காலையில் சுட்டெரித்த வெயில்..சென்னையில் திடீரென திரண்ட மேகங்கள்! இடி மின்னலுடன் கொட்டிய கனமழை
சென்னை: காலையில் இருந்தே சென்னையில் பல பகுதிகளில் வெயில் சுட்டெரித்த நிலையில் பிற்பகல் நேரத்தில் கருமேகங்கள் திரண்டு கனமழையாக கொட்டித்தீர்த்தது. அடுத்த 5 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், தற்போது சென்னையின் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கூட மிதமான மழை பெய்து வருகிறது
சென்னையில் கடந்த வாரம் இயல்பை விட அதிக அளவில் மழை பொழிந்தது. பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியது. தமிழ்நாட்டின் கடந்த வாரம் மழை பெய்த நிலையில் இரு தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. வேலூர், மதுரை மட்டுமல்லாது சென்னை உள்ளிட்ட நகரங்களிலும் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட் வரை கொளுத்தியது. அக்னி வெயில் முடிந்த பின்னர் கூட வெயிலின் தாக்கம் குறையாமல் இருந்தது. அதேபோல பருவமழையும் சற்று தாமதமாக தொடங்கியது.

இந்நிலையில் இன்றைய நிலவரத்தை பொறுத்த அளவில் தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வட தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
காலை நேரத்தில் சென்னையில் வெயில் சுட்டெரித்த நிலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்தது. குளிர்ந்த காற்று வீசியது. இடி மின்னலுடன் மழை கொட்டித்தீர்த்தது.
சென்னையில் புறநகர் பகுதிகளான முகப்பேர், பூந்தமல்லி, வில்லிவாக்கம், ரெட்டேரி, மாதவரம் போன்ற பகுதிகளிலும், நகர் பகுதிகளான கோடம்பாக்கம், சூளைமேடு, அரும்பாக்கம், அண்ணாநகர் போன்ற இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது. இந்த மழை மேலும் 5 நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications