ஏற்கனவே தோல்வியடைந்த திட்டம்.. அரசை ஏமாற்றுகிறது ஆவின்.. பால் முகவர்கள் சங்கம் பகிரங்க குற்றச்சாட்டு
சென்னை : நடமாடும் ஐஸ்கிரீம் விற்பனை மையங்கள் ஏற்கனவே அறிமுகம் செய்து அது தோல்வியடைந்த நிலையில் அதனை பட்டி, டிங்கரிங் பார்த்து மீண்டும் அமைச்சர்களை வைத்து மீண்டும் தொடங்கி வைத்திருப்பதாக பால் முகவர்கள் சங்கம் விமர்சித்துள்ளது. ஆவினை மட்டுமல்ல பால் முகவர்களையும், பொதுமக்களையும் காத்திட வேண்டும் என திமுக அரசுக்கு பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பால் முகவர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மூன்று சக்கர மிதிவண்டி மூலம் நடமாடும் ஆவின் ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் மையங்கள் நடைமுறையை கடந்த காலங்களில் ஏற்கனவே இரண்டு, மூன்று முறை அறிமுகம் செய்து அது வெற்றி பெறாமல் போன காரணத்தால் அந்த திட்டத்திற்காக பல லட்சம் ரூபாய் மதிப்பில் மூன்று சக்கர மிதிவண்டி வாகனம், குளிர்சாதன பெட்டி வாங்கி அவை வீணான வகையில் மட்டும் ஆவினுக்கு பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது தான் மிச்சம்.

அமைச்சர்கள் தொடங்கி வைத்த திட்டம் : நடமாடும் ஐஸ்கிரீம் விற்பனை மையங்கள் விஷயத்தில் ஏற்கனவே இரண்டு, மூன்று முறை அறிமுகம் செய்து அது தோல்வியடைந்த நிலையில் அதே திட்டத்தை பழைய மொந்தையில் புதிய கள் என்பதைப் போல அதனை தூசி தட்டி, பட்டி, டிங்கரிங் பார்த்து, அதற்கு இல்லம் தேடி ஆவின் என்கிற புதிய (பெயர் சூட்டி) வண்ணத்தை பூசி மீண்டும் மூன்றாவது முறையாக மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் வாகனம் மூலம் ஆவின் ஐஸ்கிரீம் விற்பனை செய்கின்ற நடைமுறையை முப்பெரும் தேவியர் போல முப்பெரும் அமைச்சர் பெருமக்கள் (உதயநிதி ஸ்டாலின், நாசர், சேகர்பாபு) ஒன்று சேர்ந்து துவக்கி வைத்துள்ளதைப் பார்க்கும் போது இதன் மூலம் ஆவினுக்கு இன்னும் எவ்வளவு கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனரோ? எனத் தெரியவில்லை.
மேலும் தமிழ்நாட்டில் தற்போதுள்ள பால் கொள்முதல் தொடர்பான உண்மை நிலவரத்தை மூடி மறைத்து, முதல்வருக்கும், பால்வளத்துறை அமைச்சருக்கும் தவறான தகவல்களை அளித்து, பொதுமக்கள் மத்தியில் திமுக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் ஏதோ ஒரு மிகப்பெரிய திட்டத்துடன் ஆவின் நிர்வாகம் செயல்பட்டு வருவது மட்டும் தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
ஆவின் நிர்வாகம் மிரட்டல் : ஏனெனில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகம் முழுவதும் உள்ள ஆவின் பாலகங்களுக்கு வெண்ணெய், 100மிலி, 250மிலி நெய், பால்கோவா உள்ளிட்ட அதிகமாக விற்பனையாகும் ஆவின் உபபொருட்கள் தற்போது வரை விநியோகம் செய்யப்படாத சூழலில், ஆவின் பாலகங்களில் முறுக்கு, மிக்சர், லட்டு, குலாப்ஜாமூன், கேக் போன்ற கார, இனிப்பு வகைகளை மட்டும் விற்பனை செய்யச் சொல்லி பால் முகவர்களை நிர்ப்பந்தம் செய்வதும், அவற்றை கொள்முதல் செய்ய மறுக்கும் அல்லது ஆவின் நிர்வாகம் நிர்ணயிக்கும் அளவிற்கு கொள்முதல் செய்யாத பால் முகவர்களுக்கு ஆவின் பாலக உரிமத்தை ரத்து செய்வோம் என மிரட்டுவதையும் ஆவின் நிர்வாகம் தொடர்ந்து வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது.

அதுமட்டுமின்றி தமிழகம் முழுவதும் பச்சை நிற பால் பாக்கெட்டுகளை (நிலைப்படுத்தப்பட்ட பால்) தட்டுப்பாடாக விநியோகம் செய்வது, அந்த வகை பாலில் 1% கொழுப்பு சத்து அளவை குறைத்து பசும் பால் எனக்கூறி மறைமுக விலையேற்றத்தை மக்கள் தலையில் திணித்து அந்த பாலினையும், அதிக விலை கொண்ட நிறைகொழுப்பு (ஆரஞ்சு நிற) பால் பாக்கெட்டுகளையும் மட்டுமே தான் விற்பனை செய்ய வேண்டும் எனவும் பால் முகவர்களை கட்டாயப்படுத்துக்கின்றனர்.
ஆவின் வழக்கம் : பால் கொள்முதல் வரத்து குறைவு காரணமாக மகாராஷ்டிராவில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட Skimmed Milk Powder, Whole Milk Powder மற்றும் வெண்ணெய் மூலம் பால் உற்பத்தி செய்து தருவதால் தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டு வரும் ஆவின் பால் பாக்கெட்டுகள் ஒருவித துர்நாற்றம் வீசும் நிலையில் அதெல்லாம் தவறான தகவல் என போலியாக மறுப்பதுவுமே ஆவின் நிர்வாகத்தின் தற்போதைய வழக்கமாகிப் போனது.
இந்த அறிக்கையை தட்டச்சு செய்து கொண்டிருக்கும் நேரத்தில் கூட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஆவின் பால் துர்நாற்றம் வீசுகிறது என பால் முகவர்கள் வாயிலாக பொதுமக்கள் தெரிவித்த புகார்கள் எங்களது சங்க நிர்வாகிகளுக்கு வந்து, எனக்கு வந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி இன்று (20.04.2023) கூட சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆவின் நிலைப்படுத்தப்பட்ட (பச்சை நிற) பால் பாக்கெட்டுகள் தட்டுப்பாடாகவே விநியோகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசை ஏமாற்றும் ஆவின் : இந்த நிலையில் தான் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மற்றும் நாசர் ஆகியோரை வைத்து பழைய திட்டத்தை புது திட்டம் போல் அறிமுகம் செய்து அரசை ஆவின் நிர்வாகம் ஏமாற்றி வருவதால் அரசு இனியாவது விழித்துக் கொண்டு ஆவினில் தற்போது நிலவும் சூழல் குறித்து நேரடி கள ஆய்வு செய்து ஆவினை மட்டுமல்ல பால் முகவர்களையும், பொதுமக்களையும் காத்திட வேண்டும் என தமிழ்நாடு முதல்வரை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம் என்று தெர்விக்கப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications