இலையை மறைத்த தாமரை! எடப்பாடி பின்னால் போட்டோவை பாருங்க.. முதல் மீட்டிங்கிலேயே ஷாக் கொடுத்த பாஜக
சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி பேசுவது போல் இல்லாமல் பாஜக கூட்டத்தில் எடப்பாடி பேசுவது போன்று எண்ணத்தோன்றும் வகையில் மேடை விஷயத்தில் கூட சைலண்டாக தன் வேலை செய்து இருக்கிறது பாஜக.
தாமரை முன்பு எடப்பாடி பேசியது போலவே அவர் பேச்சுக்கள் இருந்தன. அந்த அளவுக்கு பாஜக மேடையில் கூட கவனம் செலுத்தி வேலை செய்துள்ளது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக தலைமை என்று சொல்லப்பட்டாலும், பாஜகவின் கையே ஓங்கியிருந்ததை மேடையிலேயே காண முடிந்தது. பிரதமர் மோடி தனது உரையில் அதிமுக என்ற பெயரை கூட உச்சரிக்காததும், எடப்பாடி பழனிசாமி பெயரை முதல்வர் வேட்பாளராக முன்மொழியாததும் ர.ரக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுராந்தகம் கூட்டம்
தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. திமுகவில் கூட்டணி வலுவாக உள்ள நிலையில், பாஜகவுடன் கோர்த்துள்ள அதிமுக வலுவான கூட்டணி அமைக்கப்படும் என்று தொடக்கத்தில் இருந்தே கூறி வந்தது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அதிமுக - பாஜக கூட்டணி சேர்ந்தது. இதையடுத்து இந்த கூட்டணியில் மற்ற கட்சிகளை சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் கூட்டணியை ஒருங்கிணைக்க மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் 3 பேர் குழுவை பாஜக அமைத்தது. இந்த குழுவினர் பாமக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன் பலனாக அந்த கட்சிகள் அனைத்தும் பாஜக - அதிமுக உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றன. இதையடுத்து தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பலத்தை காட்ட, கூட்டணி தலைவர்களை ஒரே மேடையில் பங்கேற்க செய்வதற்கும், அதில் பிரதமர் மோடி பங்கேற்கும் வகையில் பிரமாண்ட பிரசார கூட்டத்திற்கு தமிழக பாஜக ஏற்பாடு செய்தது.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் இல்லை
அதன்படி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கலந்து கொள்ள கூட்டணி கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் ஏராளமானோர் காலை முதலே அங்கு திரண்டனர். மேடையில் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, டி.டி.வி. தினகரன், ஜி.கே. வாசன் உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் இருந்தனர்.
பொதுக்கூட்ட மேடையில் பிரதமர் மோடி மற்றும் எடப்பாடி பழனிசாமி படம் பெரிய அளவில் வைக்கப்பட்டு இருந்தது. கூட்டணி கட்சி தலைவர்களின் படங்கள் சிறிய அளவில் இருந்தன. ஆனால் இதனை தாண்டி மாநாட்டு திடல் முழுக்க பாஜக கொடிகளே அதிகம் ஆக்கிரமிக்கவும் செய்தன. அதிமுக கூட்டத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படம் இன்றி இருக்கவே இருக்காது. ஆனால் நேற்று அதிமுகதான் தமிழ்நாட்டின் கூட்டணிக்கு தலைமை என்று சொன்னாலும் கூட அதிமுகவின் அடையாளமாக எடப்பாடியை போட்டோவை தவிர வேறு எந்த இடத்திலும் இரட்டை இலையும் இல்லை.
தாமரை முன் நின்று பேசிய எடப்பாடி
அதேபோல, கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் பேசுவதற்கு பின்பக்கம் தாமரை சின்னமே இடம் பெற்று இருந்தது. எடப்பாடி பழனிசாமியும் கூட தாமரைக்கு முன்னால் நின்று பேசியது போலவே இருந்தது. பாஜகவின் குரலில் எடப்பாடி பேசும் தோற்றத்தை தந்தது. அந்த அளவுக்கு பாஜக இறங்கி வேலை செய்துள்ளதாகவே தெரிந்தது.
எடப்பாடி மட்டும் இன்றி மேடையில் உரையாற்றிய அன்புமணி, டிடிவி தினகரன், ஜிகே வாசன் என கூட்டணி தலைவர்கள் அனைவருமே தாமரை அடையாளத்துடன் பேசுவதை போல ஒரு பிம்பத்தை பாஜக உருவாக்கியிருந்தது. இதையெல்லாம் திட்டமிட்டே பாஜக செய்ததாக அரசியல் நோக்கர்கள் கூறுகிறாகள்.

இதுதான் அப்படி என்றால், பிரதமர் மோடியின் பேச்சு அதிமுகவினரை மேலும் அதிர்ச்சி அடைய வைப்பதாக இருந்தது. எடப்பாடி பேசும் போது, 210 இடங்களில் வென்று அதிமுக ஆட்சி அமைக்கும் என்று கூறினார். அதேநேரத்தில், பிரதமர் மோடியோ ஒரு இடத்தில் கூட அதிமுக என்ற வார்த்தையை உச்சரிக்கவில்லை.
குமுறும் ரத்தத்தின் ரத்தங்கள்..
ஏற்கனவே, கூட்டணி ஆட்சி என அமித்ஷா பேசியது அரசியல் வட்டாரத்தில் விவாதப்பொருளான நிலையில் பிரதமர் மோடியின் பேச்சும் அதை பிரதிபலிப்பதாகவே இருந்தது. தமிழகத்தில் அதிமுகதான் கூட்டணிக்கு தலைமை என்று சொன்னாலும் பெரியண்ணன் போல பாஜக செயல்படுவதையே இது காட்டுவதாக குமுறும் ரத்தத்தின் ரத்தங்கள்..
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படம் இல்லாததை பார்த்தும் வேதனை அடைந்துள்ளனர். முதல் கூட்டமே இப்படி என்றால் இன்னும் என்னவெல்லாம் பார்க்க வேண்டியிருக்கோ என கூட்டத்தில் பங்கேற்ற அதிமுகவினரும் முனுமுனுத்துக்கொண்டே சென்றதையும் பார்க்க முடிந்தது.
-
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
அதிமுக தொகுதி பங்கீடு எல்லாம் ஓகேதான்! ஆனா.. ஜி.கே.வாசன் மிஸ்ஸிங்! கவனிச்சிங்களா! -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல்












Click it and Unblock the Notifications