Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிடிஆர் போட்ட கையெழுத்து.. தமிழ்நாட்டில் "இந்த" மாவட்டம் எல்லாம் அடியோடு மாறுது.. வேற லெவல் முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இருக்கும் மாவட்டங்களின் தரத்தை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையால் IoT தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி "ஸ்மார்ட் மாவட்ட நிர்வாகம்" என்ற திட்டம் உருவாக்க தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இதற்கான முக்கிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டு உள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ள அறிக்கையில், ஐக்கிய முடியரசின் முன்னணி தொழில்நுட்ப திட்டத்தின் ஒரு பகுதியாக. தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையால் 10T தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஸ்மார்ட் மாவட்ட நிர்வாகம்' என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஐக்கிய முடியரசு தொழில்நுட்ப உதவியை வழங்க உத்தேசித்துள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் அமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாக ராஜன் மற்றும் ஐக்கிய முடியரசின் இந்தோ-பசிபிக். வெளியுறவு. காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அமைச்சர் மாண்புமிகு அனி மேரி டிரவேல்யன் ஆகியோர் முன்னிலையில், கொள்கை ரீதியான ஒத்துழைப்பு கடிதம் இன்று 14.10.2023 தமிழ்நாடு அரசின் மாண்புமிகு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் பரிமாறப்பட்டது.

( 22 வருஷமா நடந்ததே இல்லை.. "அந்த" ஐஏஎஸ்சை மாநகர பேருந்து இயக்குனராக்கி.. ஸ்டாலின் சரவெடி.. ஏன்? .. )

இந்நிகழ்வில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மைச் செயலாளர் திரு. தீரஜ் குமார். இ.ஆ.ப., பிரிட்டிஷ் துணை உயர் ஆணையர் ஆலிவர் பால்ஹாட்செட் MBE. மின்ஆளுமை இயக்குநர்/ தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் தலைமை செயல் அலுவலர் திரு. பிரவீன் பி நாயர். இ.ஆ.ப.. தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மை தொழில்நுட்ப அலுவலர் திரு.ராபர்ட் ரவி. இ.தொ.ப., அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Minister PTR Palanivel Thiagarajan signed an important agreement on Deveolpment of Districts

எப்படி மாறும்: மாவட்ட நிர்வாகங்கள் எதிர்கொள்ளும் சவால்களில் ஒன்று எரிசக்தி, நீர் மற்றும் கழிவுகள் உள்ளிட்ட வளங்களை திறமையாக மேலாண்மை செய்வது ஆகும். வழக்கமான முறைகளில் இதை கண்காணிப்பது அதிக நேரத்தை எடுத்துக் கொள்வதுடன் திறனற்றதாகவும், வள விரயம் மற்றும் அதிக செலவுகளுக்கும் வழிவகுக்கும். தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்கள். குறிப்பாக பயனுள்ள கண்காணிப்பு மற்றும் நேரடியான மூல தரவு கிடைப்பது. நகரங்கள் மற்றும் கிராமங்களில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் தரவு சார்ந்த முடிவெடுக்க உதவும். ஒரு மாவட்டத்தில் அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளையும் டிஜிட்டல் மயமாக்குவது. புதுமைகளை உந்துதல், வேலை வாய்ப்புகளைத் தூண்டுதல் மற்றும் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுதல் போன்ற பலன்களையும் செயல்திறனையும் தருகிறது.

இந்த சூழலில், மாவட்ட நிர்வாகங்கள் எதிர்கொள்ளும் இத்தகைய சவால்களை குறிப்பிடத்தக்க வகையில் எதிர்கொள்ளக்கூடிய ஒரு முக்கிய தொழில்நுட்பமாக இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (loT) வெளிப்படுகிறது. loT தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ஆற்றல் பயன்பாடு. நீர் நுகர்வு. கழிவு மேலாண்மை மற்றும் பிற முக்கிய குறிகாட்டிகள் பற்றிய நிகழ்நேர தரவுகளை சேகரிக்க, மாவட்டம் முழுவதும் சென்சார்கள் அமைக்கலாம். பெறப்படும் தரவை இயந்திரக் கற்றல் வழிமுறைகளைப் பயன்படுத்தி பகுப்பாய்வு செய்து. வடிவங்கள் மற்றும் போக்குகளை அடையாளம் காண முடியும். மேலும் மாவட்ட அலுவலர்கள் வள ஒதுக்கீடு மற்றும் மேலாண்மை பற்றி மேலும் தகவலறிந்த முடிவுகளை எடுக்க முடியும். மேலாண்மைக்கு அப்பால், oT பொது பாதுகாப்பை வள மேம்படுத்தும்.

Minister PTR Palanivel Thiagarajan signed an important agreement on Deveolpment of Districts

இந்த முன்னோடித் திட்டம். மூல மற்றும் விநியோகத்தில் உள்ள நீரின் தரம் மற்றும் அளவைக் கண்காணித்தல், மீனவர்களுக்கான தீர்வுகள், நிலத்தடி வடிகால் மேலாண்மை, சுற்றுச்சூழல் கண்காணிப்பு அமைப்புகள். ஸ்மார்ட் கழிவுத் தொட்டிகள் போன்ற முக்கியமான பயன்பாடுகளை தேர்ந்தெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும். பயனுள்ள பெரிய தரவு பகுப்பாய்வு மூலம் சேகரிக்கப்பட்ட தரவு.

மாநில நிர்வாகத்திற்கு பல்வேறு பயன்பாடுகளை அளிக்கும். குடிமக்கள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கான பல்வேறு அங்கீகாரங்களை எளிதாக்குவதற்கு இந்த அமைப்பு மற்ற அரசு அமைப்புகளுடன் தொடர்பு கொள்ளும். அதைத் தொடர்ந்து. மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களையும் ஒருங்கிணைத்து, நிகழ்நேரத் தரவுகளை வழங்கி, பிக் டேட்டா அனலிட்டிக்ஸ்' மற்றும் பெறப்பட்ட தரவுகளின் தடயவியல் பகுப்பாய்வு ஆகியவற்றை நடத்தி, சமூக சமத்துவம் உள்ளடக்கிய முதலமைச்சரின் தொலைநோக்குப் பார்வையான 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவதற்கு வழிவகுக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+