திமுகவின் 2 சிட்டிங் அமைச்சர்கள்! விரைவில் தவெகவில் இணைகிறார்கள்! வெளிப்படையாக அறிவித்த ஆதவ் அர்ஜுனா
சென்னை: திமுகவில் இருந்து இரண்டு 2 அமைச்சர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய போவதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மட்டுமல்ல.. திமுகவில் இருந்து இரண்டு அமைச்சர்கள் எங்கள் பக்கம் வருவார்கள். மக்கள் சக்தி எங்கே இருக்கிறதோ அங்கே அமைச்சர்கள் வருவார்கள், அரசியல்வாதிகள் வருவார்கள்.
திமுகவில் உள்ள சிட்டிங் அமைச்சர்கள் வருவார்கள். பிப்ரவரி மாதம் இது நடக்கும். நீங்கள் பார்த்துக்கொண்டே இருங்கள் என்று ஆதவ் அர்ஜுனா தந்தி டிவி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டு உள்ளார்.

செங்கோட்டையன்
அதிமுகவில் இருந்த செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில் அவர் தற்போது விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன் இணைந்துள்ளார். கடந்த வாரம் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில் அவர் தவெகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் செங்கோட்டையன் இந்த முடிவை எடுத்துள்ளார்.
இது டீசர்தான்
அதிமுக தரப்பில் விசாரித்ததில் இது வெறும் டீசர்தான் என்கிறார்கள். மெயின் பிக்சர் இனிதான் என்கிறார்கள். அதாவது கொங்கு மண்டலத்தில் இருந்து இன்னொரு தலைவர், சென்னையில் இருந்து ஒருவர், டெல்டாவில் இருந்து இருவர் என்று இன்னும் 4 தலைகள் விரைவில் தவெகவிற்கு தாவ போகிறார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த அதிமுக தலைகளிடம் செங்கோட்டையன்தான் பேசி வருகிறாராம். சிட்டி டிஸ்மாண்டில் என்று ரஜினி சொன்னதும் ரோபோ சிட்டி உடல் பாகங்களை அகற்றுவது போல.. அதிமுகவின் பாகங்களை செங்கோட்டையன் ஒவ்வொன்றாக அகற்றி தவெகவிற்கு கொண்டு வரப்போகிறார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அடுத்த சில நாட்களில் இதனால் சுடசுட.. பல அரசியல் திருப்பங்கள் நடக்கலாம் எனப்படுகிறது.
டெல்டா தலைவர்
அதேபோல் டெல்டா மண்டலத்தை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் விரைவில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல் வருகிறது.
அரசியல் கட்சியில் தற்போது எந்தப் பதவியிலும் இல்லாத ஒரு மூத்த தலைவர், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) விரைவில் இணையவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தமிழக அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த முடிவு எட்டப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த இணைப்புப் பேச்சுவார்த்தையில், அரசியல் வியூக நிபுணர்களும், வணிக இடைத்தரகர்களும் முக்கியப் பங்காற்றியுள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் பிரதிநிதிகளுடன் அந்தத் தலைவரின் குழு நடத்திய பேச்சுவார்த்தையில், அதிகாரப் பகிர்வு, தேர்தல் வியூகங்கள் மற்றும் தமிழகத்திற்கான TVK-ன் நீண்டகால இலக்குகள் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கும் நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த இணைப்பு, TVK ஒரு வலுவான போட்டியாளராக உருவெடுக்கும் என்பதற்கான ஓர் அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. இந்த இணைப்பு நடந்தால், அது சில கட்சிகளுக்குள் பிளவுகளை உருவாக்கலாம் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகம் ஒரு புதிய பாதையை வழங்குவதாகவும், தங்களது அனுபவத்திற்கு மதிப்பு கிடைக்கும் புதிய அரசியல் களத்தை வழங்குவதாகவும் இந்த தலைவர்கள் பலர் உணர்கின்றனர். அரசியல் ஆய்வாளர்கள், தமிழக வெற்றிக் கழகத்தை நாடும் தலைவர்களின் இந்த போக்கு நீண்ட காலமாகவே திட்டமிடப்பட்டு அதற்காக காய் நகர்த்தப்பட்டு வருவதாகக் குறிப்பிடுகின்றனர்.












Click it and Unblock the Notifications