நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது - மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: நடிகர் மோகன்லால் திரைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வரும் 23 ஆம் தேதி நடைபெறும் 71வது தேசிய விருதுகள் விழாவில், அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
மலையாள சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் மோகன்லால். 1980 ஆம் ஆண்டு திரைத்துறையில் அறிமுகமான மோகன்லால் இன்று வரை தொடர்ச்சியாக இயங்கி வருகிறார். இந்திய திரைத்துறையில் ஒரே வருடத்தில் 34 படங்களை ரிலீஸ் செய்து அசத்தியவர் மோகன்லால். கடந்த 1986-ம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் 34 படங்கள் வெளியாகின. அதில் 25 படங்கள் பாக்ஸ் ஆஃபீஸில் வசூல் குவித்தன.

1980 ஆம் ஆண்டு ஃபாசில் இயக்கத்தில் வெளியான 'மஞ்சில் விரிஞ்ச பூக்கள்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் மோகன்லால். இதுவரை 400க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் ஹிருதயபூர்வம் படத்தில் நடித்திருந்தார். சத்யன் அந்திக்காடு இயக்கிய இப்படத்தில் இவருடன் மாளவிகா மோகனன், சங்கீத் பிரதாப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தையடுத்து, விருஷபா படத்தில் நடித்துள்ளார் மோகன்லால். நந்தா கிஷோர் இயக்கி இருக்கும் இப்படம் அடுத்த மாதம் 16 ஆம் தேதி திரைக்கு வருகிறது. நடிகர் மோகன்லால் இத்தனை ஆண்டுகாலம் நிலைத்த நட்சத்திர அந்தஸ்து கொண்ட நடிகராக இருந்து வரும் நிலையில் அவருக்கு மத்திய அரசு, தாதாசாகேப் பால்கே விருது அறிவித்துள்ளது.
இது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் வெளியிட்ட உள்ள அறிவிப்பில், "தாதாசாகேப் பால்கே விருது தேர்வுக் குழுவின் பரிந்துரையின் பேரில், மோகன்லாலுக்கு 2023 ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது. மோகன்லாலின் குறிப்பிடத்தக்க சினிமா பயணம் வருங்கால தலைமுறையினரை ஊக்குவிக்கும்.
இந்திய சினிமாவுக்கு மோகன்லால் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக கவுரவிக்கப்படுகிறார். இந்த விருது வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி நடைபெறும் 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் வழங்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications