எனக்கு ஓகேதான்.. ஆனா.. பார்த்து பேச சொல்லுங்க.. ரஞ்சித் vs மோகன்ஜி.. உச்சமெடுக்கும் மோதல்!
சென்னை: சென்னையில் எங்களை மீறி நீங்கள் எதுவும் செய்ய முடியாது. சென்னையில் மட்டும் 40% தலித் மக்கள் உள்ளனர்; மெட்ராஸை எங்களை மீறி யாரும் ஆட்சி செய்ய முடியாது என்று இயக்குனர் பா. ரஞ்சித் குறிப்பிட்டதற்கு, இயக்குனர் மோகன்ஜி பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டு உள்ளார். இந்த விவாகரத்திற்கு இயக்குனர் பா. ரஞ்சித் கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார். அதில், கோழைத்தனமான கொடூர படுகொலைக்கு ஆளான பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் திருவுடலை, சலசலப்பு பதற்றம் ஏதுமின்றி சட்டம் ஒழுங்கு பிரச்சனை நிகழாமல் நல்லடக்கம் செய்து விட்டோம். அண்ணன் இல்லாத, அவருக்குப் பிறகான இந்த வாழ்க்கையை அவர் கொண்ட கொள்கையான பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் அரசியலை இன்னும் தீரத்துடனும் உறுதியுடனும் களமாடுவோம். அதுவே அண்ணன் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக அமையும். ஜெய்பீம், என்று கூறியுள்ளார்.

இதற்கு எதிராக சென்னையில் அவர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில், ஆம்ஸ்ட்ராங்கிற்காக காசு கொடுத்து கூட்டத்தை கூட்ட முடியாது; திமுக மீது குற்றம் சுமத்துவதற்காக இந்த பேரணி நடைபெறுவதாக சமூக வலைத்தளங்களில் எழுதுகின்றனர் அரசு அதிகாரிகள், காவல்துறையினர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதை உணர வேண்டும்.
இந்த படுகொலையை செய்த உண்மையான குற்றவாளிகளை கைது செய்யும் வரை நாங்கள் ஓய மாட்டோம்; காவல்துறை விசாரணையை நாங்கள் நம்புகிறோம் ஆம்ஸ்ட்ராங் கொலையில் பல்வேறு சூழ்ச்சிகள் உள்ளது; சென்னையில் எங்களை மீறி நீங்கள் எதுவும் செய்ய முடியாது. சென்னையில் மட்டும் 40% தலித் மக்கள் உள்ளனர்; மெட்ராஸை எங்களை மீறி யாரும் ஆட்சி செய்ய முடியாது,

இந்த படுகொலையை எளிதாக கடந்து விடலாம் என நீங்கள் நினைக்காதீர்கள் இது ஒரு எச்சரிக்கை., என்று பா. ரஞ்சித் குறிப்பிட்டு உள்ளார்.
இதற்கு இயக்குனர் மோகன்ஜி பெயரை குறிப்பிடாமல் பதிலடி கொடுத்துள்ளார். அதில், என்னங்கடா இது. சினிமால வர்ற டயலாக் எல்லாம் மேடையில பேசுறீங்க.. எப்ப பார்த்தாலும் ரவுடி நாங்க தான், பத்து கேஸ் வாங்க போறது நாங்க தான், மெட்ராஸ் நாங்க தான்னு கூவுறீங்க.. நாங்க எல்லாம் யாருதான்டா அப்ப சென்னையில.. அடுத்தவன் வரலாற சினிமால மாத்தி சொன்னது பத்தாதுன்னு இப்ப மேடையில வேற
இதற்கு பதில் அளித்த நெட்டிசன் ஒருவர், அண்ணே சென்னை வந்து வன்னியர் பறையர் தான் பூர்விக குடிகள் இரண்டு சமூக மக்களின் ஒற்றுமை குறித்து பேசுங்க இனிமே இரண்டு சமூக மக்களும் ஒன்று சேர்ந்து சென்னையே ஆளட்டும் திராவிட கட்சிகளை எதிர்த்து பேசுங்க நீங்க அந்த சமூக மக்களை அரவணைத்து செல்லுங்கள்
இதற்கு இயக்குனர் மோகன் ஜி அளித்துள்ள பதிலில், சகோதரா.. அனைத்து சமூகங்களின் உழைப்பால் உருவானது தான் சென்னை.. தன்னை மட்டும் பெருமையாகவும், அடுத்தவர்களை குறைத்து மதிப்பீட்டு செய்ததால் இந்த பதிவே தவிர அவர்கள் கோரிக்கை மற்றும் அவர்களின் ஆதங்கத்தில் உளமாற நானும் பங்கேற்கிறேன். பார்த்து பேச சொல்லுங்க.., என்று குறிப்பிட்டுள்ளார்.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம்












Click it and Unblock the Notifications