நிர்மல் குமார் ஒரு ஸ்பை! அவர் சொல்வதை நம்பாதீங்க! புது கதை சொல்லும் ஆர்.பி.உதயகுமார்

Subscribe to Oneindia Tamil

மதுரை: நாங்கள் அனுப்பிய உளவாளி நிர்மல் குமார். அவர் வெகு விரைவில் தவெகவை அழித்துவிட்டு அதிமுகவுக்கே வந்துவிடுவார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: நிர்மல் குமாரை நம்பாதீங்கள். மின்வெட்டு ஏற்பட காரணமே அவர்தான். அவர் தவெகவில் உளவாளியாக இருக்கிறார். தவெகவை அழித்துவிட்டு மீண்டும் அதிமுகவுக்கே வந்துவிடுவார் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

R B Udhayakumar

இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:தமிழ்நாட்டில் த.வெ‌.க ஆட்சி வராது என நினைத்து, அறம், பொருள், இன்பம் என 326 சாத்தியமே இல்லாத, செயல்படுத்த முடியாத திட்டங்களை எல்லாம் நிதி ஆதாரங்களை கணக்கிலே கொள்ளாமல், கானல் நீரைப் போன்ற திட்டங்களை தேர்தல் அறிக்கையில் விஜய் அறிவித்தார்.

அதை நம்பி மக்களும் வாக்களித்தார்கள். இப்போது யாருமே, ஏன் விஜய்யே எதிர்பார்க்காமல், தவெ‌க ஆட்சி அமைந்து 75 நாட்களை நாம் கடந்து சென்றுவிட்டாலும், ஆட்சி அமைத்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் வெளியே வரவில்லை என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

முதல்வர் விஜய் தேர்தல் வாக்குறுதியில் சொன்ன உத்தரவாதத்தின் அடிப்படையில், முதல் முதலாக விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி என்று எதிர்பார்த்த விவசாயிகளுக்கு, விஜயின் அறிவிப்பு ஒரு பேர் இடியை கொடுத்திருக்கிறது.

தேர்தல் அறிக்கையிலே வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு, தற்போது ஆட்சி அமைந்தவுடன் 500 யூனிட் வரை உபயோகிக்கும் மின் பயனாளர்களுக்கு மட்டுமே 200 யூனிட் மின்சார கட்டணம் இலவசம் என்று அறிவிப்பு நடைமுறையிலே வெறும் கண் துடைப்பாகத்தான் இருக்கிறது.

அதுமட்டுமல்ல, தற்போது தமிழகத்தில் மின்சாரம் எங்கே இருக்கிறது என்று தேடுகிற வகையிலே, மின்சாரத்தை காணோம் என்று இருளிலே மூழ்கி இருக்கிறது. நாடு முழுவதும் இரவிலே பொதுமக்கள் போராட்டம் நடத்தாத நாளே இல்லை என்ற நிலைதான் தற்போது இருக்கிறது.

இப்போது அரசு மருத்துவமனையிலே பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை த.வெ.க அரசு அறிவித்திருக்கிறது. இந்த திட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் 4,41,667 குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கினாலே, இதற்கான தங்கத்தின் மதிப்பு மட்டும் ரூபாய் 580.79 கோடி. இதனோடு செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி, ஆகியவற்றை சேர்த்தால் மொத்த செலவு இதற்காக 750 கோடி ஒதுக்கீடு செய்வதாக சொல்லப்பட்டிருக்கிறது.

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த தாய்மாமன் திட்டம் எவ்வளவு பங்களிக்க முடியும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. உலகின் மிகப்பெரிய தங்கம் பயன்படுத்துகிற நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது.

ஆனால் நாட்டில் பயன்படுத்தப்படும் தங்கத்தின் பெரும்பகுதி வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் ஆண்டுதோறும் பல பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான அன்னிய செலவாணி வெளிநாடுகளுக்கு செல்கிறது.

அதன் விளைவாக வர்த்தக பற்றாக்குறை அதிகரிக்கிறது. ரூபாயின் மதிப்பு பலவீனம் அடையும் வாய்ப்பு உருவாகிறது. அன்னிய செலவாணி கையிருப்பிலும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால்தான் பிரதமர் நரேந்திர மோடி பலமுறை தங்கத்தை வீட்டில் குவிப்பதை விட, நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் முதலீடுகளிலே மக்கள் கவனம் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.

புரட்சித்தலைவி அம்மா பள்ளிப்படிப்பை ஊக்குவிக்க பள்ளிப்படிப்பு படித்தவர்களுக்கு 25,000 ரூபாயும், தாலிக்கு தங்கம் வழங்கினார். அதோடு எடப்பாடியார் 4 கிராம் என்பதை 8 கிராமாக உயர்த்தி வழங்கினார்.

மாணவர் விடுதியிலே முதல்வர் விஜய் நேரடி ஆய்வு செய்தார். மாணவர் விடுதியிலே முறையாக மாணவர்களுக்கு இட்லி, தோசை, சப்பாத்தி உள்ளிட்ட உணவுகளை மீண்டும் கொடுப்பதற்கு தமிழ்நாட்டின் முதல்வர் நேரடியாக சென்று ஆய்வு செய்யும் அளவிற்கு தான் த.வெ.க அரசின் நிர்வாகம் சென்று கொண்டிருக்கிறது.

அப்படி என்றால் த.வெ.க அரசில் கொழுந்துவிட்டு எரிகிற மேகதாது புதிய அணை பிரச்சனையை விஜய் எப்படி தீர்ப்பார்? பெண்கள் பாதுகாப்பை எப்படி உறுதி செய்வார்? சட்டம் ஒழுங்கு சீர்கேடை எப்படி மீட்டெடுப்பார்?

போதைப் பொருள் நடமாட்டத்தை எப்படி கட்டுக்குள் கொண்டு வருவார்? என்று கவலையிலும் வேதனையிலும் காலத்தை கடத்திக் கொண்டிருக்கிற தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை அமைச்சர் புஸ்சி ஆனந்த் வெளியிட்டுள்ளார்.

அதில் தமிழகத்திலே மட்டுமல்ல, உலகெங்கும் வெளியிடப்படுகிற ஜனநாயகன் பட வெளியீட்டை திருவிழா போல் கொண்டாட வேண்டும் மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் எல்லோரும் இதிலே பங்கு பெற்று வேண்டும் என கூறியுள்ளது வேதனையிலும் வேதனை என ஆர்.பி. உதயகுமார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+