடியாது! -
திமுகவிற்கு குட்பையா? தனிச்சின்னத்தில் போட்டியிட துடிப்பது ஏன்? சர்ச்சைக்கு நடுவே விளக்கிய ஜவாஹிருல்லா -
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர்












Click it and Unblock the Notifications