தமிழ்நாட்டு ரேஷன் கடைகளில் தொடங்கிய.. மொபைல் முத்தம்மா திட்டம்.. இனி எல்லாமே யுபிஐ! என்னன்னு பாருங்க
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் மொபைல் முத்தம்மா திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த திட்டம் எப்படி செயல்படும் என்று.. இங்கே பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் அரசு சார்ந்த துறைகள் பலவும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. மக்களுக்கு வழங்கப்படும் அடிப்படை சேவைகள் பல டிஜிட்டல் மயமாகிக்கொண்டு இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில்தான் தமிழ்நாட்டில் உள்ள கிராம ஊராட்சிகளில் சேவைகள் டிஜிட்டல் மயமாகி உள்ளன. அதன்படி பொது மக்கள் செலுத்தும் அனைத்து விதமான வரிகளும் ஆன்லைன் மூலமாக பெறப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. பொதுமக்கள் போன் மூலம் யுபிஐ வைத்து பணம் செலுத்த முடியும். இப்போது கிட்டத்தட்ட எல்லோரிடமும் ஸ்மார்ட் போன் உள்ளது.
அதை வைத்து பணம் செலுத்த முடியும். இல்லையென்றால் டெபிட் கார்ட் மூலமாகவும் பணத்தை இனி கிராம பஞ்சாயத்துகளில் செலுத்த முடியும். இந்த புதிய முறை மூலம் நாளை முதல் ஆன்லைன் மூலமாக கட்டணம் பெறப்படும் என்று தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.இதன் மூலம் அரசுக்கு செலுத்தப்படும் பணம் பஞ்சாயத்து அளவில் திருடப்படாமல் நேரடியாக அரசின் கஜானாவிற்கு செல்லும். இதனால் பஞ்சாயத்துகளில் முறைகேடுகள் தவிர்க்கப்படும்.

புதிய திட்டம்: இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் மொபைல் முத்தம்மா திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த திட்டம் எப்படி செயல்படும் என்று.. இங்கே பார்க்கலாம். ஆன்லைன், யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்து ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.
( பிடிஆர் போட்ட கையெழுத்து.. தமிழ்நாட்டில் "இந்த" மாவட்டம் எல்லாம் அடியோடு மாறுது.. வேற லெவல் முடிவு )
இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாடு ரேஷன் கடைகளில் இன்று முதல் பேடிஎம் வழியாக பணம் செலுத்தும் நடைமுறை அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.UPI செயலிகள் வாயிலாக பண பரிவர்த்தனை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முன்பே தமிழ்நாடு அரசு அறிவித்து இருந்தது. அந்த திட்டத்தின் அடிப்படையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இனி மக்கள் எளிதாக பேடிஎம் மூலம் ஸ்கேன் செய்து பணத்தை செலுத்த முடியும்.
இதற்காகவே மொபைல் முத்தம்மா திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதன் மூலம் ரேஷனுக்கு வரும் பெண்களுக்கும் மற்றவர்களுக்கும் க்யூ ஆர் கோடு மூலம் பணம் அனுப்ப ஆலோசனை வழங்கப்படும். அவர்களுக்கு இதை பற்றிய விழிப்புணர்வு, பயிற்சி அளிக்கப்படும். அதேபோல் இந்த திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் படிப்படியாக க்யூ ஆர் கோடு அமைக்கப்பட்டு அதை பற்றிய விளக்கங்கள் அளிக்கப்படும்.

க்யூ ஆர் கோடு ,மூலம் பணம் எப்படி அனுப்ப வேண்டும் என்பதை பற்றி படிப்படியாக இதில் விளக்கம் அளிக்கப்படும். சென்னையில் 1500 ரேஷன் கடைகளில் இந்த திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. உங்களிடம் பேடிஎம் இல்லை என்றாலும் வேறு யுபிஐ வழியாகவும் பணம் செலுத்த முடியும். இந்த பணம் நேரடியாக அரசுக்கு சென்று சேரும். அதனால் மக்கள் பணம் அரசுக்கு சென்று சேர்வதோடு மக்களும் எளிதாக பணத்தை செலுத்த முடியும். மேலும் இதன் மூலம் சில்லறை முறைகேடுகள் பல தடுக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதல் கட்டமாக சென்னை போக ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 நியாய விலை கடைகளில் இந்த திட்டம் கொண்டு வரப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய கூட்டுறவு வங்கியுடன் இணைந்து UPI செயலிகள் வாயிலாக பண பரிவர்த்தனை செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications