‛முதுகெலும்பில்லாத’.. ஒடிசா ரயில் விபத்தால் மோடி மீது சுளீர் ‛அட்டாக்’.. சு.சாமிக்கு வந்ததே கோபம்
சென்னை: ஒடிசா ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 300யை நெருங்கும் நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி பிரதமர் மோடியை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே ஷாலிமாரில் இருந்து சென்னை நோக்கி நேற்று முன்தினம் கோரமண்டல் விரைவு ரயில் வந்து கொண்டிருந்தது. இந்த ரயில் ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் தடம்புரண்டது. சரக்கு ரயில் மீது மோதியதில் அந்த ரயில் தடம் புரண்டது. மேலும் கோரமண்டல் விரைவு ரயில் பெட்டிகள் அருகே உள்ள தண்டவாளத்தில் விழுந்தது.

இந்தவேளையில் அந்த தண்டவாளத்தில் வந்த யஷ்வந்த்பூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. ஒரே நேரத்தில் அடுத்தடுத்து இப்படி 3 ரயில்கள் விபத்தில் சிக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 290யை தாண்டி 300யை நெருங்குகிறது. ரயில் விபத்துக்கான சரியான காரணம் பற்றி தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் தான் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛தண்டவாளத்தில் வேகமாக செல்லும் ரயில் தற்போது விபத்து நடந்த தண்டவாளத்தில் அனுமதிக்கப்பட்டது இல்லை. ஏனென்றால் அந்த தண்டவாளம் மெதுவாக செல்லும் ரயிலுக்கான. இதனால் பிரதமரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் ரயில்வே அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
திறமையற்ற அல்லது திறமையான அதேநேரத்தில் பொருத்தமற்ற முதுகெலும்பில்லாத சேலாக்களை(சமஸ்கிருதத்தில் குருவை பாலோ செய்யும் நபர்) அமைச்சர்களாக நியமிப்பதில் மோடி உலக புகழ்பெற்றவர். இதற்கு தற்போது விலை கொடுத்து வருகிறார். திறமையற்ற ஆனால் விசுவாசமான சேலாவின் தலைவராக பிரதமர் மோடி இருக்கிறார் என்பதற்கு மணிப்பூர் கலவரம் மற்றொரு உதாரணமாகும்'' என கூறியுள்ளார்.
இதன்மூலம் பிரதமர் மோடி தன்னை தீவிரமாக பின்பற்றும் அமித்ஷா, அஸ்வினி வைஷ்ணவுக்கு மத்திய அமைச்சர்கள் பதவி வழங்கி இருப்பதாகவும், மணிப்பூர் வன்முறை என்பது மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷாவின் திறமையின்மையாலும், தற்போதைய ரயில் விபத்து என்பது மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் நிர்வாக திறமையின்மையின் காரணமாக தான் நடந்துள்ளதாக சுப்பிரமணியன்சாமி சாடியுள்ளார்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications