Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“ரோஸ்” தந்த ஈபிஎஸ், ஓபிஎஸ்.. ஒன்னா இரட்டை இலையில போட்டியிடனும்.. “டோஸ்” விட்ட மோடி? மாஜி தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று திண்டுக்கல் வந்த நரேந்திர மோடியை சந்தித்த எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்திடம், ஒற்றுமையாக இருக்குமாறும் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடுமாறும் பிரதமர் அறிவுறுத்தியதாக அதிமுகவை முன்னாள் ஐடி அணி செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் பதவி யாருக்கு என்ற போட்டியால் எடப்பாடி பழனிசாமி, ஒ.பன்னீர்செல்வம் இடையே உட்கட்சிப்பூசல் கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து வருகிறது.

கடந்த ஜூன் 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு நடத்திய பொதுக்குழு கூட்டம் செல்லாது என உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார்.

 உத்தரவு ரத்து

உத்தரவு ரத்து

எடப்பாடி பழனிசாமியின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி பறிபோனது. இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு செய்தது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற இருவர் அமர்வு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.

 மீண்டும் பதவி

மீண்டும் பதவி

இதனால் மீண்டும் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் ஆனார். இதனை தொடர்ந்து அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி முழுமையாக மகுடம் சூட்டிக்கொள்ளலாம் என்ற திட்டத்தில் வேகமாக காய்களை நகர்த்தினார் எடப்பாடி பழனிசாமி.

 ஓபிஎஸ் செக்

ஓபிஎஸ் செக்

அதே நேரம் பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஓ.பன்னீர்செல்வம். அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த இடைக்கால தடை விதித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பல கட்ட ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.

 டெல்லி ஆதரவு

டெல்லி ஆதரவு

இந்த உத்தரவை தொடர்ந்து மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு நம்பிக்கை எழவே அடுத்தடுத்த வேலைகளில் இறங்கி இருக்கின்றனர். குறிப்பாக டெல்லியின் ஆதரவு தனக்கே இருப்பதாக கூறி ஆதரவாளர்களுக்கு நம்பிக்கை அளித்து வருகிறார் ஓ.பன்னீர்செல்வம்.

 மோடி வருகை

மோடி வருகை

இந்த சூழலில்தான் நேற்று திண்டுக்கல் வருகை தந்தார் பிரதமர் நரேந்திர மோடி. திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அவர், தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல இசையமைப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தார்.

 மோடிக்கு ரோஸ்

மோடிக்கு ரோஸ்

இதனை தொடர்ந்து அவர் மதுரை விமான நிலையத்திலிருந்து டெல்லி புறப்பட்ட நிலையில் அவருக்கு முன்னாள் முதலமைச்சரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோரும் வழியனுப்ப சென்றனர்.

 அஸ்பயர் சுவாமிநாதன்

அஸ்பயர் சுவாமிநாதன்

அப்போது எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அருகருகே நின்றபடி பிரதமர் நரேந்திர மோடியிடம் சிரித்துக் கொண்டே ரோஜா வழங்கினர். இந்த புகைப்படம் அதிகளவில் பகிரப்பட்டு வரும் நிலையில், இருவரிடமும், "அனைவரும் ஒன்றிணையுங்கள் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் இருவருக்கும் மதுரை விமான நிலையத்தில் அறிவுரை." என அதிமுக முன்னாள் ஐடி அணி செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+