மீண்டும் மோடி பிரதமரானால்...? தமிழ்நாட்டுக்கு என்ன நஷ்டம்?
சென்னை: கடந்த 10 ஆண்டு பாஜக ஆட்சியில் தமிழகம் சில அரசியல் ரீதியான இழப்புகளைச் சந்தித்துள்ளது. மேலும் நிதி பகிர்விலும் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. அவை என்ன? எப்படி?
இந்தியாவில் மொத்தம் 543 தொகுதிகள் உள்ளன. அதில் 400 இடங்களை இந்த முறை வென்றுவிட வேண்டும் என பாஜக திட்டமிட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு அப்படி எந்த இலக்கும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இருப்பதாகத் தெரியவில்லை.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தளவில் மோடிக்கு இணையாக ஒரு வலுவான தலைவர் இல்லாதது மிகப்பெரிய பின்னடைவாக உள்ளது. ராகுல் காந்தியைப் பொறுத்தவரை அவரைப் பாஜக ஒரு பப்புவாகத்தான் பார்க்கிறது.
அப்படித்தான் அவரது தந்தையை சந்திரசேகர் முதன்முதலாக பப்பு என்று அடைமொழி கொடுத்து அழைத்தார். அது அன்றைக்கு அரசியல் வட்டத்தில் ராஜீவ்காந்திக்கு மிகப்பெரிய அவமானமாக இருந்தது.
ஆனால், இந்திரா காந்தி மறைவுக்குப் பிறகு காங்கிரசுக்கு ஒரு கவர்ச்சியான தலைவர் தேவைப்பட்டார். உண்மையில் ராஜீவ்காந்திக்கு அரசியல் ஆசை இல்லை.
சஞ்சய் காந்தியே இந்திராவின் வாரிசாக வருவார் எனப் பலரும் நம்பிக் கொண்டிருந்த சமயத்தில், ராஜீவ்காந்தியை காலம் கொண்டு வந்து காங்கிரஸ் தலைமை பதவியில் உட்காரவைத்தது.

அன்று சந்திரசேகர் போன்ற சிலர் ராஜீவ்காந்தியை எதிர்த்தனர். ஆனால், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநில காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் ராஜீவ்காந்தியின் தலைமை புதிய உற்சாகத்தைக் கொடுத்தது.
ராஜீவ்காந்தி போல் இல்லை ராகுல் காந்தி. அவரை வலிமையான தலைவராக பாஜக கருதவில்லை என்பதைவிட, காங்கிரஸ் தலைவர்களே அவரை ஒரு தலைவராக இன்னும் ஏற்கவில்லை.
ஆனால், அவர் நிறைய யாத்திரைகளை நடத்திக் கொண்டிருக்கிறார். அதனால் பலன் உள்ளதா என்றால்? நிச்சயம் உள்ளது. அதை மட்டும் ராகுல் செய்யவில்லை என்றால் பல மாநிலங்களில் காங்கிரஸ் என்ற கட்சி இளம் தலைமுறை மத்தியில் காணாமல் போய் இருக்கும். இந்தப் பயணத்தால் காங்கிரஸ் மீண்டுள்ளதா என்பதைவிட, அது மேலும் சரியாமல் தடுத்துள்ளதா என்றே பார்க்க வேண்டி உள்ளது.
ராஜீவ் மறைவுக்குப் பிறகு அரசியலே வேண்டாம் என நிராகரித்துவிட்டுச் சென்றவர் சோனியா காந்தி. அதன் பின்னர் அமைதியாக அவர் தன் குடும்ப வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார்.

தன் குழந்தைகளை நல்ல தாயாக வளர்த்துக் கொண்டிருந்தார். அந்த இடைப்பட்ட காலத்தில் காங்கிரஸ் தன் கண்களைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பல மாநிலங்களில் மூடிக் கொண்டிருந்தது.
காங்கிரஸ் தலைமைப் பொறுப்புக்கு வந்த சீதாராம் யெச்சூரி, கட்சியை மீட்க முடியாமல் புதைய விட்டுக் கொண்டிருந்தால். இனிமேல் ஒரு அங்குலம் கீழே விழுந்தாலும் காங்கிரஸ் கட்சி மரணத்தைத் தழுவும் என்ற நிலையில் மீண்டும் காங்கிரஸ் தலைமைப் பொறுப்பை ஏற்றார் சோனியா.
அப்போது நாடு முழுவதும் பெரிய அலை வீசியது. சூறாவளி பயணம் செய்தார் சோனியா. கட்சி மீண்டு புத்துயிர் பெற்றது. ஆட்சி அமைக்கும் அளவுக்கு உச்சத்திற்குச் சென்றது.
அவர்தான் பிரதமர் என்ற நிலை வரும்போது 'இத்தாலி பெண் இந்தியாவை ஆள்வதா?' என்ற அதிரடியான முழக்கத்தை பாஜக உட்பட சில கட்சிகள் கையில் எடுத்தனர்.

அதற்கு ஆதரவாகத் தமிழ்நாட்டில் ஜெயலலிதா கூட ஓர் அணியில் நின்றார். சோனியாவின் அரியணைக் கனவு காலியானது. மன்மோகன் சிங் உள்ளே வந்தார்.
அதன் பின்னர் நடந்ததை உலகம் அறியும். 2ஜி அலைக்கற்றை மோசடி புகார் மூலம் நாடு பெரும் கொந்தளிப்பை அடைந்தது. இடையில் அன்னா ஹராரே உள்ள வந்தார். அனைத்து காங்கிரசுக்கு எதிராக அமைந்தனர்.
'இந்தியா ஒளிர்கிறது' என்ற கோஷத்தோடு ஒரு பக்கம் பாஜக வளர்ந்துவந்தது. அதன் புதிய முகமாக மோடி முன்வைக்கப்பட்டார்.
குஜராத்திற்கு வெளிச்சம் தந்த மாநில அரசியல்வாதியாக இருந்த மோடி, தேசிய அரசியலின் முகமாக முன்வைக்கப்பட்டார். அன்று தொடங்கி இன்றுவரை பாஜக மோடியின் முகத்தை முன்வைத்து ஒரு தேசிய அரசியலைச் செய்து வருகிறது.

அதற்கு முன்னதாக வாஜ்பாய் முகம் பாஜகவின் வளர்ச்சிக்கு உதவியது. ஆனால், அவர் முகம் முழு பெரும்பான்மையோடு கட்சியை வளர்க்கவில்லை. கூட்டணி உதவிகள் தேவைப்பட்டன. இன்று அந்த நிலையை பாஜக தாண்டி விட்டது.
மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வருவோம். மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், அதிக தொகுதிகளைக் கொண்டுள்ள மாநிலங்கள் தான். உத்தரப் பிரதேசத்தில் 80 தொகுதிகள் உள்ளன.
அடுத்து மகாராஷ்டிராவில் 48 . மேற்கு வங்கத்தில் 42. பீகாரில் 40 தொகுதிகள். அதற்கு அடுத்து தமிழ்நாடுதான். 39 தொகுதிகள் உள்ளன.
ஆனால் நம்மைவிடக் குறைவாக 26 இடங்களைக் கொண்டுள்ள குஜராத் தேசிய அரசியலில் ஒரு ரோல் செய்கிறது. அங்கிருந்து ஒரு பிரதமர் வருகிறார். தமிழ்நாட்டில் 40 சீட்டுகள் இருந்து தேசிய அரசியலில் தமிழ்நாடு ஒரு ரோல் செய்ய முடியவில்லை.

அதை சில முறை மு.கருணாநிதி உடைத்தார். நேரடியாக அல்ல; மறைமுகமாக. விபி சிங் ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு ஒரு அதிகாரம் இருந்தது. அதைப்போல் ஐ.கே.குஜரால், தேவே கவுடா, வாஜ்பாய் போன்றவர்களின் ஆட்சியில் மத்தியில் தமிழ்நாட்டுக்கு ஒரு ரோல் இருந்தது.
அந்த ரோல் கடந்த 10 ஆண்டுகளாக இல்லை. 38 சீட்டுகளை திமுக 2019இல் பெற்றிருந்தபோதும் தமிழ்நாடுத் தேசிய அரசியலில் ஒரு அதிகார கொண்ட சக்தியாக இருக்கவில்லை.
அதற்கு முன் 2014 மக்களவைத் தேர்தலில் அதிமுக 37 இடங்களைப் பெற்றது. அப்போது தேசிய அரசியலில் ஒரு அதிகார பகிர்வு தமிழ்நாட்டிற்குக் கிடைக்கவில்லை.
குஜராத் 26 தொகுதிகள்
ராஜஸ்தான் 25 தொகுதிகள்
மத்தியப் பிரதேசம் 29 தொகுதிகள்
சத்தீஸ்கர் 11 தொகுதிகள்
கோவா 2 தொகுதிகள்
உத்தரகண்ட் 5 தொகுதிகள்
இமாச்சல் பிரதேசம் 4 தொகுதிகள்
ஹரியானா 10 தொகுதிகள்
என 112 தொகுதிகளின் கள நிலவரம் பாஜகவுக்கு ஆதரவாக உள்ளது.

அதற்கு மாறாக பாஜக வலுவாக இல்லாத மாநிலங்கள் பட்டியல் :
தமிழ்நாடு 39 தொகுதிகள்
கேரளா 20 தொகுதிகள்
தெலங்கானா 17 தொகுதிகள்
ஆந்திரா 25 தொகுதிகள்
கர்நாடகா 28 தொகுதிகள்
மேற்கு வங்கம் 42 தொகுதிகள்
டெல்லி 7 தொகுதிகள்
ஒடிசா 21 தொகுதிகள்
பஞ்சாப் 17 தொகுதிகள்
என ஆக மொத்தம் 216 தொகுதிகளில் பாஜகவுக்குப் பெரிய பலம் இல்லை. ஆனாலும் அது காங்கிரசுக்குச் சாதகமாக இல்லை. இந்தியா கூட்டணிக்கும் சாதகமாக இல்லை. மாநிலக் கட்சிகளின் செல்வாக்கினால் இந்தத் தொகுதிகள் நிரம்பி உள்ளன.
ஆகவே, தேசிய அளவில் 'இந்தியா' கூட்டணி ஒற்றுமையைப் பற்றிப் பேசிவிட்டு, இந்த மாநில வரம்புக்குள் கூட்டணியில் உள்ள கட்சிகளே காங்கிரசுக்கு வேட்டு வைத்து வருகின்றன.

அதற்குக் காரணம், கூட்டணியைவிட, சொந்தக் கட்சியை வளர்க்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம். அது காங்கிரசுக்கு எதிராகவே உள்ளது. இதில் ஒரு ஆறுதல் என்னவென்றால் இந்தப் பட்டியலில் உள்ள மாநிலங்களின் ஆதரவை பாஜக பெற முடியாது.
கடந்த இரண்டு முறை இவ்வளவு இடங்களை வென்றும் தமிழ்நாடு, மத்திய அரசில் ஒரு அதிகாரத்தைப் பெறமுடியாமல் போனதற்கு பாஜகதான் காரணம். அது பலம் பொருந்திய கட்சியாக ஆட்சியில் அமர்ந்துவிட்டது.
ஆகவே, தமிழ்நாடு பெரிய பலனை அடையவில்லை. தொடர்ந்து 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் நிதி பகிர்வில் கூட தமிழ்நாடு பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஆகவே, மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெரிய நன்மையைத் தமிழ்நாடு பெறப்போவதில்லை.
காரணம், பாஜக கூட்டணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிமுகவும் இப்போது இல்லை. திமுகவைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். ஆக, அடுத்த 5 ஆண்டுகள் பாஜகவின் ஆட்சியில் பொருளாதாரரீதியாகத் தமிழகம் பின்னுக்குத் தள்ளப்படலாம்.
'இந்தியா' கூட்டணி மூலம் தமிழ்நாடு மத்தியில் அதிகார பலம்பெறலாம். ஆனால், அது கனவுபோல்தான் உள்ளது. ஏனென்றால் இந்தியா கூட்டணியில் வலுவான மாநிலக் கட்சிகள் உள்ளன.
ஆனால், வலுவாகக் காங்கிரஸ் இல்லை. பாஜக கூட்டணியில் வலுவான கட்சிகள் இல்லை. ஆனால், பாஜக வலுவாக உள்ளது. இந்த இரண்டையும் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

பாஜகவின் பலமாக உள்ள மாநிலங்கள் பட்டியல்:
மேற்கு வங்கத்தில் பெரிய கட்சியாக உள்ள திரிணாமுல் கோவா வரை வேட்பாளரை நிறுத்த திட்டமிடுகிறது. அடுத்து ஆம் ஆத்மி. டெல்லியை அடுத்து பஞ்சாப் வரை வளர்ந்துவிட்டது. அப்புறம் குஜராத்தில் கூட களம் கண்டார்கள். மேலும் சத்தீஸ்கர் வரை நீள்கிறது அதன் கரம். இங்கு எல்லாம் காங்கிரஸ் தன் செல்வாக்கை இழந்துள்ளது.
இதில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் ஆதரவை பாஜக பெற்றுவிடும். இப்போதைக்கு இவர்கள் மதில் மீது பூனையாக உள்ளனர்.
காரணம், ஜெகன்மோகனுக்கு எதிராக வழக்கு உள்ளது. அவரே இப்போது பிணையில்தான் உள்ளார். ஆக, இங்கு எல்லாம் இந்தியா கூட்டணிக்கு பாஜகவைவிட வாய்ப்பு அதிகம்.
உத்தரப் பிரதேசத்தில் 80 தொகுதிகள் உள்ளன. அதில் 73 தொகுதிகளை 2019இல் பாஜகதான் வென்றுள்ளது. இப்போது ராமர் கோயில் திறப்புக்குப் பிறகு சொல்லவே வேண்டாம். ஒரு காலத்தில் காங்கிரஸ் கோட்டையாக உபி இருந்துள்ளது. இன்று யோகி ஆதித்யநாத் அது தலைகீழாக மாறிவிட்டது.
குறிப்பாக உபியில் உள்ள ரேபரேலி காலங்காலமாகக் காங்கிரஸ் கோட்டை. அங்கே 1952இல் காங்கிரஸ் சார்பாக பெரோஸ் காந்தி நின்றார். 1967இல் இந்திரா நின்றார்.
அதன்பின் சோனியாவின் கொடி அங்கே இடைவிடாமல் பறக்கிறது. அன்று முதல் இன்று சோனியாவரை உபியை தங்களின் தாயகமாகவே கொண்டிருந்தனர். ஆனால், அது இன்று உடைக்கப்பட்டு விட்டது.
ஆக, வெறும் 'இந்தியா' கூட்டணி என்று பெயரளவில் மட்டும் காங்கிரஸ் மாநிலக் கட்சிகளை வளைத்துப் போட நினைத்தால் அது தோல்விதான். அதை உடைக்க மாநிலக் கட்சிகளிலிருந்து பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும். அதுகூட சுழற்சி முறையிலான பதவியாக இருக்கும்படி திட்டம் வகுக்க வேண்டும்.
இந்த சுழற்சி முறை பிரதமர் பதவியில் சில பின்னடைவுகள் வரலாம். ஆனால், அதைவிட்டால் காங்கிரசுக்கு இப்போதைக்கு வேறு வழி இல்லை.
அப்படி இல்லை என்றால், மோடியை வீழ்த்த இப்போதைக்குக் காங்கிரசால் முடியவே முடியாது.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்!












Click it and Unblock the Notifications