"பெரும் பாரபட்சம்".. மனுவில் பாயிண்டை பிடித்த எடப்பாடி.. திங்கள் கிழமையே பொதுக்குழு வழக்கு விசாரணை
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கு மேல்முறையீடு மனு மீதான விசாரணை திங்கள் கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடக்க உள்ளது.
Recommended Video
கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு சென்னை வானகரத்தில் நடைபெற்றது. ஆனால் இந்த பொதுக்குழு விதிகளை மீறி நடப்பதாக ஓ பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து இன்றி இந்த பொதுக்குழு நடப்பதாக ஓ பன்னீர்செல்வம் தெரிவித்தார். ஓ பன்னீர்செல்வம் இந்த பொதுக்குழுவை ஏற்றுக்கொள்ளாத நிலையில் இதற்கு எதிராக வழக்கு தொடுத்தார்.
உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று.. வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு கடந்த வாரம் விசாரிக்கப்பட்டது.

தீர்ப்பு
இந்த நிலையில் இந்த வழக்கில் கடந்த 17ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிமன்ற ஜெயசந்திரன் வழக்கில் தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில் ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. ஜூன் 23ம் தேதிக்கு முன் இருந்த நிலை தொடர வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது ஜூலை 23ம் தேதி நடந்த பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும் , அடுத்த பொதுக்குழு செல்லாது என்று அறிவித்தார்.

பொதுக்குழு வழக்கு
இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு வழக்கு மேல்முறையீடு மனு மீதான விசாரணை திங்கள் கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடக்க உள்ளது. தனி நீதிபதி தீர்ப்பிற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்த மனுக்கள் இரட்டை நீதிபதி அமர்வில் வழக்கு திங்கள் கிழமை விசாரணைக்கு வருகிறது. நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் முருகன் ஆகியோர் வழக்கை விசாரிக்கின்றனர். திங்கள் கிழமை காலை முதல் வழக்காக இந்த வழக்கு விசாரணை செய்யப்பட உள்ளது.

மேல்முறையீடு
இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி முக்கியமான சில கோரிக்கைகளை வைத்து இருக்கிறார். முதல் கோரிக்கை இந்த வழக்கில் மறுவிசாரணை. பொதுக்குழு செல்லாது என்று அறிவித்ததற்கு எதிராக மறுவிசாரணை நடத்த வேண்டும். இது போக மேலும் சில கோரிக்கைகளை எடப்பாடி பழனிசாமி தனது மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார். அதன்படி தனி நீதிபதி கொடுத்த உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கோரிக்கைகள்
பொதுக்குழு வழக்கில் அவரின் தீர்ப்பு தனக்கு எதிரானது. அவரின் தீர்ப்பு அமலுக்கு வந்தால் அது பாரபட்சமாக இருக்கும். அதிமுக பொதுக்குழு முடிவிற்கு எதிராக அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த தீர்ப்பு எந்த இடத்திலும் ஓ பன்னீர்செல்வத்திற்கு பாரபட்சமாக இல்லை. ஆனால் எடப்பாடிக்கு மட்டும் பாரபட்சமாக இருக்கிறது. எனவே தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும். அதன்பின் எங்கள் மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications