கேட்கவே கஷ்டமா இருக்கு.. தாய் தற்கொலை.. இரவு முழுவதும் கால்களை பிடித்து கதறிய 3 வயது குழந்தை
ஹைதராபாத்: ஆந்திராவில் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியாமல், அவரது கால்களைப் பிடித்தபடி 3 வயது குழந்தை இரவு முழுவதும் கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விடிய விடிய அந்த குழந்தை, அம்மாவின் கால்களை பிடித்து கொண்டே அழுதுள்ளது.. மறுநாள் காலையில் வீட்டுக்குள் சென்ற போலீசார், தாயின் உடலுக்கு அருகே குழந்தை மயங்கிக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். என்ன நடந்தது ஆந்திராவில்?
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம், வெங்கடரமணா காலனியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆதோனியைச் சேர்ந்தவர் ஸ்வாதி.. 30 வயதாகிறது. ஹைதராபாத்தைச் சேர்ந்த கணேஷ் என்பவரை 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஸ்ரீயன் என்ற 3 வயது மகன் உள்ளார்.

ஹைதராபாத் ஸ்வாதி
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக, ஸ்வாதி கடந்த ஒரு வருடமாகவே கணவரைப் பிரிந்துள்ளனார்.. சொந்த ஊரில் வசித்து வரும் தன்னுடைய அம்மா கலாவதியுடன், அதே வீட்டில் சுவாதி வசித்து வந்துள்ளார்..
சம்பவம் நடந்த தினத்தன்று ஸ்வாதியின் அம்மா, வீட்டில் இல்லை. 2 நாட்களுக்கு முன்பேயே, தனது இளைய மகளைப் பார்ப்பதற்காக ஹைதராபாத் சென்றிருந்தாராம்.. அப்போது வீட்டில் குழந்தையுடன் தனியாக இருந்த ஸ்வாதி, இரவு 10 மணியளவில், படுக்கையறையில் ஃபேனில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்..
ஸ்டூலில் மயங்கி விழுந்த குழந்தை
ஆனால் அவர் உயிரிழந்தது தெரியாத குழந்தை, தூக்கில் தொங்கியபடி கிடந்த சுவாதியை எழுப்ப முயன்றுள்ளது. ஆனால் ஸ்வாதி எழுந்திருக்காததால், சுவாதியின் கால்களைப் பிடித்துக்கொண்டு குழந்தை கதறி அழுதுள்ளது. இரவு முழுவதும் அம்மாவின் உடலுக்கு அருகிலேயே அழுதபடி இருந்த குழந்தை, இறுதியில் சோர்வடைந்து பக்கத்திலிருந்த ஸ்டூலில் மயங்கி விழுந்துள்ளது.
மறுநாள் காலையில் நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், கதவை உடைத்து வீட்டுக்குள் சென்றனர்.
தாயின் கால்களை பிடித்தபடி..
அப்போது படுக்கையறையில் ஸ்வாதி ஃபேனில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். தற்கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஸ்டூலில் குழந்தை ஸ்ரீயன் சுயநினைவின்றி கிடந்துள்ளது. முதலில் குழந்தையும் உயிரிழந்துவிட்டதாக போலீசார் நினைத்துள்ளனர். பிறகு குழந்தையை தட்டியெழுப்பியபோது அது அழத் தொடங்கியுள்ளது. இதையடுத்தே குழந்தை உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது. தாயின் கால்களை பிடித்தபடி இரவு முழுவதும் அழுததால் குழந்தை சோர்வடைந்து மயங்கி விழுந்திப்பதும் தெரியவந்தது.
என்னதான் காரணம்?
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து, ஸ்வாதியின் அம்மா கலாவதி கர்னூலுக்கு கதறியடித்து கொண்டே வந்தார்.. அவரிடம் போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர்.. தனது மகள் சுவாதி, கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்ததால் ஏற்பட்ட தனிமையை தாங்க முடியாமல் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கலாவதி போலீசாரிடம் புகார் அளித்தார்..
கலாவதி தந்த புகாரின் அடிப்படையில் கர்னூல் இரண்டாவது நகர காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்வாதியின் மரணத்துக்கான காரணம் குறித்தும், ஆதாரங்களைச் சேகரித்தும், பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. நெஞ்சை உருக்கும் இந்த சம்பவம் ஆந்திராவில் சோகத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது..!!


Click it and Unblock the Notifications
