மேட் இன் சீனா.. இந்திய தேசிய கொடிக்கு சர்வதேச அவமானம்! மோடி அரசின் போலித்தனம் அம்பலம் - ஜோதிமணி
சென்னை: காமன்வெல்த் மாநாட்டில் பயன்படுத்தப்பட்ட இந்திய தேசிய கொடியில் மேட் இந்த சீனா லேபிள் ஒட்டி சர்வதேச அரங்கில் மோடி அரசு அவமானப்படுத்திவிட்டதாக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார்.
கனடாவில் உள்ள ஹாலிபாக்ஸ் நகரில் காமன்வெல்த் நாடுகளின் சபாநாயகர்களுக்கான 65வது மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் சபாநாயகர்கள் பங்கு கலந்துகொண்டு இருக்கின்றனர்.
இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சபாநாயகர்கள் பங்கேற்று உள்ளனர். இதில் தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவும் கலந்துகொண்டு இருக்கிறார்.

மேட் இன் சீனா
நேற்று கனடாவில் இந்த மாநாடு நடைபெற்ற வளாகத்திற்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் இந்திய மாநில சட்டப்பேரவை சபாநாயகர்கள் கையில் இந்தியாவின் மூவர்ண தேசியக் கொடியை ஏந்தியபடி பேரணியாக வந்தனர். இந்த நிலையில் அவர் வைத்திருந்த இந்திய தேசியக் கொடிகள் சீனாவில் தயாரிக்கப்பட்டதை குறிக்கும் வகையில் மேட் இன் சீனா என்ற டேக் ஒட்டப்பட்டு இருந்தது.

சபாநாயகர்கள் அதிர்ச்சி
மூவர்ண கொடியின் பச்சை துணியின் மூலம் மஞ்சள் நிற டேக்கில் 100% பாலிஸ்டர், மேட் இன் சீனா என்று குறிப்பிடப்பட்டு இருந்ததால் சர்ச்சை ஏற்பட்டது. இது தொடர்பாக விழாவில் கலந்துகொண்ட பல்வேறு மாநிலங்களின் சபாநாயகர்கள் கேள்வி எழுப்பினார்கள். 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய தேசியக் கொடிகளை பல வகை துணிகளில் வடிவமைக்கும் வகையில் மத்திய அரசு விதிகளை மாற்றிய நிலையில் இதில் பாலிஸ்டர் பயன்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

அப்பாவு கருத்து
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, "சீனாவில் இருந்து தேசியக் கொடியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் சிவகாசி, ஈரோடு, கரூர், நாமக்கல் பகுதிகளில் நிறைய பிரஸ்கள் இருக்கிறது. இரவில் ஆர்டர் கொடுத்தால் காலையில் 100 கோடி கொடிகளை கூட தயாரித்துக் கொடுக்க முடியும். ஆனால் இந்த நிலை ஏன் ஏற்பட்டது என்று தெரியவில்லை." என்றார்.

ஜோதிமணி
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, "இந்தியாவின் மூவர்ணக் கொடிக்கு மோடியின் அரசு சர்வதேச அரங்கில் அவமானத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கனடாவில் நடைபெற்ற காமன்வெல்த் சபாநாயகர்கள் மாநாட்டில் பயன்படுத்திய இந்திய தேசியக் கொடியில் மேட் இன் சீனா என்ற டேக் இடம்பெற்றதன் மூலம் விதிகளை மீறி இருக்கிறது. அதுமட்டுமின்றி மோடி அரசின் பாசாங்குத்தனம் இதில் அம்பலமாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications