சென்னை மெட்ரோ பார்க்கிங்கில் மேஜர் மாற்றம்.. இனி மாதாந்திர பாஸ்கள் கிடையாது! பயணிகளே நோட் பண்ணுங்க
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் மாதாந்திர பார்க்கிங் பாஸ் வழங்குவது பிப்ரவரி 1 முதல் நிறுத்தம் செய்யப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. வாகனம் நிறுத்துவதற்காக ஏற்கனவே வாங்கப்பட்ட மாதாந்திர
பார்க்கிங் பாஸ்கள் அவற்றின் செல்லுபடியாகும் காலம் முடியும் வரை அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் காணப்படும் போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் பயணிகளுக்கு பெரும் வரப்பிரசாதம் போல அமைந்து இருப்பது மெட்ரோ ரயில்கள்தான். சாலை வழி பயணம் என்றால், சென்னையில் பீக் நேரங்களில் திட்டமிட்டபடி எங்கும் செல்ல முடியாது. அந்த அளவுக்கு போக்குவரத்து நெரிசல் காணப்படும். அதேவேளையில்
மெட்ரோ ரயில்களில் துல்லியமாக நினைத்த இடத்திற்கு செல்ல முடியும்.

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை
இதனால், தற்போது சென்னையில் மெட்ரோ ரயில்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மெட்ரோ ரயில்களை பொறுத்தவரை பயணிகள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி உள்ளது. பயணிகள் தங்கள் கார்கள் மற்றும் பைக்குகளை கட்டணம் செலுத்தி மெட்ரோ பார்க்கிங்கில் நிறுத்திக் கொள்ளலாம்.
தற்போது மாதாந்திர பாஸ் அடிப்படையிலும் பார்க்கிங்கிற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த நிலையிலதான் வரும் 1 ஆம் தேதி முதல் மெட்ரோவில் மாதாந்திர பார்க்கிங் பாஸ்கள் நிறுத்தப்படுவதாக மெட்ரோ அறிவித்துள்ளது.
முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வாகனம் நிறுத்தும் இடங்கள் இனி பயன்படுத்தப்படும் எனவும் ஏற்கனவே வாங்கப்பட்ட மாதாந்திர பார்க்கிங் பாஸ்கள் அவற்றின் செல்லுபடியாகும் காலம் முடியும் வரை அனுமதிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்
ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மெட்ரோ நிர்வாகம் விளக்கம்
மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்தும் இடங்களுக்கான (பார்க்கிங்) தேவை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் 01.02.2025 முதல் வாகனம் நிறுத்தத்திற்கான மாதாந்திர பார்க்கிங் பாஸ்கள் வழங்குவதை நிறுத்த முடிவு செய்து இருக்கிறது. இதன்படி, அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வாகனம் நிறுத்தும் இடங்கள் இனி பயன்படுத்தப்படும்.
பயணிகள் தங்களது கார்கள் மற்றும் பைக்குகளை நிறுத்த இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளவும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு தங்கள் ஆதரவைத் தொடரவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஜனவரி 2025-ல் வாகனம் நிறுத்துவதற்காக ஏற்கனவே வாங்கப்பட்ட மாதாந்திர பார்க்கிங் பாஸ்கள் அவற்றின் செல்லுபடியாகும் காலம் முடியும் வரை அனுமதிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications