22 வருஷமா நடந்ததே இல்லை.. "அந்த" ஐஏஎஸ்சை மாநகர பேருந்து இயக்குனராக்கி.. ஸ்டாலின் சரவெடி.. ஏன்?
சென்னை: நேற்று தமிழ்நாட்டில் பல ஐபிஎஸ் அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த இடமாற்றத்தில் கவனிக்கப்பட்ட முக்கிய விஷயம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் இடமாற்றம்தான்.
சுமார் 22 வருட இடைவெளிக்குப் பிறகு, சென்னை பெருநகரப் போக்குவரத்துக் கழகத்தின் (எம்டிசி) நிர்வாக இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான், நேற்று நியமிக்கப்பட்டார். ஸ்வரன் சிங் 2001 இல் MTC க்கு தலைமை தாங்கிய கடைசி IAS அதிகாரி ஆவார். இதுவே கழகம் லாபத்தை பதிவு செய்த கடைசி முறையாகும்.
பஸ் டிக்கெட் விற்பனை மூலம் வருவாயை மேம்படுத்துவதில் அவர் முக்கிய சீர்திருத்தங்களுக்கு பெயர் பெற்றவர். MTC தொழிலாளர் சங்கங்கள் இந்த நடவடிக்கையை வரவேற்றன. அதன்பின் அங்கே ஐஏஎஸ் அதிகாரி நியமனம் செய்யப்படவே இல்லை. அவரை தொடர்ந்து.. எம்டிசி துறையும் தொடர்ந்து சரிவை சந்தித்தது. கடனை சந்தித்தது.
முக்கியமாக சரியான நிர்வாகம் இல்லை என்பதால் MTC பல நூறு கோடிகள் மதிப்பிலான பெரும் இழப்புடன் போராடி வருகிறது. மேலும் இந்த குழப்பத்தை துடைக்க திறமையான உயர் நிர்வாக தலைவர்கள் தேவை. ஆனால் தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரி இல்லாதவர்களே இங்கே இயக்குனர்களாக நியமனம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் அல்பி ஜான் இந்த துறையின் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

அல்பி ஜான் ஏன்?: ஸ்டிரிக்ட் அதிகாரி என்று பெயர் எடுத்த, துடிப்பான இளம் ஐஏஎஸ்அதிகாரிகளை தமிழ்நாடு அரசு ஆட்சியர்களாக, இயக்குனர்களாக நியமித்து வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் அடுத்தடுத்து மாற்றப்பட்டு வரும் நிலையில், திருவள்ளூவர் மாவட்ட ஆட்சியரின் நியமனம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக ஆல்பி ஜான் வர்கீஸ் நியமனம் செய்யப்பட்ட போதே அது பெரிய வரவேற்பு பெற்றது.
( ராஜயோகம் அடிக்க போகுது.. ஸ்டாலின் அறிவித்த மெகா திட்டம்.. யாருக்கெல்லாம் பயன்? இதை பாருங்க!)
கேரளாவின் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ஆல்பி ஜான் வர்கீஸ். இவர் ஐஏஎஸ் ஆகும் முன் மருத்துவம் படித்தவர். திருச்சூரில் மருத்துவம் படித்துவிட்டு, அதன்பின் யுபிஎஸ்சியில் இருந்த ஆர்வம் காரணமாக, யுபிஎஸ்சி தேர்வு எழுதினார். இந்திய அளவில் தேர்வு எழுதியவர்களில் ரேங்க் 4 எடுத்து அசத்தினார். நேராக தமிழ்நாட்டில் போஸ்டிங் பெற்றவர், 2015ல் தேவக்கோட்டை துணை ஆட்சியர், 2018ல் தூத்துக்குடி ஆணையர், அதன்பின் 2020 சென்னை சுகாதார இணை இயக்குனர் பொறுப்புகளை கவனித்து வந்தார்.

இந்த நிலையில் சென்னை சுகாதார இணை இயக்குனராக அல்பி ஜான் செய்த பணிகள் பெரிய வரவேற்பை பெற்றன. சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளில் இவர் மிகவும் சிறப்பாக செயல்பட்டார். மாநகராட்சியுடன் இணைந்து சென்னையில் கொரோனா பரவலை 7000ல் இருந்து 1000க்கும் கீழ் கொண்டு செல்வதில் இவரின் பங்கு முக்கியமாக இருந்தது.
கொரோனா காலத்தில் இவர் மிகவும் சிறப்பாக செயல்பட்டார். மருத்துவர் என்பதாலும், சுகாதார துறையில் நல்ல அனுபவம் கொண்டவர் என்பவர் என்பதாலும், சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார். அதோடு சமூக வலைத்தளங்களில் மக்களின் கோரிக்கைக்கு உடனே பதில் அளிப்பது. சமூக வலைத்தளம் ,மூலம் சென்னை மக்களோடு தொடர்பில் இருப்பது, தடுப்பு பணிகளை கண்காணிப்பது என்று மக்களுக்கு நெருக்கமாக ஆல்பி ஜான் வர்கீஸ் இருந்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications