சிக்கிடுச்சு.. ஸ்டிராங் ஆதாரம்.. உதயநிதியை தோற்கடிக்க களம் இறங்கியது யார்?.. பரபர வீடியோ
உதயநிதியை தோற்கடிக்க பண பட்டுவாடா நடந்துள்ளதாக கூறப்படுகிறது
சென்னை: உதயநிதிக்கு எதிராக இப்போதே சிலர் தயாராகிவிட்டதாக தெரிகிறது.. சேப்பாக்கத்தில் அவரை தோற்கடிக்க பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளதுடன், அது சம்பந்தமான வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Recommended Video

இந்த முறை தேர்தலில் அதிமுக, திமுகவும் சம பலத்தில் இறங்கி உள்ளன.. இதில் இரு கட்சிகளுமே கூட்டணி விஷயத்தில் உடனடி முடிவு எடுக்காமல் பொறுமையாக அலசி ஆராய்ந்து கூட்டணி, சீட்டுகளை ஒதுக்கியது.
அந்த வகையில், திமுக சார்பில் வேட்பாளர்கள் சுறுசுறுப்பாக களத்தில் இறங்கி வருகின்றனர்.. ஆங்காங்கே தொகுதிகளுக்குள் உள்ளடி வேலைகளிலும் சில கட்சிகள் இறங்கி உள்ளன.. அதேபோல பணப்பட்டுவாடாவும் பரவலாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.

தொகுதி
எனினும், திமுக, அதிமுக இரண்டுமே ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.. இதில் திமுகவில், இந்த முறை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் முதலில், ஸ்டாலின் தொகுதி என்று சொல்லப்படும் ஆயிரம் விளக்கு தொகுதியில்தான் நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது..

பாஜக
இதற்காகத்தான் கு.க. செல்வம் அந்த கட்சியில் இருந்தே விலகி பாஜகவுக்கு சென்றார்.. ஆனால், திமுகவின் இன்னொரு கோட்டையான சேப்பாக்கத்தில் உதயநிதி களம் இறங்கி உள்ளார். உதயநிதி தன்னுடைய பிரச்சாரத்தில் சும்மாவே பட்டைய கிளப்புவார்.. இப்போது வேட்பாளராகவே முதல்முறையாக களமிறங்கி உள்ளதால், சேப்பாக்கத்தையே தெறிக்க விட்டு வருகிறார்.. தொகுதிக்குள் செல்லும் இடமெல்லாம் ஆதரவும் பெருகி வருகிறது..

மெஜாரிட்டி
அதனால்தான், உதயநிதியின் வாக்கு வங்கியைக் குறைக்க ஒருசிலர் எதிரான நடவடிக்கையில் இறங்கி உள்ளதாக தெரிகிறது. உதயநிதி மெஜாரிட்டியை பெற்றுவிடக்கூடாது என்று, வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடாவும் தொகுதிக்குள் நடந்துள்ளது.. இதை யார் செய்தது என்று தெரியவில்லை.. ஆனால், பணம் வழங்கும் வீடியோ காட்சி மட்டும் வெளியாகி பரபரப்பை தந்து வருகிறது..

கன்பார்ம்
தொகுதியில் ஒரு வீட்டில், பெண்களுக்கு அச்சடிக்கப்பட்ட துண்டுப் பிரசுரத்துடன், 500 ரூபாய் நோட்டுகள் வழங்குவது அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.. மேலும் சம்பந்தப்பட்ட பெண்கள் எல்லாம், சேப்பாக்கத்தை சேர்ந்தவர்கள்தானா என்று கன்பார்ம் செய்து கொண்ட பிறகே, பணம் விநியோகிக்கப்படுகிறது. இதுதான் இணையத்தில் படுவைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications