சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிமுக இணைப்பு- சசிகலாவின் முதல்வர் கனவுக்கு க்ரீன் சிக்னல் தருகிறதா பாஜக அரசு?

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுக அமமுக இணைப்பு பற்றி மக்களின் எண்ணம் இதுதான்

    காங்டாக்/சென்னை: ஊழல் வழக்கில் ஓராண்டு தன்டனை பெற்ற சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சாவின் தலைவரான பிரேம்சிங் தமாங்கை அம்மாநில முதல்வராக பதவியேற்க வைத்திருப்பது சர்ச்சையாகி உள்ளது. ஊழல் வழக்கில் தண்டனை அனுபவித்தவர்கள் முதல்வராக தடை ஏதும் இல்லை என்கிற புதிய முன்னுதாரணத்தை மத்திய பாஜக அரசு ' அரசியல் காரணங்களுக்காக' உருவாக்குகிறதா? என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

    சிக்கிம் மாநிலத்தில் 1996-ம் ஆண்டு கால்நடைத் துறை அமைச்சராக தமாங் பதவி வகித்த போது ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டார் என்பது வழக்கு. இவ்வழக்கில் ஓராண்டு காலம் சிறை தண்டனையையும் அனுபவித்தார் தமாங்.

    இவரது கிரந்திகாரி மோர்ச்சா, லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. லோக்சபா தேர்தலுடன் சிக்கிம் சட்டசபை தேர்தலும் நடைபெற்றது.

    ரூ.10000 கடனை திருப்பிகொடுக்காத அப்பா.. இரண்டரை வயது மகளை கொன்று உடலை துண்டு துண்டாக்கிய கொடூரர்கள்! ரூ.10000 கடனை திருப்பிகொடுக்காத அப்பா.. இரண்டரை வயது மகளை கொன்று உடலை துண்டு துண்டாக்கிய கொடூரர்கள்!

    முதல்வராக எதிர்ப்பு

    முதல்வராக எதிர்ப்பு

    இதனால் முதல்வர் வேட்பாளராக தமாங்கை அவரது கிராந்திகாரி மோர்ச்சா அறிவித்தது. ஆனால் எதிர்க்கட்சிகளோ, ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதால் தமாங், 2024-ம் ஆண்டு வரை தேர்தலில் போட்டியிட முடியாது; அப்படியான நிலையில் அவரை எப்படி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கலாம் என சர்ச்சைகள் வெடித்தன.

    தமாங் முதல்வராக பதவி ஏற்பு

    தமாங் முதல்வராக பதவி ஏற்பு

    இதனிடையே தேர்தலில் தமாங்கின் கிரந்திகாரி மோர்ச்சா வெற்றியை பெற்றது. 15 ஆண்டு காலம் முதல்வராக இருந்த சாம்லிங் சகாப்தம் முடிவுக்கு வந்தது. தற்போது தமாங்குக்கு முதல்வர் பதவி பிரமாணம் செய்து வைத்திருக்கிறார் அம்மாநில ஆளுநர். ஊழல் வழக்கில் தண்டனை அனுபவித்த ஒருவர் 6 ஆண்டுகாலம் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது சட்டம். ஆனால் தமாங் முதல்வராக்கப்பட்டிருக்கிறார். 6 மாதத்துக்குள் அவர் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக வேண்டும். இது சட்டப்படி எப்படி சாத்தியம்? என்கிற விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

    தமிழக ப்ளான்

    தமிழக ப்ளான்

    இன்னொரு பக்கம், இப்படியான ஒரு முன்னுதாரணத்தை பல்வேறு அரசியல் காரணங்களுக்காக மத்திய பாஜக அரசுதான் திணித்திருக்க வேண்டும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். உதாரணமாக தமிழகத்தில் அதிமுகவின் வாக்கு வங்கியை அப்படியே வளைத்து பாஜகவின் தாமரையை மலரச் செய்துவிட வேண்டும் என அக்கட்சி பகீரத முயற்சியை தொடருகிறது.

    சசிகலா, பாஜக நிலைப்பாடுகள்

    சசிகலா, பாஜக நிலைப்பாடுகள்

    ஆனால் அதிமுகவின் வாக்குகள் அதிமுக- அமமுக என பிளவுபட்டு இருப்பதால் வெற்றி சாத்தியமே இல்லை என்பதை லோக்சபா தேர்தல் முடிவுகள் காட்டிவிட்டன. இன்னொரு பக்கம், எப்படியாவது ஒருநாளேனும் முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்துவிட வேண்டும் என சிறையிலும் துடிக்கிறார் சசிகலா. பாஜகவுக்கு தேவை அதிமுக- அமமுக இணைப்பு; சசிகலாவுக்கு தேவை முதல்வர் நாற்காலி. சசிகலா முதல்வராக முட்டுக்கட்டையாக இருப்பது எம்.எல்.ஏக்கள் அல்ல.. ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர் முதல்வராக முடியாது என்பதுதான். அதைத்தான் பாஜக அரசு, சிக்கிமில் உடைத்து காட்டிவிட்டது.

    முதல்வராக சசிகலா

    முதல்வராக சசிகலா

    அதாவது சசிகலா, நன்னடத்தை விதிகளின் படி முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டால் அவரும் உடனடியாக முதல்வர் பதவி ஏற்க எந்த தடையும் இல்லை என்பதைத்தான் சிக்கிம் அரசியல் விளையாட்டு வெளிப்படுத்துகிறது. இதை சாதகமாக பயன்படுத்தி சசிகல வெளியே வரலாம்; அதிமுக அணிகள் இணையலாம்.. அப்புறம் சசிகலா எனும் நான்.... என்கிற உறுதிமொழியையும் கேட்கலாம் என சுட்டிக்காட்டுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

    English summary
    PM Modi lead BJP Govt has helped to the Convicted Politician became a CM in Sikkim.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X