"இந்த காலத்தில் நடிகர் திலகம் என்றால் அது பிரதமர் மோடி தான்".. ப.சிதம்பரம் அட்டாக்!
சென்னை: "நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மேலான நடிகராக பிரதமர் மோடி உள்ளார். இந்த காலத்தில் நடிகர் திலகம் என்றால் அது பிரதமர் மோடி தான்." என்று முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளோடு இன்று ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ப. சிதம்பரம், "100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை மாற்றி உள்ளது மிகப் பெரிய பாதிப்பு. இது மிகப்பெரிய பாதக செயல். மகாத்மா காந்தி படுகொலைக்கு ஈடான படுகொலை 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை மாற்றியது. இரண்டாவது முறையாக காந்தியை கொலை செய்துள்ளனர்.

இது நாங்கள் அறிமுகப்படுத்திய திட்டம் அல்ல. நாங்கள் அறிமுகப்படுத்திய திட்டத்தில் நாடு முழுவதும் பணி நடக்கும். ஆனால் தற்போது எந்த மாநிலத்தில் மத்திய அரசு பணி சொல்கிறதோ அந்த இடத்தில் மட்டும் தான் பணி செய்ய வைக்கின்றனர். நாங்கள் அறிவித்த திட்டத்தில் வேலை கேட்டால் வேலை கொடுக்க வேண்டும். வேலை கொடுக்கவில்லை என்றால் வேலையின்மை படி கொடுக்க வேண்டும். ஆனால் தற்போது வேலை கொடுத்தால் தான் வேலை கேட்க வேண்டும்.
நாங்கள் அறிவித்த திட்டத்தில் மத்திய அரசு தான் முழு ஊதியத்திற்கும் பொறுப்பு. பொருட்களில் 90% ஒன்றிய அரசு பொறுப்பு. 10% தான் மாநில அரசு பொறுப்பு. இப்போது அப்படி இல்லை. மொத்த செலவில் 60 சதவீதம் தான் மத்தி அரசு பொறுப்பு. 40% மாநில அரசின் பொறுப்பு. மாநில அரசே ஏற்கனவே பணத் தட்டுப்பாடு, வருவாய் தட்டுப்பாடு என கடன் வாங்குகிறார்கள். மத்திய அரசுடைய ஒப்புதலோடு கடன் வாங்குகிறார்கள். 40% மாநில அரசு பொறுப்பு என்றால் எத்தனை மாநிலங்கள் இதை செய்வார்கள்?
இப்படி செய்வதால் மாநிலம் முழுவதும் இந்த திட்டத்தை செயல்படுத்தாமல் முதலில் நான்கு மாவட்டங்களில் செயல்படுத்துவார்கள் பிறகு ஆண்டு முழுவதும் இந்த வேலையை அறிவிக்காமல் இரண்டு மாதத்திற்கு அறிவியுங்கள் என்று சொல்வார்கள். மாநில அரசு மிகப்பெரிய நிதிச் சுமையை சுமக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. அதனால் இந்த திட்டம் நாங்கள் அறிவித்த திட்டத்திற்கு நேர் எதிரானது. இதற்கு கேரண்டியே கிடையாது நாங்கள் அறிவித்த திட்டத்திற்கு கேரண்டி உத்தரவாதம் இருந்தது. இப்போது இந்த திட்டத்திற்கு யார் கேரண்டி? மத்திய அரசும் கேரண்டி கிடையாது. மாநில அரசும் கேரண்டி கிடையாது.
மகாத்மா காந்தி பெயரால் அறிவித்த 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை சிதைத்து புதைத்து விட்டனர். இது இவர்களின் சொந்த திட்டம். அந்தத் திட்டத்தில் வாய்க்குள் நுழையாத பெயர். மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்டம் என்றால் அனைவருக்கும் புரியும். எந்த மொழியில் மொழிபெயர்த்தாலும் மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்டம் தான். இப்போது இந்தத் திட்டத்தின் பெயர் விபிஜிராம்ஜி என்று வைத்துள்ளனர். அதில் ராம் இருக்கு என்று நினைக்க வேண்டாம். ராமில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது. இது அவர்களுக்கே புரியாது.
சொற்களை ஆங்கில எழுத்துக்களில் எழுதுகிறார்கள். இதில் என்ன வேடிக்கை என்றால் இந்தி பேசுகின்ற இந்தி மட்டும் தெரிந்த எம்.பி இதை படித்தார்கள் என்றால் அவர்கள் படிக்கவே முடியாது. இந்தி அல்லாத எம்பிக்கள் இந்திய அல்லாத மக்கள் இதை படிக்கலாம் ஆனால் புரியாது. விபிஜி ராம்ஜி என்றால் யாருக்காவது புரிகிறதா? எனக்கு தெரியாது.
ஒரு பக்கம் கிறிஸ்தவ மக்கள் மீது தாக்குதல் நடத்துவார்கள். ஒரு பக்கம் 11 ஆண்டுகள் கழித்து கிறிஸ்துமஸ் பண்டிகையில் பிரதமர் மோடி கலந்து கொள்வார். இது என்ன வேடிக்கை. நல்லவேளை, மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவரது காலத்தில் நடித்து நடிகர் திலகம் என்று பெயர் எடுத்தார். இந்த காலத்தில் நடிகர் திலகம் என்றால் அது பிரதமர் மோடி தான்.
அமித் ஷா பீகாரை போன்று தமிழ்நாட்டிலும் வெற்றி பெறுவோம் என்று தான் கூறுவார் நாங்கள் தோற்போம் என்றா கூறுவார். விஜய் பற்றி எல்லாம் என்னிடம் கருத்து கேட்காதீர்கள். நாங்கள் எங்கள் தலைமையின் அறிவிப்பு படி திமுக கூட்டணியில் இருக்கிறோம். அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்த ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு பேசிய பிறகு அறிக்கை தந்த பிறகு இரு கட்சி தலைவர்களும் பேசி முடிவெடுப்பார்கள்" என்று தெரிவித்தார்.
மேலும், எஸ்.ஐ.ஆர் பற்றி பேசிய ப.சிதம்பரம், "எஸ்ஐஆர் ஐ நாங்கள் எதிர்க்கவில்லை. ஒரு ஊரில் 13 பேர் உயிருடன் இருக்கிறார்கள், அவர்கள் விடுபட்டு இருக்கிறார்கள். இறந்தவர்களை விட்டு விடலாம். இரட்டை பதிவை விட்டு விடலாம். முகவரியே இல்லாமல் இருக்கிறார்கள். உங்களுக்கெல்லாம் முகவரி இல்லாதவர்களை எத்தனை பேரை தெரியும். 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர் முகவரி இல்லாமல் இருக்கிறார்களா?
எனக்கு முகவரி இல்லாதவர்களை யாரையும் தெரியாது. தூய்மை பணியாளர்கள் கூட ஏதோ ஒரு முகவரியில் இருக்கிறார்கள். தமிழகத்தில் இருக்கக்கூடிய ஒன்பது பேரில் ஒருவருக்கு முகவரியே கிடையாதா? இதைவிட ஒரு வேடிக்கையை நான் பார்த்ததே கிடையாது. இது மிகப்பெரிய மோசடி." எனத் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications