Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு ரூபாய்க்கு 2 ரூபாய் கொடுக்கிறோம்.. தடுக்காமலாவது இருங்க.. தமிழக அரசு மீது அண்ணாமலை பாய்ச்சல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழர்கள் செலுத்திய ஒரு ரூபாய் வரிக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இரண்டு ரூபாய் திருப்பி கொடுத்துள்ளது என்றும் அதை ஊழல் செய்யாமல் மக்களிடம் சென்று உங்களால் சேர்க்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை அதை தடுக்காதீர்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழகத்தில் மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னையில் பெருமழை பெய்தது. அதேபோல கடந்த வாரம் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி,தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெருமழை பெய்தது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. அதேபோல் விவசாய பயிர்களும் கடுமையாக சேதம் அடைந்தன. தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னமும் கூட முழுமையாக இயல்பு நிலை திரும்பாத நிலையே உள்ளது.

 Modi government has returned two rupees for one rupee tax paid by Tamils, Annamalai

தமிழகத்தை உலுக்கிய இந்த பேரிடரை, தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த நிலையில், நேற்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், "மாநிலங்களில் ஏற்படும் இயற்கை சீற்றங்களை தேசிய பேரிடர் என அறிவிக்கப்படுவது இல்லை. தேசிய பேரிடர் என்கிற அறிவிப்பை வெளியிடும் நடைமுறையே மத்திய அரசிடம் இல்லை.

திமுக அமைச்சர்களுக்கு சில கேள்விகள்: ஒவ்வொரு வருடமும் மாநில பேரிடர் நிதிக்கு மத்திய பேரிடர் நிதியில் இருந்து பணம் வழங்குவது உண்டு. இந்த நிதியாண்டில் ரூ.813.15 கோடி தமிழக அரசிடம் இருந்துள்ளது. இந்த வருடத்துக்கு மாநில பேரிடர் நிதிக்கு மத்திய அரசு ரூ.900 கோடி கொடுக்க வேண்டியது. இதில் முதல் தவணையாக ரூ.450 கோடியை இந்த புயல் வருவதுக்கு முன்னதாகவே கொடுத்துவிட்டோம். இரண்டாவது தவணையாக மீதமுள்ள ரூ.450 கோடியை தென்மாவட்ட மழை வெள்ளம் ஏற்படும் முன்னதாகவே டிசம்பர் 12ம் தேதி கொடுத்துவிட்டோம். என்று பேசினார்.

இந்த நிலையில் தமிழக பாஜைக தலைவர் அண்ணாமலையும் தமிழர்கள் செலுத்திய ஒரு ரூபாய் வரிக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இரண்டு ரூபாய் திருப்பி கொடுத்துள்ளது என்று தனது எக்ஸ் தளத்தில் ட்விட் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய உண்மைகள் திமுக அமைச்சர்களை கடுமையாக பாதித்திருப்பதாக அறிகிறேன். தமிழக மக்கள் செலுத்திய வரியை தான் கேட்கிறோம் என்று வழக்கம் போல் திசை திருப்பும் வேலையில் இறங்கியுள்ள திமுக அமைச்சர்களுக்கு சில கேள்விகள்.

4000 கோடி ரூபாய்: தமிழக மக்களின் வரி பணத்தில் இருந்து கோபாலபுரத்தின் இளவரசரும் மாப்பிள்ளையும் ஒரே ஆண்டில் 30,000 கோடி ரூபாய் முறைகேடாக சம்பாதித்தார்கள் என்று நாங்கள் சொல்லவில்லை, தமிழகத்தின் முன்னாள் நிதி அமைச்சர் சொன்னார். அந்த 30,000 கோடி எங்கே என்று தான் நாங்கள் கேட்கிறோம். #DMKFiles வெளியிட்ட போது நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் கிளை நிறுவனமான நோபல் ப்ரிக்ஸ் நிறுவனமும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையும் ஒரே விலாசத்தில் இயங்குவதை சுட்டி காட்டி துபாயிலிருந்து நோபல் ஸ்டீல் நிறுவனத்திடம் இருந்து வருவதாக சொன்ன 1000 கோடி ரூபாய் முதலீடு குறித்து கேள்வி எழுப்பியிருந்தோம்.

முறைகேடாக கொள்ளையடித்த மக்கள் வரிப்பணத்தை முதலீடாக கொண்டுவருகிறீர்களா என்ற கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை. 4000 கோடி ரூபாய் மழைநீர் வடிகால் பணிகளில் 98 சதவீதம் முடித்துவிட்டோம் என்று தமிழக முதல்வர் உட்பட திமுக அமைச்சர்கள் அனைவரும் சொன்ன போது, நீங்கள் சொன்னது எல்லாம் பொய், 42 சதவீதம் பணிகள் தான் முடிந்துள்ளது என்று நாங்கள் சொல்லவில்லை, திமுக அமைச்சர் கே என் நேரு சொன்னார்.

இந்தி கூட்டணியில் பங்கேற்க: 98 சதவீதம் நிறைவடைந்ததாக சொல்லப்பட்ட பணிகளுக்கு செலவிட்ட தொகை என்ன ஆனது என்று தான் நாங்கள் கேட்கிறோம். ஊழல் புகாரில் ஒரு அமைச்சர் சிறையில் உள்ளார். நேற்று மற்றொரு திமுக அமைச்சர் பொன்முடி ஊழல் புகாருக்கு சிறை தண்டனை பெற்று சிறை செல்லவுள்ளார். இது மட்டுமில்லாமல், திமுக அமைச்சரவையில் 10 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது.

மக்கள் வரிப்பணத்தை ஊழல் செய்து சிறை தண்டனை பெறும் நீங்கள் மக்கள் வரி பணத்தை எவ்வாறு செலவிட வேண்டும் என்று பாடம் எடுக்க வேண்டாம். புழல் சிறையில் திமுக அமைச்சர்களுக்கென ஒரு தனி கட்டிடம் உருவாக்குங்கள். ரோம் நகர் பற்றி எரியும் போது ஃபிடில் வாசித்ததாக சொல்லப்படும் நீரோ மன்னன் போல தென் தமிழகத்தில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் தவித்த போது தமிழக முதல்வர் திரு முக ஸ்டாலின் இந்தி கூட்டணி சந்திப்பில் பங்கேற்க டெல்லி சென்றிருந்தார்.

பீகார் முதல்வர் அவமானப்படுத்திய போது: அங்கு திமுகவினருக்கு மொழிபெயர்க்க முடியாது என்றும் திமுகவினர் இந்தி கற்க வேண்டும் என்றும் உங்களை பீகார் மாநில முதல்வர் அவமானப்படுத்திய போது பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் கற்று தந்ததை திடீரென்று மறந்துவிட்டீர்களா? விளம்பரத்திற்காக ஆட்சி நடத்தி ஸ்டிக்கர் ஒட்டும் பணியில் பொழுதை போக்கும் நீங்கள் இனியும் பொய்களை சொல்லி மக்களை ஏமாற்ற முடியாது.

மத்திய அரசு தமிழகத்திற்கு கடந்த 9 ஆண்டுகளில் என்ன செய்தது என்பதை வெள்ளை அறிக்கையாக தமிழக பாஜக கொடுத்துள்ளது. தமிழர்கள் செலுத்திய ஒரு ரூபாய் வரிக்கு பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இரண்டு ரூபாய் திருப்பி கொடுத்துள்ளது. அதை ஊழல் செய்யாமல் மக்களிடம் சென்று உங்களால் சேர்க்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை அதை தடுக்காதீர்கள். இவ்வாறு அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+