விகடன் இணையதளம் முடக்கப்பட்ட விவகாரம்.. சட்ட நடவடிக்கை எடுக்கும் விகடன் குழுமம்
சென்னை: விகடன் இணையதளத்தில் சமீபத்தில் பிரதமர் மோடி குறித்து கார்ட்டூன் வெளியிடப்பட்டதையடுத்து, பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் அந்த இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. விகடன் இணையதளம் முடக்கப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், விகடன் இணையதளத்தை மீட்பதற்கான சட்டப்பூர்வமான முயற்சிகளை விகடன் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
சமீபத்தில் பிரதமர் மோடி குறித்த கேலிச் சித்திரம் ஒன்று விகடன் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு அருகில் பிரதமர் மோடி சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் அமர்ந்துள்ளது போல கார்ட்டூன் விகடன் பிளஸ்ஸில் வெளியானது. இந்த கார்ட்டூன் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அளித்த புகாரையடுத்து, விகடனின் இணையதளம் கடந்த 15 ஆம் தேதி முடக்கப்பட்டது.

இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் விகடன் இணையதளம் முடக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எல்.முருகன் மற்றும் பாஜக ஆதரவாளர்கள் அந்த கார்டூன் குறித்து விமர்சித்து வந்தனர்.
இதுகுறித்து விகடன் நிறுவனம் தங்களது எக்ஸ் தள பக்கத்தில், "விகடன் இணையதளம் மத்திய அரசால் முடக்கப்பட்டுள்ளதாக பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. பல இடங்களில் பலருக்கு விகடன் தளம் வேலை செய்யவில்லை. எனினும் மத்திய அரசிடம் இருந்து இதுவரையிலும் விகடன் இணையதளம் முடக்கப்பட்டதாக எந்த முறையான அறிவிப்பும் வரவில்லை.
முன்னதாக விகடன் இணைய இதழான 'விகடன் ப்ளஸ்' இதழில் (பிப்ரவரி 10, திங்கள்) அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டதையும் பிரதமர் மோடி அது குறித்து பேசாமல் இருந்ததையும் குறிக்கும் விதமாக ஒரு கார்ட்டூன் வெளியிடப்பட்டு இருந்தது. இது பா.ஜ.க ஆதரவாளர்களால் விமர்சிக்கப்பட்டதோடு, பா.ஜ.க மாநில தலைவரான அண்ணாமலையால் விகடன் நிறுவனத்துக்கு எதிராக மத்திய அரசிடம் புகாராகவும் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் பல இடங்களில் விகடன் இணையதளத்தை பயன்படுத்த முடியவில்லை என்று வாசகர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அரசு தரப்பில் இதுவரை விகடன் இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக எந்த அறிவிப்பும் வரவில்லை. நூற்றாண்டு காலமாக விகடன் கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எப்போதும் கருத்து சுதந்திரத்தை முன்வைத்தே இயங்குகிறோம், இயங்குவோம்.. ஒரு வேளை இந்த அட்டைப்படம் காரணமாக மத்திய அரசால் இணையதளம் முடக்கப்பட்டிருந்தால், அதனையும் சட்டப்படி எதிர்கொள்வோம் என்பதை தெரிவித்துகொள்கிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், எந்தவித முறையான முன்னறிவிப்பும் இல்லாமல் விகடன் குழும இணையதளத்தை மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் முடக்கியது. இதுதொடர்பான விசாரணை பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெற்றது. மோடி குறித்த அந்த கார்ட்டூன் கருத்துச் சுதந்திரத்தின் வெளிப்பாடு என விகடன் தரப்பில் விரிவான விளக்கம் தரப்பட்டது.
இதைத்தொடர்ந்து, பிப்ரவரி 25 ஆம் தேதி இரவு இதுதொடர்பான மத்திய அரசின் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சக இறுதி உத்தரவு விகடனுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்ட நிபுணர்களுடன் விகடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. கருத்துச் சுதந்திரத்தை காப்பதுடன், விகடன் தளத்தை மீட்பதற்கான சட்டப்பூர்வமான முயற்சிகளையும் விகடன் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications