இது ஒலிம்பிக் நடக்கும் இடமல்ல.. தஞ்சையில் அமைய உள்ள "விளையாட்டு நகரம்".. வாவ்.. மாஸ்டர் பிளான்!
சென்னை: தஞ்சாவூர்- திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள செங்கிப்பட்டியில் அமைய உள்ள விளையாட்டு நகரத்தின் மாதிரி புகைப்படம் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு அரசு கடந்த சில மாதங்களாக விளையாட்டு துறை மீது அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறது. சமீபத்தில் சென்னையில் செஸ் ஒலிம்பியாட் நடைபெற்றது.
உலக அளவில் இப்படி ஒரு செஸ் ஒலிம்பியாட் நடந்தது இல்லை என்று மெச்சும் அளவிற்கு மிக பிரம்மாண்டமாக இந்த தொடர் நடைபெற்றது. அதன்பின் மகளிர் டென்னிஸ் சென்னை ஓபன் நடைபெற்றது.

சென்னை
இப்படி தமிழ்நாடு அரசு விளையாட்டு போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில்தான் தமிழ்நாடு வீரர்களை தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் தயார் செய்யும் திட்டங்களை தமிழ்நாடு அரசு கையில் எடுத்துள்ளது. மேலும் உலக அளவில் தமிழ்நாட்டை விளையாட்டிற்கான இருப்பிடமாக மாற்றும் திட்டத்திலும் தமிழ்நாடு அரசு களமிறங்கி உள்ளது. இதற்காக விளையாட்டு நகரம் அமைக்கும் திட்டத்தையும் அரசு கையில் எடுத்துள்ளது.

விளையாட்டு நகரம்
இதற்காக தஞ்சாவூர்- திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள செங்கிப்பட்டியில் விளையாட்டு நகரம் அமைக்க இடம் கண்டறியப்பட்டுள்ளது. சென்னை அருகே இடம் கிடைக்காத நிலையில் திருச்சி அருகே இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சர்வதேச போட்டிகளை நடத்தும் விதமாகவும், சர்வதேச அளவில் தமிழ்நாடு வீரர்களை தயார் செய்யும் விதமாகவும் இந்த நகரம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான கட்டுமான விரைவில் தொடங்க உள்ளது.

மாதிரி படம்
இந்த நிலையில்தான் தற்போது இந்த விளையாட்டு நகரத்தின் மாதிரி புகைப்படம் வெளியாகி உள்ளது. சர்வதேச நாடுகளில் இருப்பது போன்ற பிரம்மாண்ட விளையாட்டு அரங்கத்தின் புகைப்படம் வெளியாகி உள்ளது மிகப்பெரிய முகப்பு அரங்கு இதில் அமைக்கப்பட்டு உள்ளது. நான்கு கால்பந்து அரங்குகளும் இதில் அமைக்கப்பட்டு உள்ளன. அதேபோல் 4 டென்னிஸ் கோர்ட்கள் இங்கே அமைக்கப்பட்டு உள்ளன.

சிறப்பான தோற்றம்
உள் விளையாட்டு அரங்குகளும் அமைக்கப்பட்டு உள்ளன. அதற்காக தனியாக மிகப்பெரிய அரங்கு இங்கே உருவாக்கப்பட்டு உள்ளது. தடகள போட்டிகளுக்கான அரங்கு தனியாக இன்னொரு இடத்தில் வைக்கப்பட்டு உள்ளன. மற்ற விளையாட்டு அரங்குகள் முகப்பு பகுதிக்கு பின்பாக அமைக்கப்பட்டு உள்ளன. தொடக்க விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தும் அரங்குகளும் இங்கேயே அமைக்கும்படி வடிவமைக்கப்பட்டு உள்ளன. இதன் மாதிரி படம்தான் தற்போது வெளியாகி உள்ளது.

ஒலிம்பிக்
இதில் மிகப்பெரிய அளவில் பார்க்கிங் வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. பார்க்கவே வியக்க வைக்கும் வகையில் இந்த மாதிரி படம் உள்ளது. இதை பகிர்ந்து, இது அடுத்த ஒலிம்பிக் நடக்கப்போகும் இடமல்ல! அடுத்த ஆசிய போட்டிகள் நடக்கவிருக்கும் இடமுமல்ல! திருச்சி-தஞ்சாவூர் பைபாஸ்ல் அமையவுள்ள TN Govt விளையாட்டு நகர அமைப்பின் படம் என்று இந்த ட்விட்டர் பக்கத்தில் கூறப்பட்டு உள்ளது. இங்கே ஒலிம்பிக் போட்டிகள் நடந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
-
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ் -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications